தமிழர் பெருமை

 

தமிழர் பெருமை

********************************

 கணக்கதிகார அளவுகள்

 தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா? அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்.

எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!!
இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது !!!!!!!!
இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கால்குலேடரையும் தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் !

பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்திவந்த கால அளவுகள் இத்தனை துல்லியமானவையா !!! நம்மை வியப்பில் ஆழ்த்தும் கணக்கதிகார செய்யுள்கள்…

நிமைநோடி மாத்திரை நேர்முற் றிதனை
இணைகுரு பற்றும உயிரென்றார் – அனையஉயிர்
ஆறுசணி கம்மீரா றாகும்விநாடி தான்
ஆறுபத்தே நாழிகை யாம். 

விளக்கம் : 2 கண்ணிமை = 1 கைந்நொடி 2 கைந்நொடி = 1 மாத்திரை 2 மாத்திரை = 1 குரு 2 குரு = 1 உயிர் 6 உயிர் = 1 கஷணிகம் 12 கஷணிகம் = 1 விநாடி 60 விநாடி = 1 நாழிகை
இத்தோடு இல்லாமல், பொழுது, நாள், வாரம், மாதம் என நீண்டுகொண்டே செல்கிறது. மேலும் கால அளவுகளை விவரிக்கும் கணக்கதிகார பாடல் பின்வருமாறு.

நாழிகை ஏழரை நற்சாமந் தானாலாம்
போழ்தாகுங் காணாய் பொழுதிரண்டாய்த் – தோழி
தினமாகி முப்பது திங்களாய்ச் சேர்ந்த
தினமான தீரா றாண்டே

விளக்கம் : 60 விநாடி = 1 நாழிகை 2½ நாழிகை = 1 ஓரை 3¾ நாழிகை = 1 முகூர்த்தம் 7½ நாழிகை = 1 சாமம் 4 சாமம் = 1 பொழுது 2 பொழுது = 1 நாள் 7 நாள் = 1 கிழமை 15 நாள் = 1 பக்கம் 30 நாள் = 1 திங்கள் 6 திங்கள் = 1 அயனம் 2 அயனம் = 1 ஆண்டு
இத்தனை இனிமையான காலப் பகுப்புகளா ?! இவற்றை ஏன் நாம் நம் வட்டார வழக்கிலிருந்து தொலைத்து வருகிறோம் ??

 • மாதம் இருமுறை (அ) 15 நாட்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக பக்கம் தோறும் என்று பயன்படுத்தலாமே !
 • ஆண்டிற்கு இருமுறை (அ) 6 மாதங்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாகஅயனம் தோறும் என்று பேசலாமே !!

தமிழ் – ஆங்கில கால அளவுகள் ஓர் ஒப்பீடு :
நம் தமிழ் கால அளவுகள் எத்தனை துல்லியமானவை என்ற புரிந்துகொள்ள, தற்பொழுது நாம் பயன்படுத்தும் கால அளவுகளை கணக்கதிகாரம் சொல்லும் தமிழ் கால அளவுகளோடு ஒப்பிட்டு பார்ப்போம் !!
8 சாமம் = 1 DAY 2.5 நாழிகை = 1 HOUR 1 நாழிகை = 0.4 HOUR 2.5 விநாடி = 1 MINUTE 1 விநாடி = 0.4 MINUTE 1 விநாடி = 24 SECONDS 1 கஷணிகம் = 2 SECONDS 1 உயிர் = 0.3333333333333333 SECOND 1 குரு = 0.1666666666666667 SECOND 1 மாத்திரை = 0.0833333333333333 SECOND 1 கைந்நொடி = 0.0416666666666667 SECOND   =   41.66 MILLISECONDS 1 கண்ணிமை = 0.0208333333333333 SECOND   =   20.83 MILLISECONDS
இத்தனை எளிமையான நம் தமிழ் கால அளவுகள் இபோழுது எங்கே ?
நாம் சிறுக சிறுக தொலைத்துவருவது நம் கால அளவுகளை மட்டும் அல்ல…
நம் காலத்தையும் தான்…

விழித்துக்கொள்வோம் தமிழர்களே !
நம் பெருமையை இவ்வுலகமெங்கும் பறைசாற்றுவோம் !!

108 என்ற எண்ணில் சூட்சுமம்.
சூரியனும், சந்திரனும் உலகத்தின் இயக்கத்திலும், மனித வாழ்க்கையிலும்
முக்கியப் பங்கு வகிக்கிறது.

நமக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள தூரம்,
சூரியனது குறுக்களவின் (விட்டம்) 108 மடங்குகள்  ஆகும்.

அது போலவே, நமக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம்,
சந்திரனது குறுக்களவின் 108 மடங்குகள் ஆகும்.

இதை நோக்கும் போது, 108 என்ற எண்ணில்
ஏதோ இரு சூட்சுமம் இருக்கிறது என்று தெரிகிறது.
அந்தச் சூட்சுமத்தை வேத ஞானம் கைக்கொண்டுள்ளது.
மந்திர ஜபங்களைச் சொல்ல வேண்டும் என்றால்,
108 அல்லது அதன் மடங்குகளில் சொல்ல வேண்டும்
என்பது வேத ஞானம்.
அது போலவே வேத வழிபாட்டுக்கான யாக சாலைகளின் அளவிலும்,
இந்த 108 என்னும் எண் வருகிறது.

ஆங்கிலேயர் தாக்கம் வந்த பிறகு நாம் மீட்டர் அளவை ஏற்றுக் கொண்டு விட்டோம். ஆனால் அதற்கு முன் வரை அங்குலம், தண்டம் என்னும் அளவுகளில் இந்த எண்ணே கோலோச்சிக் கொண்டிருந்த்து.

தமிழின் அற்புத எண்கள்
தமிழில் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி வரை நாம் சொல்லி விடுகிறோம்.அதற்கு மேல் உள்ள அளவுகளை எப்படிச் சொல்வது என்று தெரியுமா? தெரியவில்லை என்று தளர்ந்து விடாதீர்கள். இந்த எண்ணிக்கை அளவுகளை தேறையர் தான் பாடிய வைத்திய காவியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இங்கு நாம் அந்த எண்ணிக்கைகளின் அளவுகளைப் பார்ப்போம்.
100 ஆயிரம் என்பது ஒரு லட்சம்
100 லட்சம் – ஒரு கோடி
100 கோடி – ஒரு அற்புதம்
100 அற்புதம் – ஒரு நிற்புதம்
100 நிற்புதம் – ஒரு கருவம்
100 கருவம் – ஒரு மகா கருவம்
100 மகா கருவம் – ஒரு சங்கம்
100 சங்கம் – ஒரு மகாசங்கம்

ஒரு சங்கம் என்பதை எண்ணால் எழுதும்போது ஒன்று போட்டு பக்கத்தில் 17 சைபர் போடவேண்டும். இதே போல்
பதும சங்கம்
பருவம்
பெரிய அற்புத பருவம்
நிற்புத பருவம்
கருவ பருவம்
மகா கருவ பருவம்
சங்க பருவம்
மகா சங்க பருவம்
பதும சங்கம்
திரிசங்க பருவம்
அனந்த சங்கம்
சாகரம்  (1 போட்டு பக்கத்தில் 43 சைபர் போட்டால் )
சாகர கருவம்
மகா சாகர கருவம்
கருவ சங்க சாகரம்
பதும சங்க சாகரம்
அனந்த சங்க சாகரம்
திரி சங்க சாகரம்
மகா சங்கம்
அக்ஷ்க்ஷோணி
சோணி (1 போட்டு பக்கத்தில் 61 சைபர் போட்டால் )
மகாசோணி
கருவ சோணி
அனந்த கருவ சோணி
சங்க கருவ சோணி
மகா சங்க சோணி
திரிசங்க சோணி
அனந்த மகா சோணி
மகா பதும சோணி
திரிசங்க பதும சோணி
சங்கத்தின் சோணி
வெள்ளம்  (1 போட்டு பக்கத்தில் 83 சைபர் போட்டால் )
அற்புதத்தின் வெள்ளம்
நிற்புதத்தின் வெள்ளம்
கருவத்தின் வெள்ளம்
மகா கருவ வெள்ளம்
சங்க வெள்ளம்
மகா சங்க வெள்ளம்
பதும சங்க வெள்ளம்
திரி சங்க வெள்ளம்
அனந்த சங்க வெள்ளம்
அற்புதத்தின் பருவ வெள்ளம்
சங்க பருவ வெள்ளம்
பதும சங்க பருவ வெள்ளம்
மகா சங்க பருவ வெள்ளம்
திரி சங்க பருவ வெள்ளம்
அனந்த சங்க பருவ வெள்ளம்
வாகினி (1 போட்டு பக்கத்தில் 115 சைபர் போட்டால் )
பதும வாகினி
அனந்த வாகினி
மகா வாகினி  (1 போட்டு பக்கத்தில் 121 சைபர் போட்டால் )

எண்களுக்குரிய இந்த அபூர்வ வார்த்தைகளைப் பார்த்தால் தமிழை எப்படிப் போற்றுவது என்று தெரியாமல் சற்று வியப்பு ஏற்படுகிறதல்லவா? தமிழை நேசிக்கக் கற்றுக் கொண்டால் தமிழில் அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும். அப்போதுதான் நாம் தமிழில் உள்ள மேலும் பல அற்புதங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

****************************************************************************************************

 தமிழ் எழுத்துக்கள் நம் உடலில் பிறந்து, ஒலிக்கும் முறைகள் – விளக்கும் நன்னூல்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட “நன்னூல்” எனும் நூலில் தமிழ் எழுத்துக்கள் உடலில் எந்தெந்த இடங்களில் பிறக்கின்றன, பிறந்த எழுத்துக்களை ஒலிக்க எந்த உறுப்புகள் துணை புரிகின்றன, துணை புரியும் உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை படித்து அதிர்ச்சி அடைந்தேன் !!!

தமிழ் எழுத்துக்கள் உடலில்

 • மார்பு,
 • கழுத்து,
 • தலை,
 • மூக்கு

ஆகிய நான்கு இடங்களில் பிறக்கின்றன. அவற்றை ஒலிக்க

 • உதடு,
 • நாக்கு,
 • பல்,
 • அண்பல் (அதாவது மேற்பல் வரிசையின் அடிப்பகுதி),
 • அண்ணம் (வாயின் மேல்பகுதி)

ஆகிய உறுப்புகள் துணைபுரிகின்றன. மேலும் இந்த உறுப்புகள்

 • அங்காத்தல் (வாய் திறத்தல்),
 • உறல் (பொருந்துதல்),
 • வருடல் (தடவுதல்),
 • ஒற்றுதல்,
 • குவிதல்

எனும் செயல்பாடுகளை புரிகின்றன என்று சொல்கிறது நன்னூல்.

உயிர் எழுத்துக்கள் பிறக்கும் விதத்தை விளக்கும் நன்னூல்.

 • அ, ஆ எனும் முதல் இரு எழுத்துக்களும் கழுத்துப் பகுதியில் காற்று வெளிப்பட்டு, வாய் ஒலிப்பு உறுப்பாகி, வாய் திறத்தல் எனும் செயல்பாட்டில் பிறக்கின்றன !
 • இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்து உயிர் எழுத்துக்களும், கழுத்துப் பகுதி காற்று பிறப்பிடமாகி, வாய், அண்பல், அடிநாக்கு ஒலிப்பு உறுப்பாக, திறத்தல்-உறல் (பொருந்துதல்) செயலால் எழுத்தாகி ஒலிக்கின்றன !
 • உ, ஊ, ஒ, ஓ, ஒள ஆகிய ஐந்து உயிர் எழுத்துக்களும் கழுத்தில் காற்று பிறப்பிடமாகி, ஒலிக்க உதடுகள் பயன்பட, குவிதல் செயல் மூலமாக பிறக்கின்றன !

என்று உயிர் எழுத்துக்கள் நம் உடலில் பிறந்து, ஒலிக்கும் முறைகளை விளக்குகிறது நன்நூல்.

தமிழ் மொழியில், ஒவ்வொரு எழுத்தின் பிறப்பிடம், ஒலிக்கும் முறை ஆகியவற்றை அகழ்வாராய்ந்து விளக்கப்பெற்றிருப்பதைக் கண்டு உள்ளம் சிலிர்க்கின்றது. இன்னும் என்ன தயக்கம் தமிழை பெருமையாய் பேச ??

****************************************************************************************************

ஆதித்தமிழன் கண்டறிந்து தலைமுறை தலைமுறையாய்  பயின்று, பயிற்றுவித்து வந்தஆயக்கலைகள் அறுபத்துநான்கு. பல இடங்களில் கேள்விப்படும் இந்த கலைகள் எவையெவை என்பதை கொஞ்சம் அறிந்துகொள்வோம்.

எண்  கலைகள்  தமிழ் விளக்கம் 
1 அக்கர இலக்கணம்  எழுத்திலக்கணம்
2 லிகிதம் (இலிகிதம்)  எழுத்தாற்றல்
3 கணிதம்  கணிதவியல்
4 வேதம்  மறை நூல்
5 புராணம்  தொன்மம்
6 வியாகரணம்  இலக்கணவியல்
7 நீதி சாஸ்திரம்  நய நூல்
8 சோதிடம்  கணியக் கலை
9 தரும சாஸ்திரம்  அறத்துப் பால்
10 யோகம்  ஓகக் கலை
11 மந்திரம்  மந்திரக் கலை
12 சகுனம்  நிமித்தக் கலை
13 சிற்பம் கம்மியக் கலை
14 வைத்தியம் மருத்துவக் கலை
15 உருவ சாஸ்திரம் உறுப்பமைவு
16 இதிகாசம் மறவனப்பு
17 காவியம் வனப்பு
18 அலங்காரம் அணி இயல்
19 மதுர பாடனம் இனிது மொழிதல்
20 நாடகம் நாடகக் கலை
21 நிருத்தம் ஆடற் கலை
22 சத்த பிரமம் ஒலிநுட்ப அறிவு
23 வீணை யாழ் இயல்
24 வேனு குழலிசை
25 மிருதங்கம் மத்தள நூல்
26 தாளம் தாள இயல்
27 அகத்திர பரீட்சை வில்லாற்றல்
28 கனக பரீட்சை பொன் நோட்டம்
29 இரத பரீட்சை தேர் பயிற்சி
30 கஜ பரீட்சை யானையேற்றம்
31 அசுவ பரீட்சை குதிரையேற்றம்
32 இரத்தின பரீட்சை மணி நோட்டம்
33 பூ பரீட்சை மண்ணியல்
34 சங்கிராம இலக்கணம் போர்ப் பயிற்சி
35 மல்யுத்தம் கைகலப்பு
36 ஆகர்ஷணம் கவிர்ச்சியல்
37 உச்சாடணம் ஓட்டுகை
38 வித்துவேஷணம் நட்பு பிரிக்கை
39 மதன சாஸ்திரம் மயக்குக் கலை
40 மோகனம் புணருங் கலை (காம சாத்திரம்)
41 வசீகரணம் வசியக் கலை
42 இரசவாதம் இதளியக் கலை
43 காந்தர்வ விவாதம் இன்னிசைப் பயிற்சி
44 பைபீல வாதம் பிறவுயிர் மொழி
45 தாது வாதம் நாடிப் பயிற்சி
46 கெளுத்துக வாதம் மகிழுறுத்தம்
47 காருடம் கலுழம்
48 நட்டம் இழப்பறிகை
49 முட்டி மறைத்ததையறிதல்
50 ஆகாய பிரவேசம் வான்புகுதல்
51 ஆகாய கமனம் வான் செல்கை
52 பரகாயப் பிரவேசம் கூடுவிட்டு கூடு பாய்தல்
53 அதிரிச்யம் தன்னுறு கரத்தல்
54 இந்திர ஜாலம் மாயம்
55 மகேந்திர ஜாலம் பெருமாயம்
56 அக்னி ஸ்தம்பம் அழற் கட்டு
57 ஜல ஸ்தம்பம் நீர்க் கட்டு
58 வாயு ஸ்தம்பம் வளிக் கட்டு
59 திட்டி ஸ்தம்பம் கண் கட்டு
60 வாக்கு ஸ்தம்பம் நாவுக் கட்டு
61 சுக்கில ஸ்தம்பம் விந்துக் கட்டு
62 கன்ன ஸ்தம்பம் புதையற் கட்டு
63 கட்க ஸ்தம்பம் வாட் கட்டு
64 அவத்தை பிரயோகம் சூனியம்

இந்த அறுபத்துநான்கு கலைகளையும் கண்டறிந்து, அவை அனைத்திற்கும் கோட்பாடுகளை வரையறுத்து, ஒவ்வொரு கலைகளிலும் திறமைவாய்ந்த வல்லுனர்களை கொண்டு வாழ்ந்த தமிழன், உண்மையில் ஓர் அறிவியல் முன்னோடி. இத்தனை நுட்பம் வாய்ந்த கலைகளை கொண்ட வல்லமை பொருந்திய தமிழ் இனத்தில் பிறப்பெடுத்ததே நாம் நம் பிறவிப்பலனை அடைந்தமைக்கு நிகர் !

****************************************************************************************************

பழந்தமிழர் கண்ட இன்றைய உண்மை.
பெரும்பாலான உலக மக்கள் தாலமியின் தவறான அறிவியல் கண்டுபிடிப்பை நம்பி கொண்டிருந்த பொழுது அதே தாலமியின் காலகட்டத்திற்கு முன்பே தமிழரின் சரியான, புரட்சியான விஞ்ஞான கண்டுபிடிப்பை ஒருவரும் அறியவில்லையே?

தாலமி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு {கி.மு 1ம் நூற்றாண்டில்} வாழ்ந்த எகிப்து வானவியலாளர் ஆவார். இவர் பூமியை சுற்றியே சூரியன், கோள்கள், ஏன் விண்மீன்கள் கூட சுற்றிவருகின்றன தன் கண்டுபிடிப்பாக அறிவித்தார். இந்த அறிவியல் கண்டுபிடிப்பானது கோபர் நிக்கஸ், கலீலியோ வரும் வரை அதாவது கிட்டதட்ட கி.பி 1500 வருடங்கள் கோலோச்சியது.

ஆனால் கி.மு 3ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 2ஆம் நூற்றாண்டுக்கு மிடையில் பாடப்பட்டவையான சங்க இலக்கியங்களில் ஒன்று பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “கடியலூர் உருத்திரங்கண்ணனான் என்ற புலவரால் பாடப்பட்டது. இதில் வரும் 67 – 72 வரையான வரிகள் தான் மேற்கூறிய நம் ஊகத்துக்கு சான்றளிக்கின்றன:

“நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல,
மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக்,
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்,
பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ,
திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்.

இதன் பொருள் இதுதான்
“சூரியனை சுற்றி வரும் கோள்களைப் போல இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான்”

இலக்கியத்தைப் பொறுத்தவரை, உவமைக்கு பயன்படும் பொருள் ஏற்கனவே மக்களால் அறியப்பட்டதாகத் தான் இருக்கும்.

உதாரணமாக, “மதி போன்ற முகம்” என்ற உவமையைக் கவனித்தவுடன் நாம் முதலில் சந்திரனையே எண்ணுகிறோம்; பின்பு அதை குறிப்பிட்ட முகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். எப்போதும் உவமை என்பது, ஏற்கனவே அறிந்த ஒன்றுடன், தெரியாததை ஒப்பிட வைத்து குறிப்பிட்ட விடயத்தை எமக்கு இலகுவாகப் புரியவைக்கிறது.

இங்கோ, எதிரிகள் சூழ்ந்த மாவீரன் என்பதே, கோள்கள் சூழ்ந்த சூரியன் என்று தான் உவமிக்கப்படுகின்றது என்பது அக்காலத் தமிழர், ஞாயிறையே ஏனைய கோள்கள் சுற்றிவருகின்றன என்ற உண்மையை அறிந்திருந்தார்கள் என்பதற்கு சான்றாக இல்லையா?

எவ்வளவு பெரிய அறிவியல் உண்மையை, இந்தப் பழந்தமிழ் இலக்கியம், சர்வசாதாரணமாக, அதேவேளை மிகுந்த அடக்கத்துடன் சொல்கிறது?

அன்றைய விஞ்ஞான உலக ஆச்சரியம்.
சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடியதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே

இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.

இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப

இதன் பொருள்.
விசும்பு என்றால் ஆகாயம்;
வலவன் என்றால் சாரதி;
ஏவாத என்றால் இயக்காத;
வானவூர்தி என்றால் விமானம்.
விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து.

இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.

“எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்” என்று திருத்தக்க தேவரின் “சீவக சிந்தாமணி” சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயண செய்தி. 
இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான்.
இது புளித்துப் போன செய்தி! 
இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை.
ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது.

விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா?

தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கும் தமிழனுக்கும்உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் தேவையா?

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும், பௌதீகத்திலும், புவியியலிலும்
தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பதும் உண்மையே!
****************************************************************************************************

யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன் !

யானையின் தமிழ்ப்பெயர்கள்
யானை/ஏனை (கரியது)
வேழம் (வெள்ளை யானை)
களிறு
களபம்
மாதங்கம்
கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
உம்பர்
உம்பல் (உயர்ந்தது)
அஞ்சனாவதி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
தூங்கல்
தோல்
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
எறும்பி
பெருமா (பெரிய விலங்கு)
வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
ஒருத்தல்
ஓங்கல் (மலைபோன்றது)
நாக
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
கும்பி
தும்பி (துளையுள்ள கையை உடையது)
நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
குஞ்சரம் (திரண்டது)
கரேணு
உவா (திரண்டது)
கரி (கரியது)
கள்வன் (கரியது)
கயம்
சிந்துரம்
வயமா
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
தந்தி
மதாவளம்
தந்தாவளம்
கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா
மருண்மா
மதகயம்
போதகம்
யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)

பெண் யானையின் பெயர்கள்
பிடி
அதவை
வடவை
கரிணி
அத்தினி

யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)
(1) கயந்தலை – பிறந்த உடனான யானையின் பெயர்
(2) போதகம் – எழுந்து நிற்க தொடங்கும் பருவம்
(3) துடியடி – ஓடி ஆடி விளையாடும் பருவம்
(4) களபம் – உணவு தேடி செல்லும் பயிற்சி பெரும் பருவம்
(5) கயமுனி – மற்ற இளம் யானைகளுக்கு பயற்சி அளிக்கும் பருவம்

****************************************************************************************************

கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள்
வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங் கொடுவேரி…, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங்குடசம், எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, பயினி, வானி, பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், விரி பூங்கோங்கம், போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, தில்லை, பாலை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், தாழை, தளவம், முள் தாள் தாமரை, ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை, பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங் குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்
1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு

****************************************************************************************************

பழந்தமிழரின் பட்டாடைகள்
அரத்தம்
இறஞ்சி
இரட்டு
கவற்றுமடி
கத்தூலம்
கரியல்
குருதி
குஞ்சரி
கோங்கலா
கோசிகம்
சில்லிகை
சித்திரக்கம்மி
சுண்ணம்
செம்பொத்தி
தத்தியம்
திருக்கு
துரியம்
தேவாங்கு
தேவகிரி
பஞ்சு
பச்சிலை
பரியட்டக்காசு
பணிப்பொத்தி
பங்கம்
பாடகம்
பீதகம்
புங்கர்க்காழகம்
பேடகம்
நுண்டுகில்
வடகம்
வண்ணடை
வெண்பொத்தி
வேதங்கம்

பழந்தமிழரின் அணிகலன்கள்
அரையணி
இரத்தினம் கட்டின அடுக்காழி
கழுத்தணி
கலாபம்
காஞ்சி
காதணி
காலணி
கால் விரலணி
கால் மோதிரம்
கிண்கிணி
குறங்கு செறி
கொக்குலாய்
கையணி
கைவிரலணி
சரப்பளி
சங்குவளை
சிலம்புதண்டை
சீதேவியார்
சூடகம்
தலையணி
தாறாருவி
தென்பல்லி
தொடையணி
தோடு
தோளணி
பவழவளை
பருமம்
பாதசாலம்
பிடர் அணி
பீலி
புல்லகம்
பூரம்பாளை
பொன்வளை
பொன்னரிமாலை
நவரத்தினவளை
நீலக்குதம்பை
நுண் ஞாண் சாவடி
நுழைவினை
நேர்சங்கிலி
மகரக்குழை
மகரப் பகுவாய்
மகரவாய் மோதிரம்
மாணிக்க வளை
மேகலை
முத்தாரம்
முஞ்சகம்
முத்துவளை
வடபல்லி
வல்லிகை
வலம்புரிச்சங்கு
வாளைப்பகுவாய்
மோதிரம்
விரிசிகை
வீரசங்கிலி

பழந்தமிழரின் ஆயுதங்கள்
அரிவாள்
ஆண்டலையடுப்பு
ஈர்வாள்
உடைவாள்
ஐயவித்தூலம்
கதை
கவை
கல்லிடு கூடை
கணையம்
கழுகுப்பொறி
கவசம்
குத்துவாள்
கைவாள்
கொடுவாள்
கோல்
சிறுவாள்
தகர்ப்பொறி
தொடக்கு
பிண்டிபாலம்
ஞாயில்
மழுவாள்
விளைவிற்பொறி
அரிதூற்பொறி
இருப்பு முள்
எரிசிரல்
கழு
கருவிலூகம்
கல்லமிழ் கவன்
கற்றுப்பொறி
கழுமுள்
குந்தம்
கூன்வாள்
கைபெயர்
கோடாரி
சதக்கணி
தண்டம்
தூண்டில்
தோமரம்
புதை
நாராசம்
வச்சிரம்
வில் அம்பு
வேல்

****************************************************************************************************

பழந்தமிழரின் மணி அறியும் உத்தி!
பழந்தமிழர்கள் ங்கள் தொழிலுக்குப் புறப்படவேண்டிய நேரத்தைக் கீழேகுறிப்பிடுள்ள பறவைகளின் ஒலி மூலம் தெரிந்து புறப்பட்டார்கள்.
பறவை சப்திக்கும் நேரம்.
கரிச்சான் குருவி 3.௦௦ மணி
செம்போத்து 3.30 மணி
குயில் 4.00 மணி
சேவல் 4.30 மணி
காகம் 5.00 மணி
மீன் கொத்தி 6.00 மணி

பழந்தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.

உணவு விடயத்தில் தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தேநம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன.
1. அருந்துதல் — மிகக்
 கொஞ்சமாக சாப்பிடுவது.
2. உண்ணல் — பசி
 தீர சாப்பிடுவது.
3. உறிஞ்சுதல் — நீர்
 கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.
4. குடித்தல் — நீரான
 உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.
5. தின்றல் — பண்டங்களை
 மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.
6. துய்த்தல் — உணவை
 ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.
7. நக்கல் — நாக்கினால்
 துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.
8. பருகல் — நீர்
 கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.
9. மாந்தல் — ரொம்பப்
 பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.
10. கடித்தல் — கடினமான
 உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.
11. விழுங்கல் — வாயில்
 வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.
12. முழுங்கல் — முழுவதையும்
 ஒரே வாயில் போட்டு உண்பது.

****************************************************************************************************

பழந்தமிழர்களின்47 வகை நீர்நிலைகள்

01. அகழி – கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்
02. அருவி – மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது
03. ஆழிக்கிணறு -கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு
04. ஆறு – பெருகி ஓடும் நதி
05. இலஞ்சி -பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்
06. உறை கிணறு -மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு
07. ஊருணி -மக்கள் பருகும் நீர் நிலை
08. ஊற்று – பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது
09. ஏரி -வேளாண்மை பாசன நீர் தேக்கம்
10. ஓடை -அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்
11. கட்டு கிணக்கிணறு – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய       கிணறு
12. கடல் -சமுத்திரம்
13. கம்வாய் (கம்மாய்)-பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்
14. கலிங்கு -ஏரி முதலிய பாச்ன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன்                 எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து                               திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
15. கால் –  நீரோடு வழி
16. கால்வாய் -ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி
17. குட்டம் – பெருங் குட்டை
18. குட்டை- சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை
19. குண்டம் – சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை
20. குண்டு – குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
21. குமிழி – நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை           கிணறு
22. குமிழி ஊற்று -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று
23. குளம் -ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.
24. கூவம் – ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு
25. கூவல் – ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்
26. வாளி – ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு       அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
27. கேணி- அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு
28. சிறை – தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை
29. சுனை – மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை
30. சேங்கை – பாசிக்கொடி மண்டிய குளம்
31. தடம் – அழகாக நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்
32 . தளிக்குளம் – கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.
33. தாங்கல் – இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்
34. திருக்குளம் – கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும்           பெயர் பெறும்
35. தெப்பக்குளம் -ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்
36. தொடு கிணறு -ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்
37. நடை கேணி – இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு
38. நீராவி -மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்
39. பிள்ளைக்கிணறு -குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
40. பொங்கு கிணறு -ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு
41. பொய்கை – தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு       நீர் நிலை
42. மடு -ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்
43. மடை -ஒரு கண்ணே உள்ள சிறு மதகு
44. மதகு -பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது
45. மறு கால் -அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்
46. வலயம் -வட்டமாய் அமைந்த குளம்
47 வாய்ககால் -ஏரி முதலிய நீர் நிலைகள்

****************************************************************************************************

இன்பத்தமிழ் ….ஓரெழுத்து ஒரு சொல்..!
ஆ – பசு
ஈ – பறக்கும் பூச்சி
ஊ – இறைச்சி
ஏ – அம்பு
ஐ – அழகு, தலைவன்
ஓ – வினா, மதகு(நீர் தங்கும் பலகை)
மா – பெரிய
மீ – மேலே
மு – மூப்பு
மே – அன்பு, மேன்மை
மை – கண்மை(அஞ்ஞனம்)
மோ – முகர்தல், மோத்தல்
தா – கொடு
தீ – நெருப்பு
தூ – வெண்மை
தே – தெய்வம்
தை – தைத்திங்கள்
சா – மரணம், பேய்
சீ – இகழ்ச்சி, சீத்தல்
சே – எருது
சோ – மதில்
பா – பாட்டு,நிழல், அழகு
பூ – மலர்
பே – நுரை, அழகு
பை – பசுமை, கைப்பை
போ – செல்,போதல்
நா – நாக்கு
நீ – நீ
நே – அன்பு, நேயம்
நை – வருந்து, நைதல்
நோ – நோய், வருத்தம்
கா – சோலை
கூ – பூமி
கை – கரம்
கோ – அரசன், இறைவன்
வா – வருக
வீ – பூ
வை – கூர்மை, வைத்தல்
வௌ – வவ்வுதல் (அ) கௌவுதல்
யா – ஒரு மரம்
நொ – துன்பம்
து – கொடு, உண், பிரிவு

****************************************************************************************************

பதினாறு பேறுகள்.

தமிழர்களின் திருமணச்சடங்கில், ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று புதுமணத்தம்பதியரை வாழ்த்தும் வழக்கம் உள்ளது. இந்த பதினாறு பேறுகளும் மக்கட் பேறல்ல. பதினாறு செல்வங்களையே நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

கலையாத கல்வி.
கபடமற்ற நட்பு.
குறையாத வயது.
குன்றாத வளமை.
போகாத இளமை.
பரவசமான பக்தி.
பிணியற்ற உடல்.
சலியாத மனம்.
அன்பான துணை.
தவறாத சந்தானம்.
தாழாத கீர்த்தி.
மாறாத வார்த்தை.
தடையற்ற கொடை.
தொலையாத நிதி.
கோணாத செயல்.
துன்பமில்லா வாழ்வு.

1. புகழ்
2. கல்வி
3. வலிமை
4. வெற்றி
5. நன் மக்கள்
6. பொன்
7. நெல்
8. நல்விதி
9. நுகர்ச்சி
10. அறிவு
11. அழகு
12. பெருமை
13. இனிமை
14. துணிபு
15. நோயின்மை
16. நீண்டஆயுள்

****************************************************************************************************

தமிழ் மாதங்கள்
நடைமுறை   –      தூய தமிழ்

சித்திரை……………  மேழம்
வைகாசி……………  விடை
ஆனி………………..  ஆடவை
ஆடி…………………  கடகம்
ஆவணி………………. மடங்கல்
புரட்டாசி……………. கன்னி
ஐப்பசி………………… துலாம்
கார்த்திகை…………… நளி
மார்கழி………………. சிலை
தை ………………….. சுறவம்
மாசி………………….. கும்பம்
பங்குனி………………. மீனம்

பரம்பரை
நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும் பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது
என்று சொல்வதுண்டு. பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக என்று சொல்லலாம் என்றாலும், “தலைமுறை தலைமுறையாக”என்பதே உண்மை பொருள் ஆகும்.
அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!
பரன் + பரை = பரம்பரை

நமக்கு அடுத்த தலைமுறைகள்:
நாம்
மகன் + மகள்
பெயரன் + பெயர்த்தி
கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த் தி
எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி

நமக்கு முந்தைய தலைமுறைகள்:
நாம் – முதல் தலைமுறை
தந்தை + தாய் – இரண்டாம் தலைமுறை
பாட்டன் + பாட்டி – மூன்றாம் தலைமுறை
பூட்டன் + பூட்டி – நான்காம் தலைமுறை
ஓட்டன் + ஓட்டி – ஐந்தாம் தலைமுறை
சேயோன் + சேயோள் – ஆறாம் தலைமுறை
பரன் + பரை – ஏழாம் தலைமுறை

ஒரு தலைமுறை – சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால், ஏழு தலைமுறை – 480 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை – 960 வருடங்கள் (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)
ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும். எனக்கு தெரிந்து, வேறெந்த மொழிகளிலும்
இப்படி உறவு முறைகள் இல்லை இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!

****************************************************************************************************

“தாய்லாந்தில் தமிழ்”

தாய்லாந்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்து படிந்த மட்பாண்டம். தாய்லாந்து (தாய்) மொழியில் தமிழ் சொற்களின் வேர்கள்.

தாய்லாந்து தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டது, அக்காலத்தில் தமிழ் மொழியில் இருந்து பலச் சொற்கள் தாய்லாந்து மொழிக்குத் தருவிக்கப்பட்டன.

தாய்லாந்து மொழி தமிழ் மொழியின் துணையோடு தான் வளர்ச்சிக் கண்டிருக்கக் கூடும்.
அதில் சிலச் சொற்கள் பின்வருமாறு,

1. தங்கம் – தொங்கம்
2. கப்பல் – கம்பன்
3. மாலை – மாலே
4. கிராம்பு – கிலாம்பு
5. கிண்டி – கெண்டி
6. அப்பா – பா
7. தாத்தா – தா
8. அம்மா – மே, தான்தா
9. பட்டணம் – பட்டோம்
10. ஆசிரியர் – ஆசான்
11. பாட்டன் – பா, புட்டன்
12. திருப்பாவை – திரிபவாய்
13. வீதி – வீதி
14. மூக்கு – சாமுக்
15. நெற்றி – நெத்தர்
16. கை – கை
17. கால் – கா
18. பால் – பன்
19. கங்கை – கோங்கா
20. தொலைபேசி – தொரசாப்
21. தொலைக்காட்சி – தொரதாட்
22. குலம் – குல்
23. நங்கை – நங்
24. துவரை – துவா
25. சிற்பம் – சில்பா
26. நாழிகை – நாளிகா
27. வானரம் – வானரா
28. வேளை – வேளா
29. மல்லி – மல்லி
30. நெய் – நெய்யி
31. கருணை – கருணா
32. விநாடி – விநாடி
33. பேய்/பிசாசு – பிச/பிசாத்
34. கணம் – கணா
35. விதி – விதி
36. போய் – பாய்
37. சந்திரன் – சாந்
38. ரோகம் – ரூகி
39. தூக்கு – தூக்
40. மாங்காய் – மாங்க்
41. மேகம் – மேக்,மீக்
42. பிரான், – எம்பிரான் பிரா
43. யோனி – யூனி
44. சிந்தனை – சிந்தனக்கம், சிந்தனா
45. சங்கு – சான்க்
46. தானம் – தார்ன்
47. பிரேதம் – பிரீதி
48. நகரம் – நகான்
49. பார்வை – பார்வே
50. ஆதித்தன் – ஆதித்
51. உலகம் – லூகா
52. மரியாதை – மார-யார்ட்
53. தாது – தாட்
54. உலோகம் – லூகா
55. குரோதம் – குரோதீ
56. சாமி – சாமி
57. பார்யாள் – பார்ய
58. திருவெம்பாவை – த்ரீயம்பவாய

****************************************************************************************************

நன்றி : http://kallarperavai.weebly.com/2965297929653021296529803007296530062992-2949299529973009296529953021.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.