ஸ்ரீ ஸூக்தம்

ஸ்ரீ ஸூக்தம்

 

ஸ்வாமி ஆசுதோஷானந்தர் எழுதிய

‘வேத மந்திரங்கள்” நூலிலிருந்து உரை

 

வேதங்களிலும் புராணங்களிலும் காணப்படுகின்ற மஹாலக்ஷ்மி துதிகளில் தொகுப்பான இந்த ஸூக்தம் தென்னாட்டில் மிகவும் பிரபலபானது.

(உ.வே. CR ஸ்ரீ நிவாச அய்யங்கார் உரை (ஸகல காரிய ஸித்தியும் திராவிட வேதங்களும் – LIFCO): காலை வேளைகளில்தான் செய்யவேண்டும் – விடியற்காலையில் செய்தால் சிறப்பு)

 

ஓம் ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண ரஜதஸ்ரஜாம்

சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ                                 1

 

அக்கினிதேவனே (ஜாதவே), பொன் நிறத்தவளும், பாவங்களைப் போக்குபவளும், பொன் வெள்ளி மாலைகளை அணிந்தவளும், நிலவு போன்றவளும், பொன்மயமானவளுமான மஹாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய்!

 

(உ.வே. CR ஸ்ரீ நிவாச அய்யங்கார் உரை:

ஹே ஶ்ரிய: பதியே, தங்க நிறமுள்ளவளும், பாபங்களைப் போக்குபவளும், பொன்னாலும் வெள்ளியாலும் இயன்ற மாலைகளை அணிந்து இருப்பவளும், நிலவைப் போன்ற குளிர்ந்த ஒளியுடையவளும் பொன்மயமானவளும் ஆகிய ஸ்ரீலக்ஷ்மீ தேவியை எனக்குப் பிரஸன்னமாகும்படி அருள்புரிய வேண்டும்.)

 

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ மனபகாமினீம்

யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காச்வம் புருஷானஹம்.               2

 

அக்கினிதேவனே, யாருடைய அருளால் நாம் பொன்னையும் (ஹிரண்யம்), பசுக்களையும்(காம்), குதிரைகளையும் (அச்வம்), உறவினரையும் (புருஷான்), பெறுவேனோ, அந்த மஹாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய். அவள் என்னிடமிருந்து விலகாதிருக்கச் செய்வாய்!

 

(உ.வே. CR ஸ்ரீ நிவாச அய்யங்கார் உரை:

ஹே லோகநாதா, ஸ்ரீதேவியின் வரவால் பொன் முதலிய செல்வங்களும், யானை, குடிரை, பசு, முதலிய கால்நடைச் செல்வங்களும், வேலைக்காரர் முதலிய சுகச் செல்வங்களும் உண்டாகின்றன. அத்தகைய ஸ்ரீதேவி என்னைவிட்டு நீங்காமல் என்றும் நிலைத்திருக்கும்படி நீ அருளவேண்டும்.)

 

ச்வபூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாப்ரபோதினீம்

ச்ரியம் தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மா தேவீர் ஜுஷதாம்                                            3

 

முன்னால் குதிரைகளும், நடுவில் ரதங்கள் புடைசூழ வருபவளும், யானைகளின் ஒலியைத் தன் வரவின் அறிகுறியாகக் கொண்ட வளுமான ஸ்ரீதேவியை அழைக்கிறேன். திருமகளே, நீ என்னிடம் மகிழ்ந்து உறைவாய்.

 

(உ.வே. CR ஸ்ரீ நிவாச அய்யங்கார் உரை:

ஸ்ரீதேவியினுடைய கோயில் முதல் பிராகாரத்தில் குதிரைகள் இருக்கின்றன. இரண்டாம் பிராகாரத்தில் தேர்கள் இருக்கின்றன. மூன்றாம் பிராகாரத்தில் யானைகள் இருக்கின்றன. யானைகளின் இனிய கம்பீரமான த்வனி அம்பாளைத் தினமும் விடியற்காலையில் எழுப்புகிறது, அந்த தேவியை, விஷ்ணு பத்நியை என்னை ஆசீர்வாதிக்குமாறு வேண்டுகிறேன்.)

 

காம் ஸோஸ்மிதாம் ஹிரண்ய ப்ராகாராம்

ஆர்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம் –

பத்மேஸ்திதாம் பத்ம வர்ணாம்

தாமிஹோபஹ்வயே ச்ரியம்.                                                                                       4

 

புன்முறுவல் தவழ்பவளும் (ஸ்மிதா), பொன்கோட்டையில் உறைபவளும், கருணை நிறைந்தவளும் (ஆர்த்ராம்), ஒளி பொருந்தியவளும், மகிழ்ச்சியைத் தருபவளும், தாமரையில் வீற்றிருப்பவளும், தாமரை நிறத்தவளும் ஆனவள் யாரோ(காம்) அந்தத் திருமகளை இங்கே எழுந்தருளுமாறு பிரார்த்திக்கிறேன்.

 

(உ.வே. CR ஸ்ரீ நிவாச அய்யங்கார் உரை:

ஸ்ரீதேவி ஒப்பற்ற தேஜஸ் உடையவள். அவளது ஒளிவீசும் புன்னகையும் ஒப்பற்றது. அவள் திருக்கோயிலின் மதில்கள் பொன்மயமானவை. அவள் திருப்பாற்கடலினின்றும் வெளிப் பட்டவள். அவ்வாறு வெளிப்படும்போது தெய்வக்களிறுகள் அவளை அமிர்தகலசங்களால் அபிஷேகம் செய்தன. அதனால் ஏற்பட்ட அமிர்த தாரையினால் அவளுடல் இன்னும் ஈரமாகவே இருக்கின்றது. அவள் திருப்தியடைந்தவள். விறரைத் திருப்தி செய்பவள். செந்தாமரையில் வீற்றிருப்பவள். செந்தாமரை நிறத்தை யுடையவள். இத்தகு பெருமை மிக்க லோகமாதாவே, நீ எப்போதும் என் அருகில் இருந்து என்னை அனுக்ரஹிக்குமாறு வேண்டுகிறேன்.)

 

சந்த்ராம் ப்ரபாஸாம் யஸா ஜ்வலந்தீம்

ச்ரியம் லோகே தேவ ஜுஷ்ட்டா முதாராம் –

தாம் பத்மினீமீம் ரணமஹம் ப்ரபத்யே

(அ)லக்ஷ்மீர்மே நச்யதாம் த்வாம் வ்ருணே                                                              5

 

சந்திரனைப் போன்றவளும், ஒளிமிக்கவளும்(ப்ரபாஸாம்), தன்மகிமையால்(யஸா) சுடர்விட்டுப் பிரகாசிப்பவளும் (ஜ்வலந்தீம்), தேவர்களால் வழிபடப் பெறுபவளும், கருணை மிக்கவளும்(உதாராம்), தாமரையைத் தாங்கியவளும்(பத்மினீம்), ஈம் என்ற பீஜமந்திரத்தின் பொருளாகத் திகழ்பவளுமான அந்த மஹாலக்ஷ்மியை நான் சரணடைகிறேன். தேவியே உன்னை வேண்டுகிறேன், என் வறுமை (அலக்ஷ்மீ) விலகுமாறு அருள்வாய்!

 

(உ.வே. CR ஸ்ரீ நிவாச அய்யங்கார் உரை:

அடியார்களின் ஆசைகள் யாவற்றையும் பூர்ணமாக அளித்து அநுக்ரஹிப்பவள் ஸ்ரீதேவி. ஸ்ரீமந் நாராயணன் பூலோகத்தில் அவதரித்தால் தானும் அவ்வாறே அவதரித்து அடியார்களை ரக்ஷிக்கிறாள். ஸ்ரீமஹாலக்ஷ்மி ஈ என்ற மூலசப்தத்தில் குறிக்கப் படுகிறாள். அத்தகைய தாய் தாமரைமேல் அமர்ந்திருக்கிறாள். அவளே எனக்குக் கதி. அவளையே அடைக்கலமாக அடைகிறேன். ஹே தேவி, என்னுடைய தரித்திரத்தை அழி. அறியாமையைப் போக்கு. குற்றங்களை நீக்கு.

[ஸ்ரீஸூக்தத்தின் ஸாரத்தினும் ஸாரமாக விளங்குவது இந்த ஶ்லோகமே. ஸ்ரீ மஹாலக்ஷ்மியிடம் சரணமடைவதை இதுவே விளக்குகிறது. எல்லாப் பயன்களையும் அளிக்கவல்லது.]     )

 

 

 

 

தித்யவர்ணே தபஸோ(அ)திஜாதோ

வனஸ்பதிஸ்தவ வ்ருக்ஷோ(அ)த பில்வ: –

தஸ்ய ஃபலானி தபஸா நுந்து

மாயாந்தராயாச்பாஹ்யா அலக்ஷ்மீ:                                                                   6

 

சூரியனின் நிறத்தவளே, காட்டிற்குத் தலைவனாகிய(வனஸ்பதி) வில்வமரம் உன் தவத்தால் உண்டாயிற்று (அதிஜாத). அதன் பழங்கள் அறியாமையாகிய(மாயா) அகத் தடையையும்(அந்தராயா), அமங்கலமாகிய புறத் தடைகளையும்(பாஹ்யா) உன் தவத்தாலேயே அழிக்கட்டும்!

 

(உ.வே. CR ஸ்ரீ நிவாச அய்யங்கார் உரை:

சூரியகாந்திக்கு நிகரான தேஜோமயமானவளே, நினதனுக்ரஹத் தாலேயே விருக்ஷராஜன் எனத்தக்க வில்வமரம் உண்டாயிற்று. அம்மரத்தின் பழங்கள் எனது அஞ்ஞான இருளை அகற்றட்டும். ஐம்புலன்களாலும் உண்டான பாவங்களை நீக்கட்டும்.)

 

உபைதுமாம் தேவஸக:

கீர்த்திச்ச மணினா ஸஹ

ப்ராதுர் பூதோ(அ)ஸ்மி

ராஷ்ட்ரே(அ)ஸ்மின் கீர்த்திம்ருத்திம் ததாது மே                                                 7

 

குபேரனும்(தேவஸக), புகழின் தேவனும் செல்வங்களுடன் (மணினா ஸஹ) என்னை(மாம்) நாடி(உபைது) வரவேண்டும். உன் அருள் நிறைந்த இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன். எனக்குப் பெருமையும் (கீர்த்தி),  செல்வமும் (ரித்தி) தருவாய் (ததாது)!

 

(உ.வே. CR ஸ்ரீ நிவாச அய்யங்கார் உரை:

ஹே தேவி, தேவ ஸஹாயனான மாதவன் எனக்கு அருள் புரியட்டும். கல்வியாலும் செல்வத்தாலும் எனக்குப் புகழ் உண்டாகட்டும். இவ்விலகில் பிறந்துவிட்டேன். உன்னையே வேண்டுகிறேன். உன் அனுக்ரஹத்தால் செல்வக் கோமான், குபேரன், என் நண்பனாகட்டும். புகழ்க்கன்னி என்னைச் சேரட்டும். சிந்தித்ததெல்லாம் தரும் சிந்தாமணி என்ன தாகட்டும்.)

 

 

 

க்ஷுத்பிபாஸாமலாம் ஜ்யேஷ்ட்டாமலக்ஷ்மீம் நாயாம்யஹம்

பூதிமஸம்ருத்திம்ச ச ஸர்வாம் நிர்ணுத மே க்ருஹாத்                                  8

 

பசி, தாகத்தினால் மெலிந்தவளும் (க்ஷுத்பிபாஸமலாம்), ஸ்ரீதேவிக்கு முன்னாள் பிறந்தவளுமான மூதேவியை (அலக்ஷ்மீ) நான் விலக்குகிறேன். (நாயாமி). என் வீட்டிலிருந்து எல்லா ஏழ்மைகளையும் (அபூதிம்) வறுமையையும்(அசம்ருத்தி) அகற்றி(நிர்ணுத) அருள்வாய்!

 

(உ.வே. CR ஸ்ரீ நிவாச அய்யங்கார் உரை:

ஹே தேவியே, பசி, தாகம்,முதலிய பலவற்றாலும் வருத்தும் உன் அக்காளை உன் அனுக்ரஹத்தால் வெளியே விரட்டுகிறேன். இனி, உழைப்பின்பயன், முன்னேற்றம் ஆகியவற்றைத் தடுக்கும் ஏழ்மை, பற்றாக்குறை முதலிய தடைகளை என் இருப்பிடத்தினின்றும் நீயே விரட்ட வேண்டும்.)

 

 

ந்தத்வாராம் துரார்ஷாம் நித்ய புஷ்ட்டாம் கரீஷிணீம்

ச்வரீக்ம் ஸர்வபூதானாம் தாமிஹோபஹ்வயே ச்ரியம்                                 9

 

நறுமணத்தின் இருப்பிடமானவளும், வெல்லப்பட முடியாதவளும், என்றும் வலிமையைத் தருபவளும், எல்லாம் நிறைந்தவளும் (கரீஷினீம்), எல்லா உயிர்களின் தலைவியுமான மஹாலட்சுமியை இங்கே(இஹ) எழுந்தருளப்(உபஹ்வயே) பிரார்த்திக்கிறேன்.

 

(உ.வே. CR ஸ்ரீ நிவாச அய்யங்கார் உரை:

ஸுகந்த ஸ்வரூபமே ஸ்ரீதேவி. அவள் ஒருவராலும் அவமதிக்க முடியாதவள். அஞ்ஞானிகளால் அறியப் படாதவள். அவள் அருளாலேயே எல்லா உயிர்களும் பெரும் பாக்கியங்களைப் பெறுகின்றன. அந்த ஸ்ரீதேவியை எப்போதும் என் கிருஹத்தில் வாசம் செய்யும்படி நமஸ்கரித்து வேண்டுகிறேன்.)

 

மனஸ: காமமாகூதிம் வாசஸ்ஸத்யமசீமஹி

சூனாம் ரூபமன்னஸ்ய மயி ஸ்ரீ ச்ரயதாம் யச:                                                   10

 

திருமகளே (ஸ்ரீ), மனத்தில் எழுகின்ற நல்ல ஆசைகளையும்(காமம்), மகிழ்ச்சியையும்(ஆகூதிம்), வாக்கில் உண்மையையும், பசுக்களின் நிறைவால் மற்றும் உணவின் நிறைவால் ஏற்படுகின்ற இன்பத்தையும் நான் அனுபவிக்கவேண்டும்(அசீமஹி). எனக்கு(மயி) கீர்த்தி (யச:) உண்டாகட்டும்.

 

(உ.வே. CR ஸ்ரீ நிவாச அய்யங்கார் உரை:

ஆகவே, நாம் திண்ணமுடன் பண்ணின துதியால் எண்ணின யாவும் – பசியும், தானியமும், புகழும் – பெற்றவராவோம். ஸ்ரீதேவி என்னிடம் எப்போதும் பிரியாது அருள்புரியட்டும்.)

 

கர்மேன ப்ரஜா பூதா மயி ஸம்பவ கர்

ச்ரியம் வாசய மே குலே மாதரம் பத்ம மாலினீம்                                     11

 

கர்தம முனிவரே, உமக்கு மகளாகப் பிறந்த மஹாலட்சுமி என்னிடம் தோன்றவேண்டும் (ஸம்வ). தாமரைமாலை அணிந்தவளும், செல்வத்தின் தலைவியும், அன்னையும் ஆகிய அவளை என் குலத்தில் தங்கச் செய்ய வேண்டும்.

 

(உ.வே. CR ஸ்ரீ நிவாச அய்யங்கார் உரை:

ஹே, கர்தம ப்ரஜாபதியே, ஸ்ரீதேவி தங்களால் வளர்க்கப் பட்டவள். தங்களுக்கு அவளுடைய கடாக்ஷம் எப்போதும் உண்டு. ஆகவே, தாங்கள் எனக்கு அனுக்ரஹம் செய்யவேண்டும். எங்கள் குலத்தில் தலைமுறை தலைமுறையாக என்றும் ஸ்ரீதேவியின் பரிபூர்ண அநுக்ரஹம் நிலைத்திருக்கும்படி ஸ்ரீதேவியிடம் தாங்கள் சிபாரிசு செய்யவேண்டும்.)

 

 

ஆப: ஸ்ருஜந்து ஸ்னிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே

நி ச தேவீம் மாதரம் ச்ரியம் வாஸய மே குலே                                                       12

 

திருமகளின் மகனான சிக்லீதரே! தண்ணீர் (ஆப:) நல்ல உணவுப் பொருள்களை (ஸ்னிக்தானி) உற்பத்தி (ஸ்ருஜந்து) செய்யட்டும். என் வீட்டில் நீங்கள் வசிக்க வேண்டும். தேவியும் உமது அன்னையுமான திருமகளை என் குலத்தில் வாழும்படி(வாஸய) அருளவேண்டும்.

 

(உ.வே. CR ஸ்ரீ நிவாச அய்யங்கார் உரை:

ஹே, சிக்லீதரே, ஜலதேவதைகள் என் கிருஹத்தை நெய், தயி, தேன் போன்ற இன்சுவைப் பொருள்களால் நிரப்பட்டும். தாங்கள் என் கிருஹத்தில் எப்போதும் வசிக்குமாறு, என் வம்சத்தில் எப்போதும் நிலைத்து ஸ்ரீமஹாலக்ஷ்மி வாசம் செய்யச் சிபாரிசு செய்யவேண்டும்.)

 

 

ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்ட்டிம் பிங்லாம் பத்ம மாலினீம்

சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ                                  13

 

அக்கினிதேவனே, கருணை மனத்தினளும்(ஆர்த்ராம்), தாமரையில் உறைபவளும், உலகை உணவூட்டி(புஷ்ட்டிம்) வளர்ப்பவளும், குங்கும நிறத்தவளும் (பிங்கலாம்), தாமரை மாலை அணிந்தவளும், பொன்மயமானவளுமான (ஹிரண்மயீம்), மஹாலட்சுமியை என்னிடம் எழுந்தருளச் செய்யவேண்டும்.

 

(உ.வே. CR ஸ்ரீ நிவாச அய்யங்கார் உரை:

ஸ்ரீமத் நாராயணமூர்த்தியே, ஸ்ரீதேவி நெஞ்சகத்தே ஈரமுள்ளவள். அன்பர் மனத்தாமரையில் வீற்றிருப்பவள். புஷ்டிக்கு (நிறைவுக்கு) அதிதேவதை. யஜ்ஞஸ்வரூபிணி. தாமரை மலரை அணிந்தவள். எல்லோரையும் மகிழ்விப்பவள். அவள் என் கிருஹத்தையே நிலையான வாஸஸ்தலமாக்க் கொள்ளூம்படி தாங்கள் அனுக்ரஹம் செய்ய வேண்டும்.)

 

ஆர்த்ராம் ய: கரிணீம் யஷ்ட்டிம் ஸுவர்ணாம் ஹேம மாலினீம்

ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ                               14

 

அக்கினிதேவனே, கருணை மனத்தினளும்(ஆர்த்ராம்), கம்பீரமானவளும், செங்கோல் ஏந்தியவளும் (யஷ்ட்டிம்), அழகிய நிறத்தவளும் (ஸுவர்ணாம்), பொன்மாலை அணிந்தவளும் (ஹேமமாலினீம்) சூரியனைப்போல் பிரகாசிப்பவளும், பொன்மயமானவளுமான (ஹிரண்மயீம்), மஹாலட்சுமியை என்னிடம் எழுந்தருளச் செய்யவேண்டும்.

 

(உ.வே. CR ஸ்ரீ நிவாச அய்யங்கார் உரை:

ஸ்ரீமந் நாராயணமூர்த்தியே, ஸ்ரீதேவி அமுதூறும் திருமேனி உடையாள். செங்கோலேந்தும் கரமுடையாள். ஸுவர்ண நிறமுடையாள். பொன்மாலை அணிந்தவள். புனித்த் தெய்வ வடிவுடையாள். கோடி சூரிய ப்ரகாசமுடையாள். அவள் என்னகத்தில் இடையூறின்றி இனிது வாழ்க.)

 

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ மனபகாமினீம் யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோ(அ)ச்வான் விந்தேயம் புருஷானஹம்               15

 

அக்கினி தேவனே, யாரால்(யஸ்யாம்) ஏராளமான பொன்னும், பசுக்களும்(கா), பணிப் பெண்களும்(தாஸ்ய), குதிரைகளும்(அச்வான்), ஆட்களும்(புருஷான்) நான் பெறுவேனோ, அந்தத் (தாம்) திருமகள் என்னை விட்டு விலகாதிருக்குமாறு(அனபகாமினீம்) செய்யவேண்டும்.

 

(உ.வே. CR ஸ்ரீ நிவாச அய்யங்கார் உரை:

ஸ்ரீ நாராயணமூர்த்தியே, பொன், பொருள், கால்நடைச்செல்வம், சேவகர், புத்ரபௌத்ராதிகள் முதலிய யாவற்றையும் நல்கும் மோக்ஷலக்ஷ்மி என்றென்றும் என்னுடன் இருக்குமாறு அருள்புரிய வேண்டும்.)

 

ய: சுசி: ப்ரயதோ பூத்வா ஜுஹூயாதாஜ்ய மன்வஹம்

ச்ரிய: பஞ்சதசர்ச்சம் ச ஸ்ரீகாம: ஸததம் ஜபேத்                                                     16

 

யார் திருமகளின் அருளை வேண்டுகிறானோ(ஸ்ரீகாம:), அவன் தூயவனாகவும்(சுசி:), புலன்களை அடக்கியவனாகவும் (ப்ரயத) இருந்துகொண்டு தினமும்(அன்வஹம்) நெய்யால் (ஆஜ்யம்) ஹோமம் (ஜுஹூயாத்) செய்யவேண்டும். திருமகளின் மேற்கண்ட பதினைந்து (பஞ்சதசர்ச்சம்) மந்திரங்களையும் எப்போதும் ஜபம் செய்யவேண்டும்.

 

ஆனந் கர்மச்சைவ சிக்லீத இதி விச்ருதா: ரிஷயஸ்தே த்ரய:

ப்ரோக்தாஸ்ஸ்வயம் ஸ்ரீரேவ தேவதா                                                          17

 

பிரபலமானவர்களும்(விச்ருதா:) முனிவர்களுமான ஆனந்தர், கர்தமர், சிக்லீதர் ஆகிய மூவரும்(தே த்ரய:) இந்த ஸூக்தத்தின் ரிஷிகள் (ப்ரோக்தா). மஹாலட்சுமியே(ஸ்வயம் ஸ்ரீ) தேவதை.

 

த்மானனே பத்ம ஊரூ பத்மாக்ஷீ பத்ம ஸம்வே

த்வம் மாம் ஜஸ்வ பத்மாக்ஷீ யேன ஸௌக்யம் லபாம்யஹம்          18

 

தாமரை போன்ற முகத்தவளே (பத்மானனே), தாமரை போன்ற கால்களை உடையவளே (பத்ம ஊரூ), தாமரை போன்ற கண்களை (பத்மாக்ஷீ) உடையவளே, தாமரையில் தோன்றியவளே (பத்மஸம்வே), நான் எதனால்(யேன) வளம் பெறுவேனோ(லபாமி), அதை எனக்கு நீ அருள்வாய்(ஜஸ்வ).

 

ச்தாயீ கோதாயீ தாயீ மஹானே

னம் மே ஜுஷதாம் தேவி ஸர்வ காமாம்ச்தேஹிமே                        19

 

குதிரைகளைத் தருபவளும், பசுக்களைத் தருபவளும், செல்வத்தைத் தருபவளும், செல்வத்தின் தலைவியுமான மஹாலட்சுமியே! எல்லா ஆசைகளும் நிறைவேறுவதால் வரும் இன்பத்தைத் (ஜுஷதாம்) தருகின்ற செல்வத்தை எனக்கு அருள்வாய்.

 

புத்ர பௌத்ர னம் தான்யம் ஹஸ்த்யச்வாதி கவே ரதம்

ப்ரஜானாம் வஸி மாதா ஆயுஷ்மந்தம் கரோதுமாம்                            20

 

பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், செல்வம், தானியம், யானை(ஹஸ்தி), குதிரை, முதலியவையும்(ஆதி) பசுக்கள்(வே), தேர்கள் எல்லாம் தருவாய். மக்களுக்கு நீ தாயாக இருக்கிறாய்(வஸி), என்னை நீண்ட ஆயுள் உள்ளவனாக ஆக்குவாய்.

 

னமக்னிர் னம் வாயுர்னம் ஸூர்யோ னம் வ்ஸு:

னமிந்த்ரோ ப்ருஹஸ்பதிர் வருணம் னுமச்னுதே                             21

 

அக்கினிதேவனும், வாயுதேவனும், சூரியபகவானும், வசுக்களும், இந்திரனும், பிருஹஸ்பதியும், வருணதேவனும் தத்தம் செல்வத்தை உன் அருளாலேயே அனுபவிக்கிறார்கள்(அச்னுதே).

 

சந்த்ராபாம் லக்ஷ்மீமீசானாம் ஸூர்யாபாம் ச்ரியமீச்வரீம்

சந்த்ர ஸூர்யாக்னி வர்ணாபாம் ஸ்ரீமஹாலக்ஷ்மீமுபாஸ்மஹே      22

 

சந்திரனைப்போல் குளிர்ந்து பிரகாசிப்பவளும், தெய்வங்களின் ஆற்றலாக விளங்குபவளும்(லக்ஷ்மீம்), சூரியனைப் போல் பிரகாசிப்பவளும், திருமகளும், தலைவியும், சந்திரன் சூரியன் அக்கினி ஆகிய மூவரையும் மகிமையாகக் கொண்டவளுமான ஸ்ரீமஹாலக்ஷ்மியை வழிபடுகிறோம்(உபாஸ்மஹே).

 

வைனதேய ஸோமம் பி ஸோமம் பிது வ்ருத்ரஹா

ஸோமம் னஸ்ய ஸோமினோ மஹ்யம் ததாது              23

 

கருடனே (வைனதேய), சோமரசத்தைப் பருகு (பி), விருத்தாசுரனைக் கொன்றவனான இந்திரன் சோமரசத்தைப் பருகட்டும். சோமயாகம் செய்ய விரும்புகின்ற எனக்கு ஏராளமான செல்வத்தைத் தரட்டும்.

 

ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந லோபோ நாசுபாமதி: வந்தி க்ருத புண்யானாம் க்தானாம் ஸ்ரீஸூக்தம் ஜபேத்ஸதா                        24

 

புண்ணியம் செய்த பக்தர்களுக்குக் கோபம் வருவதில்லை. பொறாமை வருவதில்லை, கருமித்தனம் வருவதில்லை, கெட்டபுத்தி வருவதில்லை. பக்தி பெறுவதற்காக அவர்கள் ஸ்ரீசூக்தத்தை எப்போதும் ஜபிக்கவேண்டும்.

 

வர்ஷந்து தே விபாவரி திவோ அப்ரஸ்ய வித்யுத:

ரோஹந்து ஸர்வ பீஜான்யவ ப்ரஹ்ம த்விஷோஜஹி                 25

 

உன் கருணையால் மேகங்கள் மின்னலுடன் (அப்ரஸ்யவித்யுத) இரவும் (விபாவரி) பகலும் (திவ) மழை பொழியட்டும் (வர்ஷந்து). எல்லா விதைகளும் நன்றாக முளைத்து வளரட்டும்(அவரோஹந்து). கடவுளை நிந்திப்பவர்கள்(ப்ரஹ்மத்விஷ:) விலக்கிவிடு (ஜஹி).

 

 

 

த்மப்ரியே பத்மினி பத்மஹஸ்தே பத்மாலயே பத்லாயதாக்ஷி

விச்வப்ரியே விஷ்ணு மனோ(அ)னுகூலே த்வத்பாத்மம் மயி ஸன்னித்ஸ்வ:                                                                                              26

 

தாமரையை விரும்புபவளே, தாமரை மகளே, தாமரையைக்கையில் ஏந்தியவளே, தாமரையில் வீற்றிருப்பவளே, தாமரையிதழ் போன்ற அகன்ற கண்களை உடையவளே, உலகிற்குப் பிரியமானவளே, விஷ்ணுவின் மனத்துக்கு உகந்தவளே, உனது திருவடித் தாமரைகளை என்மீது வைத்தருள்வாய்!(ஸன்னித்ஸ்வ)

 

யா பத்மாஸனஸ்தா விபுல கடிதடீ பத்மபத்ராயதாக்ஷி ம்பீரா வர்த்த நாபி: ஸ்தனபர நமிதா சுப்ரவஸ்த்ரோத்தரீயா லக்ஷ்மீர் திவ்யைர் ஜேந்த்ரைர் மணிணகசிதை: ஸ்னாபிதா ஹேம கும்பை: நித்யம் ஸா பத்மஹஸ்தா மம வஸது க்ருஹே ஸர்வ மாங்ல்ய யுக்தா                                   27

 

யார் தாமரையில் வீற்றிருப்பவளோ, பருத்த பின்புறங்களை யுடையவளோ, தாமரையிதழ் போன்ற கண்களையுடையவளோ, கம்பீரமான தொப்புள் உடையவளோ, மார்பகங்களின் பாரத்தால் தலை குனிந்தவளோ, வெண்ணிறமான ஆடையும் மேலாடையும் தரித்தவளோ, ரத்தினங்கள் பதித்த பொற்கலச நீரைக் கொண்டு தேவலோகத்தின் சிறந்த யானைகளால் அபிஷேகம் செய்யப்படுபவளோ, தாமரையைக் கையில் தாங்கியவளோ, எல்லா மங்கலமும் நிறைந்தவளோ அந்த மஹாலக்ஷ்மி என் வீட்டில் என்றென்றும் வசிக்க வேண்டும்.

 

லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜதனயாம் ஸ்ரீரங்கதாமேச்வரீம்

தாஸீபூத ஸமஸ்த தேவ வனிதாம் லோகைக தீபாங்குராம்

ஸ்ரீமன்மந் கடாக்ஷ லப்த விப்ரஹ்மேந்த்ங்காதராம் த்வாம் த்ரைலோக்ய குடும்பினீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்ப்ரியாம்            28

 

அதிஷ்டத்துக்கு இருப்பிடமானவளும், பாற்கடலரசனின் மகளும், ஸ்ரீரங்கத்தில் உறைகின்ற தேவியும், தேவலோகப் பெண்கள் அனைவரையும் பணிப்பெண்களாகக் கொண்டவளும், உலகிற்கு ஒரே தீபமாக இருப்பவளும், யாருடைய கடைக்கண் பார்வையைப் பெற்றதால் பிரம்மனும் இந்திரனும் சிவபெருமானும் பெருமை பெற்றார்களோ அவளும், மூன்று உலகங்களையும் குடும்பமாகக் கொண்டவளும், மஹாவிஷ்ணுவுக்குப் பிரியமானவளுமான உன்னை வணங்குகிறேன்.

 

ஸித்த லக்ஷ்மீர் மோக்ஷ லக்ஷ்மீர் ஜயலக்ஷ்மீஸ் ஸரஸ்வதீ

ஸ்ரீலக்ஷ்மீர் வரலக்ஷ்மீச்ச ப்ரஸன்னா மம ஸர்வதா                                 29

 

நினைத்ததை நிறைவேற்றவல்ல ஸித்தலக்ஷ்மியாகவும், முக்தியைத் தரவல்ல மோட்சலக்ஷ்மியாகவும், வெற்றியைத் தரவல்ல ஜயலக்ஷ்மி யாகவும், தாமரைக் குளத்தில் தோன்றியவளாகவும், செல்வத்தைத் தரவல்ல திருமகளாகவும், வரங்களைத் தரவல்ல வரலக்ஷ்மியாகவும் இருக்கின்ற நீ எனக்கு எப்போதும் அருள் நிறைந்தவளாக இருப்பாய்.

 

வராங்குசௌ பாபீதி முத்ராம் கரைர் வஹந்தீம் கமலாஸனஸ்த்தாம் பாலார்க்க கோடி ப்ரதிபாம் த்ரிணேத்ராம் ஜேஹமாத்யாம் ஜகதீச்வரீம் த்வாம்                                                                                                                   30

 

வரம் மற்றும் அபய முத்திரைகளைக் கைகளில் தாங்கியவளும், பாசம் அங்குசம் ஆகிய ஆயுதங்களைக் கைகளில் தாங்கியவளும், தாமரையில் வீற்றிருப்பவளும், கோடி உதய சூரியபிரகாசம் பொருந்தியவளும், மூன்று கண்களை உடையவளும், ஆதிசக்தியும், உலகின் இறைவியுமான அவளை நான் துதிக்கிறேன்.

 

ஸர்வ மங்ல மாங்கள்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே ரண்யே த்ர்யம்கே தேவி நாராயணீ நமோ(அ)ஸ்துதே நாராயணீ நமோ(அ)ஸ்துதே நாராயணீ நமோ(அ)ஸ்துதே                                                                                                        31

 

மங்கலம் அனைத்திற்கும் மங்கலமானவளே, மங்கலத்தைத் தருபவளே, எல்லா நன்மைகளையும் தருபவளே, சரணடைவதற்கு உரியவளே, மூன்று கண்களை உடையவளே, தேவீ நாராயணீ உனக்கு நமஸ்காரம்.

தேவீ நாராயணீ உனக்கு நமஸ்காரம். தேவீ நாராயணீ உனக்கு நமஸ்காரம்.

 

ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே வளதராம்சுந்மால்ய சோபே

பகவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே த்ரிபுவனபூதிகரி ப்ரஸீ மஹ்யம்       32

 

தாமரையை இருப்பிடமாகக் கொண்டவளே, தாமரையைக் கையில் தாங்கியவளே, தூய வெள்ளாடையும் நறுமண மாலையும் அணிந்து அழகாய் விளங்குபவளே, பகவதீ, திருமாலின் துணைவியே, விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுபவளே, மூவுலகையும் வளமளித்துக் காப்பவளே எனக்கு அருள் புரிவாய்

 

விஷ்ணுபத்னீம் க்ஷமாம் தேவீம் மாவீம் மாவப்ரியாம்

விஷ்ணோ: ப்ரிய ஸகீம் தேவீம் நமாம்யச்யுத வல்லபாம்                     33

 

திருமாலின் தேவியும், பூமாதேவியாக இருப்பவளும், துளசிச்செடியாக இருப்பவளும், மாதவனுக்குப் பிரியமானவளும், அவனது மனத்திற்கு உகந்த துணைவியும், அவனுடன் இணைந்தவளுமான தேவியை வணங்குகிறேன்.

 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே விஷ்ணுபத்னீ ச தீமஹி

தன்னோ லக்ஷ்மீ: ப்ரசோயாத். ஓம்                                                 34

 

மஹாலட்சுமியை அறிந்துகொள்வோம், திருமாலின் துணைவியான அவளை அதற்காக தியானிப்போம். அந்த லட்சுமி தேவி நம்மைத் தூண்டுவாளாக.

 

ஸ்ரீவர்ச்சஸ்யமாயுஷ்ய மாரோக்யமாவிதாத் பவமானம் மஹீயதே

னம் தான்யம் பசும் சு புத்ரலாம் தஸம்வத்ஸரம் தீர்மாயு:

ரிண ரோகாதி தாரித்ர்ய பாபக்ஷுபம்ருத்யவ: சோக மனஸ்தாபா நச்யந்து மம ஸர்வதா                                                                                          35

 

மஹாலக்ஷ்மியே, ஆற்றல், வளமான வாழ்க்கை, நல்ல உடல் நிலை இவற்றை எனக்குத் தந்தபடி எப்போதும் காற்று வீசட்டும். செல்வம், உணவுப் பொருட்கள், மிருகங்கள், பிள்ளைச் செல்வங்கள், நூறாண்டுகள் நீண்ட ஆயுள் எல்லாம் எனக்குக் கிடைக்கட்டும். கடன், நோய், வறுமை, பசி, அகால மரணம், பயம், கவலை, மனத்தின் துன்பங்கள் எல்லாம் ஒழியட்டும்.

 

ச்ரியே ஜாத ச்ரிய ஆனிர்யாய ச்ரியம் வயோ  ஜரித்ருப்யோ ததாது

ச்ரியம் வஸானா அம்ருதத்வமாயன் ஜந்திஸத்ய: ஸவிதா விதத்யூன்     36

 

திருமகள் சேர்பவர்களுக்கு செல்வம் சேர்க்கிறது. ஐசுவரியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கிறது. அவர்கள் செல்வத்தில் திளைத்தபடி மரணமற்ற நிலையை அடைகிறார்கள். விரைவாக புகழையும் வெற்றியையும் அடைகிறார்கள்.

 

 

ஸந்த்தம் ஸந்தீயதே ப்ரஜயா பசுபி:

ய ஏவம் வேத                                                                                                          37

 

எல்லா நன்மையும் திருமகளேதான் – இவ்வாறு அறிபவன் திருமகளை அடைகிறான். மந்திரங்களுடன் யாகம் எப்போதும் அப்படி செய்பவனுக்கு மக்கட் செல்வமும் கால் நடைச் செல்வமும் கிடைக்கிறது. இவ்வாறு அறிய வேண்டும்.

 

ஓம் மஹா தேவ்யை வித்மஹே விஷ்ணுபத்னீ ச தீமஹி

தன்னோ லக்ஷ்மீ: ப்ரசோதயாத்.                                                                      38

 

மஹாதேவியான திருமகளை அறிந்துகொள்வோம், திருமாலின் துணைவியான அவளை அதற்காக தியானிப்போம். அந்த லட்சுமி தேவி நம்மைத் தூண்டுவாளாக.

 

ஓம் சாந்தி:  சாந்தி: சாந்தி:

 

***

ரிக் எண்ணும் பலனும்:

1 தேஜஸ், கீர்த்தி 2. பசு, சேவகர் 3. பகையழிவு 4. கல்வி 5. ஐசுவரியவிருத்தி

6 நிலையான செல்வம் 7 குபேரன் ஆசியும் சிந்தாமணி ஆசியும் 8 தரித்திரம் நீங்க 9 தான்ய விருத்தி 10 வாக்குச்சாதுர்யம் 11 வம்சவிருத்தி 12 உயர்பதவி 13 வாகனாதிகள் 14 ராஜ்யபோகம் 15 கல்வி முதலிய செல்வங்கள்.

 

க ஸ்ரீதரன்  எழுதி நர்மதா பதிப்பகம் பிரசுரித்த “வளம் தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரங்கள்” நூலிலிருந்து:

வசிஷ்டஸ்ம்ருதி நூலில் உள்ள ஸ்ரீஸூக்த ஹோமப்ரயோகம் என்னும் பகுதி, ஒருவருடம் படித்தால் மிகப்பெரிய செல்வம் கைகூடும் என்று சொல்கிறது. ஸ்ரீ போதாயனர் இந்த ஸூக்தத்தினால் மிகவும் நன்மை அளிக்கும் செல்வங்கள் கிடைப்பது உறுதி என்கிறார்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.