ஸௌந்தர்யலஹரி ஒரு மந்த்ர சாஸ்த்ரம்

இந்த நூல் சிறந்த மந்த்ரஸாஸ்த்ரமாக போற்றப்படுகிறது.  இதை எழுதியவர் யார் என்பது குறித்து நிலவிவரும் பல கருத்துக்கள்:

 

  • லிங்கபுராணத்தில் விநாயகர் வாழ்த்தில், இது மஹாமேரு மலையில் விநாயகரால் எழுதப்பட்ட தென்று கூறப்பட்டுள்ளது.

 

  • மேரு மலையில் எழுதிவைத்தவர் புஷ்பதந்தர் என்றும், ஆனால் அதற்குமுன்பே அது கைலாஸ மலையில் சிவாலயத்தின் மதிற்சுவரில் எழுதப் பட்டிருந்தது என்றும் ஒரு வரலாறு உண்டு.

 

  • மேரு மலையில் எழுதப்பட்டிருந்ததை கௌடபாதர் கிரகித்துப் பின் அதை ஆதிசங்கரருக்கு உபதேசம் செய்த்தாக ஸௌந்தர்யலஹரீயைத் தமிழில் மொழிபெயர்த்து பாடலாக்கிய வீரைக் கவிராஜ பண்டிதர் கூறுகிறார்.

 

  • ஆதிசங்கரரே கைலாஸ மலையிலிருந்து கொண்டுவந்தார் என்றும் ஆனால் அவருக்குக் கிடைத்தது ஆனந்தலஹரி எனப்படும் நாற்பத்தொரு சுலோகங்கள் மட்டுமே என்றும், பிற்பாதியில் உள்ள ஐம்பத்தொன்பது சுலோகங்களையில் சங்கரர் தாமே எழுதிப் பூர்த்தி செய்தார் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

 

  • பொதுவாக ஸௌந்தர்யலஹரி என்னும் நூலின் பெரும்பகுதி ஆதிசங்கரரால் எழுதப்பட்டது என்பதிலும், முதன் முதலில் உலகுக்கு அவராலேயே அளிக்கப் பட்டது என்பதிலும் ஐயமில்லை.

 

இந்த நூல் சாக்த ஆகமத்தின் ஸமயாசார தத்துவத்தின் ஸாராம்சமாக உள்ளது. இதற்கு முப்பத்தாறு வியாக்கியானங்கள் காணப் படுகின்றன. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரிஸ்ஸா தேசத்தில், பிரதாபருத்ர தேவருடைய சபையில், இடம் பெற்றிருந்த லல்லர் என்ற பட்டப்பெயர் பெற்றிருந்த லகஷ்மீதரருடைய வியாக்கானம் விரிவானதும் அதிகம் ப்ரசாரத்தில் இருப்பது. கைவல்யாசிரமர் எழுதிய ஸௌபாக்கியவர்த்தினி மற்றும் காமேசுவரஸூரி எழுதிய அருணாமோதினீ சில சிறப்பான வியாக்கானங்கள் ஆகும்.

 

[[ தந்த்ர ஸாஸ்ர முறைப்படி இந்நூல் ஸ்ரீசக்ரத்திலும், நம் உடலில் மறைந்து காணப்படும் யோகசக்கரங்களைக் குறித்த விஷயங்களையும் போதிக்கிறது. மிகப்பெரிய மந்த்ர ஸாஸ்த்ரமாக கருதப்படுகிறது. For better illumination on these matters, reference may be made to the following books: (1)Varivasyaa Rahasya by Sri Bhaaskararaaya, (2)The Serpent Power by Arthur Avalon and (3)The Chakras by C W Leadbeater      ] NGS]]

 

இந்நூலில் உள்ள ஒவ்வொரு ஸ்லோகமும் தனித்தனி மந்திரமாக, பிரத்யேக பலன்களுக்காக ஜபிக்கப்படுகிறது.    

Advertisements

2 thoughts on “ஸௌந்தர்யலஹரி ஒரு மந்த்ர சாஸ்த்ரம்

  1. ஸௌந்தர்யலஹரீயைத் தமிழில் மொழிபெயர்த்து பாடலாக்கிய வீரை வீரராஜ பண்டிதர் கூறுகிறார். நீங்கள் குறிப்பிட்ட புலவரின் சரியான பெயர் – வீரைக் கவிராஜ பண்டிதர்- நன்றி

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.