“லவ்”வெனப் படுவது யாதெனில் ……

“லவ்”வெனப் படுவது யாதெனில் ……

*****

Love – அன்பு, நேசம், மேவுதல்,

Love – காதல்(ஆழ்ந்த அன்பு),

Love – நெயிற்சி (நண்பரிடம் அன்பு)

Love – பக்கம் (மன அருகாமை)

Possessive Love – பிணை

Love – புகற்சி (=காதல்)

Love – முழுவல் (முழுமை பெற்ற காதல்)

Infatuation – மோகம், மயக்கம், கிறக்கம், பித்து (இருபாலருக்கிடையே ஏற்படுவது) –

மோகம் என்பது உடல் கவர்ச்சியால் ஏற்பட்டு, வளர்ந்து காமம்

என்னும் உடல்பசியாக மாறும். மோகத்துக்கும், காமத்துக்கும் கால

இடைவெளி அதிகரிக்க, அதிகரிக்க, முதலில் கிறக்கமும் (“உன்னைப்

பார்த்து நிலவைப் பார்த்தேன் – நிலவில் ஒளியில்லை”) பின்னர்

மயக்கம்

Love pangs– காதல் அவத்தை – இருபாலரிடை ஏற்படும் மனக்கவர்ச்சிக்கும்

இனக்கவர்ச்சிக்கும் ஒரு இடைவெளியை நாகரிகம், இடம், பண்பு, கற்பு,

பெரியோர் ஒப்புதல் , சமூக அங்கீகாரம் கருதி ஏற்படும்போது

மன அளவிலும் உடல் அளவிலும் ஏற்படும் இன்பமயமான சங்கடங்கள்.

தாங்க இயலாது போகுங்கால் வெறுப்பாக (தன்மீது, காதலர் மீது,

உற்றோர் மீது, உலகத்தின்மீது) உருமாறும் தன்மையது   —

(அகப்பொருள் பற்றிய சங்க இலக்கியங்கள், திருக்குறள், சீவக

சிந்தாமணி இவை இப்பொருளைப் பற்றி ஆயிரக் கணக்கில் ஆராய்ச்சி

செய்துள்ளன). இது அளவுமிகும்போது ஆணையும், பெண்ணையும்

துறவியாகவோ, அரக்கராகவோ ஆக்கிவிடும் தன்மையது)

Love – பத்தி (இறைவனிடம் ஏற்படும் அன்பு)  (எ.கா.: ‘பத்தியால் நானுனைப்

பலகாலம்’ ; ‘பத்தித் திருமுகம் ஆறுடன்’)

One-sided love, unrequited love – கைக்கிளை, இருபாலரும் மயக்கத்தில் இருந்து கூடி பின்னர் ஒருவர் மறக்க, மற்றவர் மறக்க இயலாதிருப்பது)

Love – பாசம் (உறவோடு ஏற்படுவது, உயிர்போன்ற நட்பிலும் விளைவது)

Love –  காமம் (பாலியல் ஈர்ப்பு)

Make love – கலவி செய், கூடு (பிறர் முன்னிலையில் பேசற்க)

Loving – அன்புசெய்தல் (இப்பொருளில் மேற்கண்ட பயன்பாடு வராது)

Loving heart – ஈரநெஞ்சு, தட்பமனம்,

*******

குறிப்பு : அன்பைக் குறித்த சொற்கள் இன்னும் நிறைய இலக்கியத்தில் கிடைக்கும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.