ஸப்த மாதர்கள்

ஸப்த மாதர்கள்

பிரம்மனின் சக்தியே ப்ராஹ்மீ;  விஷ்ணுவின் சக்தியே வைஷ்ணவி;  இந்திரனின் சக்தியே இந்திராணி; ருத்ரனின் சக்தியே மாஹேச்வரி; யமனின் சக்தியே வாராஹி; முருகனின் சக்தியே கௌமாரி. காளிகாதேவியான சாமுண்டாதேவி மேற்சொல்லப்பட்ட ஷண்மாதாக்களுக்கும் முதல்வியாக ஸ்ரீ புவனேஸ்வரியால் அமர்த்தப்பெற்றாள்.

 

ப்ராம்ஹீ

 

மது, கைடப அசுரர்களின் வதத்திற்குப் பிறகு, உலகை ஸ்ருஷ்டிக்கும்படி புவனேஸ்வரி தேவி பிரம்மதேவருக்கு கட்டளையிட, அவர் வேண்டியபடி பிரம்ம தேவருக்கு உதவிசெய்ய தேவியால் அருளப்பட்ட சரஸ்வதி தேவியே ப்ராஹ்மீ என்று போற்றப்படுகிறாள். பிரம்மனின் பெயரின் முதல் எழுத்தாகிய ப்ராம் என்பதே இந்தத்தேவியின் பீஜமாகும்.

 

ஹம்ஸவாகனத்தில், ஆறு கரங்களில் வரதம், அக்கமாலை, ச்ருவம் இவற்றை வலது கரங்களிலும், புத்தகங்களை இடக்கரத்திலும் இருத்தி, வெண்பட்டு உடுத்தி, சக்தியின் திருமுகத்திலிருந்து உதித்தவளாய், போர்க்கோலத்தின்போது ஆயுதங்களுடனும், ஞானத்தினை அளிக்கும்போது வீணாபுஸ்தக தாரிணியாகவும் காட்சி அருளுகிறாள்.

 

த்யானம்:

தண்டம் கமண்டலும் சச்சாத் அக்ஷஸீத்ர மதாபயம்

பிப்ரதீ கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணாஜினோஜ்வலா

 

(அக்கமாலை, கமண்டலம் ஏந்தி, ஹம்ஸம் பூட்டிய விமானத்தில் அமர்ந்து, பிரம்மனின் சக்தியாகிய பிராம்ஹீ தேவி வந்தாள். மேற்கு திக்கு அனைத்தியும் காத்துரக்ஷிக்கும் தேவியிவள். குழந்தை ரூபம் கொண்டு புள்ளிமானின் தோலை ஆடையாக அணிபவள்.)

 

மந்த்ரம்

ஓம் ப்ராம் ப்ராம்ஹை நம:

ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:

 

காயத்ரீ

ஓம் ப்ரஹ்ம சக்த்யை ச வித்மஹே

பீதவர்ணாயை தீமஹி

தன்னோ ப்ராம்ஹீ ப்ரசோதயாத்

 

மாஹேச்’வரி

 

ஸ்ரீபுவனேஸ்வரியால் ருத்ரனுக்கு அளிக்கப்பெற்ற சக்தியே மாஹேஸ்வரி.

ஈசான திக்கைக் காக்கும் தேவி. தர்மத்தின் ஸ்வரூபமான ரிஷபத்தில் அமர்ந்திருப்பவள். தமோகுணம்.

 

த்யானம்

சூலம் பரச்வதம் க்ஷுத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்

வஹிந்தீ ஹிம ஸங்காசா த்யேயா மாஹேச்வரீ ஸுபா

 

(சூலாயுதம், பரசு மேல் வலக்கரத்திலும், டமருகம், கபாலம் கீழ் வல இடக்கரங்களிலும் ஏந்தி, பனியொத்த நிறத்தினள்.)

 

மந்த்ரம்

ஓம் மாம் மாஹேஶ்வர்யை நம:

ஓம் ஈ ளாம் மாஹேஶ்வரி கன்யகாயை நம:

 

காயத்ரீ

ஓம் ச்வேதவர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ மாஹேச்வரீ ப்ரசோதயாத்

 

கௌமாரீ

முருகனின் சக்தியாகிய ஷஷ்டி, தேவசேனையே இந்த கௌமாரி. பெண்ணுருவம் கொண்ட முருகன் போல், மயில் வாகனம், வேல் ஏந்தியவள்,

சிவந்தனிறத்தவள். செம்பருத்திப்பூ நிறம். 12 கரம்.

 

த்யானம்

அங்குசம் தண்ட கட்வாங்கௌ பாசாம்ச தததீகரை:

பந்தூக புஷ்ப ஸங்காசா கௌமாரீ காமதாயினீ

பந்தூக வர்ணாம் கரிஜாம் சிவாயா

மயூர வாஹாம்து குஹஸ்யசக்திம்

ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டௌ

கட்வாங்கரா சௌ சரணம் ப்ரபத்யே

 

 

மந்த்ரம்

ஓம் கௌம் கௌமார்யை நம:

ஓம் ஊம் ஹாம் கௌமாரீ கன்யகாயை நம:

 

காயத்ரீ

ஓம் சிகி வாஹனாயை வித்மஹே

சக்தி ஹஸ்தாயை தீமஹி

தன்னோ: கௌமாரீ ப்ரசோதயாத்

 

 

வைஷ்ணவீ

ஸ்ரீபுவனேஸ்வரி ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்கு அளித்த சக்தி. பொன் நிறம். கருடவாஹனம்.

 

 

த்யானம்

சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:

தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவீ விப்ரமோஜ்வகை

 

மந்த்ரம்

ஓம் வை வைஷ்ணவ்யை நம:

ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:

 

காயத்ரீ

ச்யாம வர்ணாயை வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்

வாராஹி

 

லலிதாதேவியின் சேனைத்தலைவி. ஸிம்ஹவாஹனம். வாகனம்: மஹிஷம் அல்லது ப்ரேதம். ஸங்கட நிவர்த்தி செய்பவள். யக்ஞவராஹ முகம். முக்கண். அசூயை போக்குபவள். 114 அக்ஷரங்களாலான ம்ருத்யுசாடன வாராஹி மூல மந்திரம் யமபயத்தினைப் போக்கும். நிகரஹ வாராஹி மந்த்ரம் 8 அக்ஷரங்கள். தூம்ரவாராஹி மந்த்ரம் 25 அக்ஷரங்கள்.

 

( இன்னொரு கட்டுரையில் இருந்து :  )

 

த்யானம்

முஸலம் கரவாளாம்ச கேடகம் தத்தீஹலம

கரைர்சதுர்பிர் வாராஹீ த்யேயாகா லகனச்சவி:

 

மந்த்ரம்

ஓம் வாம் வாராஹ்யை நம:

ஓம் வ்ரூம் ஸாம் வாராஹீ கன்யகாயை நம:

 

காயத்ரீ

ஓம் ச்யாமளாயை வித்மஹே

ஹல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வாராஹீ ப்ரசோதயாத்

 

இந்த்ராணி (ஐந்த்ரீ)

 

இந்திரனுடைய வாஹனமும், ரூபமும், ஆயுதமும் தரித்தவள். ஐராவதமே வாஹனம். வஜ்ரம் ஆயுதம். ஆயிரம் கண்களை உடையவள். இந்த்ர நீலக்கல் நிறம். ஸௌபாக்ய தேவதையான இவளது யந்த்ரம் மிகுந்த பயன் தரக் கூடியது. இந்த்ராணியே த்ரௌபதியாக அவதரித்து, பாண்டவர்களாய் அவதரித்த  இந்த்ரர்களுக்கு மனைவியானவள். பெண்களுக்கு விரிம்பிய கணவரைப் பெற அருள்பவள் இத்தேவியாவாள்.

 

( இன்னொரு கட்டுரையில் இருந்து :  )

 

த்யானம்

அங்குசம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீகரை

இந்த்ர நோல நிபேத்ராணி த்யேயோ ஸர்வஸம் ருத்திதா

 

மந்த்ரம்

ஓம் ஈம் இந்த்ராண்யை நம:

ஓம் ஐம் சம் இந்த்ராணி கன்யகாயை நம:

 

காயத்ரீ

ச்யாம வர்ணாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ ஐந்த்ரீ ப்ரசோதயாத்

 

சாமுண்டா

காளிகாதேவியான சாமுண்டாதேவி மேற்சொல்லப்பட்ட ஷண்மாதா க்களுக்கும் முதல்வியாக ஸ்ரீ புவனேஸ்வரியால் அமர்த்தப்பெற்றாள். சிவகாளி என்றும் அழைக்கப் படுகிறாள். முக்கண், 16 கை.

 

( இன்னொரு கட்டுரையில் இருந்து :  )

 

 

த்யானம்

சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை

முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேயே சாமுண்டா ரக்த விக்ரஹா

சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்வான்ஸ்வ ஹஸ்தாம்புஜை

நிர்மாம் ஸாபிமனோஹரா க்ருதிதரா ப்ரேதே நிஷண்ணா சௌபா

ரக்தாபா கலசண்ட முண்ட தமணீ தேவி லலாபோத்பவா

சாமுண்டா விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணாசோத்யதா

 

மந்த்ரம்

ஓம் சாம் சாமுண்டாயை நம:

ஓம் ஔம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:

 

காயத்ரீ

ஓம் க்ருஷ்ணவர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.