ஸ்ரீ ரங்க நாதாஷ்டகம்

ஸ்ரீ ரங்க நாதாஷ்டகம்

 

ஆனந்தரூபே நிஜபோதரூபே ப்ரஹ்ம ஸ்வரூபே ச்’ருதிமூர்த்திரூபே

ச’சாங்கரூபே ரமணீயரூபே ஸ்ரீரங்கரூபே ரமதாம் மனோ மே                        1

 

காவேரிதீரே கருணா விலோலே மந்தாரமூலே த்ருதசாரு கேலே

தைத்யாந்த காலே(அ)கில லோகலீலே ஸ்ரீரங்கலீலே ரமதாம் மனோ மே 2

 

லக்ஷ்மீ நிவாஸே ஜகதாம் நிவாஸே ஹ்ருத்பத்ம வாஸே ரவிபிம்ப வாஸே

க்ருபா நிவாஸே குணவ்ருந்த வாஸே ஸ்ரீரங்க ரமதாம் மனோ மே                3

 

ப்ரஹ்மாதிவந்த்யே ஜகதேகவந்த்யே முகுந்தவந்த்யே ஸுரநாதவந்த்யே

வ்யாஸாதிவந்த்யே ஸநகாதிவந்த்யே ஸ்ரீரங்கவந்த்யே ரமதாம் மனோமே  4

 

ப்ரஹ்மாதிராஜே கருடாதிராஜே வைகுண்ட்ட ராஜே ஸுரராஜ ராஜே

த்ரைலோக்ய ராஜே(அ)கில்லோக ராஜே ஸ்ரீரங்க ராஜே ரமதாம் மனோ மே 5

 

அமோகமுத்ரே பரிபூர்ண நித்ரே ஸ்ரீயோக நித்ரே ஸஸமுத்ர நித்ரே

ச்’ரிதைக பத்ரே ஜகதேக நித்ரே ஸ்ரீரங்க ராஜே ரமதாம் மனோமே               6

 

ஸசித்ர சா’யீ புஜகேந்த்ர சா’யீ நந்தாங்க சா’யீ கமலாங்க சா’யீ

க்ஷீராப்தி சா’யீ வடபத்ர சா’யீ ஸ்ரீரங்க சா’யீ ரமதாம் மனோ மே                   7

 

இதம்ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம் புனர் நசாங்கம் யதி சாங்க மேதி

பாணௌ ரதாங்கம் ச’ரணாம்பு காங்கம் யானே விஹங்கம் ச’யனே புஜங்கம் 8

 

ரங்க நாதாஷ்டகம் புண்யம் ப்ராதருத்தாய ய:படேத்

ஸர்வான் காமாநவாப்நோதி  ரங்க ஸாயுஜ்ய மாப்னுயாத்

***

ஏகாதசியன்று இரவில் விழித்திருக்கும் போது

இந்த ஸ்தோத்திரத்தை 1008 முறை ஜெபிக்கலாம். இதை சொல்பவர்களுக்கு, செல்வவளமும், பிறப்பற்ற நிலையும் அமையும்.

 

* காவிரி நதியின் நடுவில் ஏழுமதில்களால் சூழப்பட்டு, நடுவில் தாமரை மொட்டுப் போன்று விளங்கும் விமானத்தின் கீழ், மிகவும் மென்மையான ஆதிசேஷனின் உடலாகிய கட்டிலில் யோக நித்திரையில் துயில்பவரும், இடது கையை இடுப்பில் வைத்திருப்பவரும், ஸ்ரீதேவியும், பூதேவியும் தாங்கி நிற்கும் திருப்பாதங்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை வணங்குகிறேன்.

* கஸ்தூரி திலகம் இட்டவரும், காது வரை நீண்டிருக்கும் திருக்கண்களைக் கொண்டவரும், முத்துக்களால் இழைக்கப்பட்ட கிரீடத்தைச் சூடியவரும், தன்னைத் தரிசிப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்பவரும், தாமரை மலர் போன்ற திருமுகத்தைக் கொண்டவருமான ரங்கநாதரே! உன் தரிசனம் எப்போது கிடைக்கும்?

* காவிரிக்கரையின் அருகில் வீற்றிருப்பவரும், இந்திர நீலமணியை போன்ற பிரகாசமுடையவரும், மது என்னும் அரக்கனைக் கொன்றவருமான ரங்கநாத மூர்த்தியே! உம்மை ஹே நாராயணா! ஹே முராரே! ஹே கோவிந்தா! என்று திருநாமங்களை சொல்லி மகிழும் பாக்கியம் என் வாழ்நாளில் எப்போது கிடைக்கும்?

* எப்போது காவிரியில் ஸ்நானம் செய்து என் பாவங்களைப் போக்குவேன்? அடர்ந்த மரங்களைக் கொண்டதும், ரம்மியமானதும், பசுமையானதுமான காவிரிக்கரையில் எப்போது நான் வாசம் செய்வேன்? ஆதிசேஷன் மீது துயில்பவரும், செந்தாமரைப்பூ போன்ற கண்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை எப்போது சேவிப்பேன்?

* தேவேந்திரனின் அமரலோகத்தில் வாசம் செய்து, தேவாமிர்தத்தைப் பருகும் பாக்கியம் எனக்கு வேண்டாம். ஸ்ரீரங்கநாதா! உம் பட்டணத்து வீதியில் திரியும் நாயாகப் பிறக்கும் பாக்கியத்தை எனக்கு கொடுப்பீராக.

* ஸ்ரீரங்கத்தையும், காஞ்சிபுரத்தையும், திருப்பதியையும், அஹோபிலத்தையும், சிம்மாசலத்தையும்(சோளிங்கர்), கூர்மத்தையும்(ஆந்திரா), புரு‌ஷோத்தமத்தையும், பத்ரிகாசிரமத்தையும், நைமிசாரண்யத்தையும், அழகு பொருந்திய துவாரகா பட்டினத்தையும், பிரயாகையையும், மதுராபுரியையும், அயோத்தியையும், கயாக்ஷத்திரத்தையும், புஷ்கரத்தையும், சாளக்கிராமத்தையும் நேரில் கண்டு உம் திருப்பாதங்களை சேவிக்கும் பாக்கியத்தை அருள் செய்வீராக.

* “பசியாக இருக்கிறது. அதனால் உடம்பு நடுங்குகிறது’ என்று கூறினால் கருணை கொண்ட தாய், எப்படி குழந்தையை நோக்கி ஓடிவருவாளோ, அதுபோல பக்தர்களின் துன்பத்தைப் போக்க ஓடிவந்து அருள்செய்யும் ரங்கநாதரே! உம்மைப் பணிந்து வணங்குகிறேன்.

– See more at: http://astrology.dinamani.com/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.