அகோரிகள்

அகோரிகள்:
*****************

அதிகமான அறிவில்லாத எனக்கும் உண்டு அகோரிகள் பற்றி ஒரு கருத்து :
அவர்களைத் தவிர்க்கவேண்டும். சீலத்தைத் தவிர்த்துவாழ்வதையே சீலமெனக் கருதும் இவர்கள் ஆன்மீகவாதிகள் என்றோ, இந்து சமயத்தின் வேர்கள் என்றோ நான் கருதுவதற்கு ஒருபோதும் என் மனம் இடம் தராது.
இதுவே என் கருத்து.

அகோரிகள் குறித்த இணையத்தில் காணப்படும் இருவிதமான கட்டுரைகளை அப்படியே தணிக்கை செய்யாது தருகிறேன். இதில் எதைக் கொள்வது எதைத் தள்ளுவது என்று யோசியுங்கள்.

*************************
பதிவு எண் 1
———————————-
இந்தியாவின் எண்ணற்ற மர்மங்களில் ஒன்றாக கங்கை கரைகளில் வாழ்ந்து திரியும் அகோரிகள் உள்ளனர்.
அகோரிகள் என்பவர்கள் வட இந்தியாவில் உள்ள கங்கை ஆற்றின் கரையில் வாழும் சைவ சமய சாதுக்கள் ஆவர்.
காசி நகரத்தில் அதிகம் காணப்படும் இவர்கள் பெரும்பாலும் சிவனின் கோர ரூபமான பைரவரையும், வீரபத்திரரையும் வழிபடுகின்றனர்.

இவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மனித வாழ்கைக்கு அப்பாற்பட்டவையாக உள்ளதால் இவர்கள் மக்கள் மத்தியில் தனித்து தெரிகின்றனர்.

அகோரிகள் யாரையும் துன்புறுத்தாத சாதுக்கள் என்று கூறப்பட்டாலும், இவர்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் சிவபெருமானுக்கு சிறுவயதிலேயே நேர்ந்து விட்ட குழந்தைகளாக காசி, கயா, வாரணாசி, ரிஷிகேஷ் ஆகிய தலங்களில் உள்ள மடங்களில் விடப்பட்டவர்கள் ஆவர்.
இவர்கள் கங்கை நதியில் விடப்படும் சடலங்கள், காசி உள்ளிட்ட இடங்களில் எரியூட்டப்படும் உடல்களிலிருந்து மண்டையோடுகளை சேகரித்துக் கொள்கிறார்கள்.
இந்தக் கபால ஓடுகளை தண்ணீர் அருந்தவும், திருவோடாகவும் பயன்படுத்துகின்றனர். இவர்களில் பெரும்பாலானர்வகள் 2 முதல் 20 பேர் கொண்ட குழுவாக வாழக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அகோரிகளில் 50 சதவிகிதத்தினர் நிர்வாணமாகவும், மீதமுள்ளவர்கள் அரை நிர்வாணமாகவும் வாழும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலும் 90 சதவிகிதம் பேருக்கு மதுப்பழக்கம், கஞ்சா புகைப்பது, மது அருந்துதல், போதைப் பழக்கம் ஆகியவை உள்ளது.

அகோரிகள் நெருப்பில் வேகும் மனித உடல் பாகங்களை எடுத்து உண்பதாக கூறுவதை பலரும் கேட்டிருப்போம்.
ஆனால் அகோரிகளில் 3 சதவிதத்தினருக்கும்
குறைவானவர்களே இவ்வாறு மனித உடல் பாகங்களை உண்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆடையணியும் அகோரிகளில் பலர் வெள்ளுடையும், கால பைரவர் என்பதைக் குறிக்கும் விதமான கருப்பு வண்ணம் மற்றும் காவி ஆகிய நிறங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
மேலும், அளவில் மிக குறைவாக உள்ள பெண் அகோரிகளை பார்வதியின் மறுஉருவமாக பக்தர்கள் கருதுவதால் ‘துர்க்கா ஜி” என்ற பெயரில் அழைக்கின்றனர்.

அகோரிகள் பெரும்பாலும், சுடுகாட்டுச் சாம்பலை பூசிக்கொண்டு, பிச்சை எடுப்பவர்களாக கருதப்பட்டு வந்தாலும் அவர்களை ”பாபாஜி” என்று அழைத்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவதை வட இந்தியர்கள் வரம் போல கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அகோரிகள் பங்குபெறும் உலகின் மிகப்பெரிய மக்கள் ஒன்றுகூடலாக கருதப்படும் ”கும்பமேளா” என்ற பிரம்மாண்ட விழா ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவின் அலகாபாத், அரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறும்.

இந்த மாபெரும் திருவிழாவின்போது உடல் முழுவதும் திருநீறு பூசிய பல்லாயிரம் அகோரிகள், நதியில் புனித நீராடுவதை பார்க்கும் உலக மக்கள் இந்தியாவின் தொன்மையை பார்த்து வியப்பில் ஆழ்கின்றனர்.
********************************************************************************************************
பதிவு எண் 2:
———————

இறந்த பிணங்களுடன் உடல் உறவு கொள்ளும் அகோரிகள்..
dworldforum.com

இன்னும் அவர்களைப் பற்றிய விந்தையான உண்மைகள்!..மனித வரலாற்றில் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டுச் சடங்குகள் எதுவும் குழப்பங்கள், வெறுப்பு, பயம், அருவெறுப்பு போன்றவைகள் சரிசமமான அளவில் நமக்கு ஏற்படுத்தியிருக்காது.

அப்படி ஏற்படுத்தும் சடங்குகளைப் பின்பற்றுபவர்கள் தான் இந்தியாவில் உள்ள நரமாமிசம் உண்ணும் அகோரிகள் (அகோரி சாதுக்கள்) ஆவார்கள்.

நர மாமிசம் உண்ணுவது மட்டுமல்லாது, இறந்த பிணங்களுடன் உடல் உறவு கொள்வதற்காகவும் அகோரிகள் அறியப்படுபவர்கள்.

அதேப்போல் பல வித சடங்குகளுக்கு மனித மண்டை ஓடுகளையும் பயன்படுத்துபவர்கள் அவர்கள். ஆனால் அகோரிகளைப் பற்றி சொல்ல வேண்டுமானால் இதோடு நின்று விட முடியாது.

அவர்களைப் பற்றி பேச இன்னும் ஏராளமான விஷயம் உள்ளது. அவற்றைத் தான் நாம் பார்க்கப் போகிறோம்.

உண்மை: 1
மனித நீர்மம் மற்றும் அழுகும் நிலையில் உள்ள மனித சவம் ஆகியவைகளையும் கூட அவர்கள் உண்ணுவார்கள். இப்படிச் செய்வதால் விஷயங்களில் உள்ள ஒருமையை (புனித மற்றும் புனிதமற்ற) தன்மயமாக்க முயற்சி செய்வார்கள். இதன் மூலம் அழகின் உண்மையான புலனுணர்வை வரையறுப்பார்கள்.

உண்மை: 2
அகோரிகளின் மிகவும் நெறி தவறிய வழக்கமாக கருதப்படுவது பிணத்தைப் புணருவது. அவர்களை பொறுத்த வரையில், காளி தேவி உடலுறவில் திருப்தியை எதிர்ப்பார்க்கிறார். அதனால் தகுந்த பிணம் ஒன்றினை கண்டுப்பிடித்து, அதனுடன் உடலுறவு வைத்துக் கொள்வார்கள்.
புகழ் பெற்ற புகைப்படக்காரரான டேவர் ரோஸ்டுஹர் ஒரு அகோரியை பேட்டி எடுக்கையில், அந்த அகோரி கூறியதாவது, “வெளி உலகத்திற்கு மூர்க்கத்தனமான தெரியும் காரியங்களை நாங்கள் செய்வதற்கான காரணம் மிகவும் சாதாரணமானது.
அருவெறுப்பான விஷயத்தில் புனிதத்தைக் கண்டுபிடிப்பதே அதற்கான காரணம்! ஒரு பிணத்துடன் உடலுறவு கொள்ளும் போதோ அல்லது மனித மூளையை உண்ணும் போதோ ஒரு அகோரி கடவுள் மீது தன் கவனத்தை வைத்திருந்தால், அவன் சரியான பாதையில் செல்கிறான் என அர்த்தமாகும்.”

உண்மை: 3
பில்லி சூனியம் மற்றும் இயற்கையை மீறிய சக்திகளில் அகோரிகள் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். பிணத்தைப் புணரும் போது, அவர்கள் அதிர்ச்சி ஊட்டும் சடங்குகளில் ஈடுபடுவார்கள். இறந்த சடலங்களுடன் உடலுறவு கொள்ளும் போது, இயற்கையை மீறிய சக்திகள் தங்களுக்கு அதிகரிக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.
அதனால் அகோரிகளின் கூட்டம் இந்த சடங்கினை செய்திட இரவு நேரத்தில் கல்லறையில் ஒன்று கூடுவார்கள். எரிக்கப்பட்ட சவத்தின் சாம்பலை தன் உடலின் மீது அகோரி பெண்கள் பூசிக் கொள்வார்கள். கொட்டு அடிக்கப்பட்டு, மந்திரங்கள் ஓதப்பட்டு, கன்னியிழப்பு நடைபெறும். இந்த செயல் நடைபெறும் போது, அந்த பெண் மாதவிடாய் காலத்தில் இருப்பது அவசியமாகும்.

உண்மை: 4
அகோரிகள் தங்கள் மனதில் பகையையோ அல்லது வெறுப்பையோ வைத்திருக்க மாட்டார்கள். வெறுப்பை கொண்டிருந்தால் தியானத்தில் ஈடுபட முடியாது என்பது அவர்களுடைய நம்பிக்கையாகும்.
அதேப்போல் தங்கள் உணவை தாங்கள் உண்ணும் கிண்ணத்திலேயே நாய்களுக்கும் மாடுகளுக்கும் பகிர்ந்து உண்ணுவது அவர்களை மகிழ்விக்கும். இவ்வகையான எதிர்மறையான எண்ணங்களை (மிருகங்கள் தங்கள் உணவை அசுத்தம் செய்வது) நீக்கினால் தான், சிவபெருமானுடன் ஐக்கியமாகும் தங்களின் ஒரே குறிக்கோளின் மீது கவனத்தை செலுத்த முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

உண்மை: 5
மிகச்சிறய சணல் கோவணத்தை தவிர அவர்கள் உடலில் எந்த துணியும் அணியாமல் தான் அலைவார்கள். சில நேரங்களில் இறந்த மனித உடலின் சாம்பலை உடல் முழுவதும் பூசிக்கொண்டு நிர்வாணமாகவும் கூட சுற்றுவார்கள்.
சாம்பல் என்பது வாழ்க்கையின் 5 அதிமுக்கிய பொருட்களை கொண்டு செய்யப்படுவது. அதனால் நோய்கள் மற்றும் கொசுக்களிடம் இருந்து அது அகோரிகளை பாதுகாக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். பொதுவாக சிவபெருமானின் தோற்றத்தைப் போல நடந்து கொள்ளவே அவர்கள் இப்படி செய்கிறார்கள்.

உண்மை: 6
கபாலம் என்றழைக்கப்படும் மனித தலையை உடைமையாக வைத்திருப்பதே அகோரியின் உண்மையான சின்னமாகும். அதற்காக கங்கை நீரில் மிதந்து செல்லும் பிணங்களை அவர்கள் கைப்பற்றிக் கொள்வார்கள். அதன் பின் அந்த மண்டை ஓட்டை கொண்டு மதுபானம் குடிக்கவோ அல்லது உணவருந்தவோ அல்லது பிச்சை பாத்திரமாகவோ பயன்படுத்துவார்கள்.

உண்மை: 7
தூய்மை மற்றும் தூய்மையற்ற, புனிதம் மற்றும் புனிதமற்ற, சுத்தம் மற்றும் அசுத்தத்திற்கு இடையே உள்ள விதிமுறைகளை உடைப்பதன் மூலம் குணப்படுத்தும் அதிசய சக்தியை தாங்கள் பெறுவதாக அகோரிகள் நம்புகின்றனர். இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிய பிறகு, சுடுகாட்டில் அவர்கள் அமைதியான முறையில் தியானம் செய்வார்கள்.

உண்மை: 8
சமயத்தின் புனிதத் தன்மைக்கு மதிப்புக் கொடுக்காததன் மூலம் நிர்வாணம் மற்றும் ஆத்மாவின் மோட்சத்திற்கு பாதை கிடைக்கும் என இந்த இனம் நம்புகிறார்கள். அதனால் தான் அவர்கள் சமயத்தின் புனிதத் தன்மைக்கு மதிப்புக் கொடுக்காமல், காரணமே இல்லாமல் மிக சத்தமாக சபிப்பார்கள். இந்த ஒரே வழியில் தான் அகோரிகளால் அறிவொளியை அடைய முடியும்.

உண்மை: 9
மனித மண்டை ஓடுகளை ஓரி அணிகலனாக தங்கள் கழுத்தில் மாலையாக அணிவித்திருப்பதை நாம் காண நேரிட்டிருக்கலாம். மனித மண்டை ஓடுகளை கொண்டு செய்த இந்த ஒரே அணிகலனை தான் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக கருதுகின்றனர்.
எரிக்கப்பட்ட பிணங்களின் தொடை எலும்பையும் கூட நடை குச்சியாக சில அகோரிகள் பயன்படுத்துவார்கள். இது அகோரியின் சின்னமாகும். அவர்கள் தங்களது தலை முடியை வெட்டவோ அல்லது குளிக்கவோ மாட்டார்கள். அதனால் தான் இயற்கையான ஜடாமுனி அவர்களுக்கு ஒரு அடையாளமாகவே விளங்குகிறது.

உண்மை: 10
அகோரிகள் கஞ்சாவை புகைப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள். அதற்கு காரணம், அவர்கள் விடாமல் கடைப்பிடிக்கும், விடாமுயற்சியுள்ள தியானத்தில் மனதை ஒருநிலைப்படுத்த அது உதவும் என நம்புகின்றனர். சொல்லப்போனால், எப்போதுமே அவர்கள் கஞ்சாவின் தாக்கத்திலேயே தான் இருப்பார்கள். இருப்பினும் பார்ப்பதற்கு அமைதியாகவே காணப்படுவார்கள். இந்த போதை வஸ்து கொடுக்கும் பிரமை, மிக உயரிய ஆன்மீக அனுபவங்களாக கருதப்படுகிறது.

***************************************************************************************************
என் கடமை சொல்லிவிட்டேன். வியப்பதும் உவப்பதும் அருவருப்பதும் வெறுப்பதும் அவரவர் செய்ய வேண்டியது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.