தேவீ ஸூக்தம் – ரிக்வேதம் 10.8.125

தேவீ ஸூக்தம் – ரிக்வேதம் 10.8.125

தேவிக்கு மிகவும் உகந்ததான இந்த ஸூக்தம் ஆயிரக் கணக்கானோரால் தினமும் ஓதப்படுகிறது. ரிஷி அம்ப்ருணரின் மகளான வாக் என்ற பெண் ரிஷி இதை எழுதியவர். அவர் தனது சாதனைகளின் பலனாக, தேவியுடன் தன்னை ஒன்றாகக் காணுமளவிற்கு உயர் நிலையை அடைந்தவர். அந்த நிலையிலிருந்தே இதனைப் பாடுகிறார்.

ஓம்

அஹம் ருத்ரேபிர் வஸுபிச்சராம் யஹமாதித்யைருத விச்தேவை:

அஹம் மித்ரா வருணோபா பிபர்ம்யஹமிந்த்ராக்னீ அஹமச்வினோபா 1

 

நான் ருத்திரர்களுடனும், வசுக்களுடனும், ஆதித்தர்களுடனும், எல்லா தேவர்களுடனும் சஞ்சரிக்கின்றேன். மித்ரன், வருணன், இந்திரன், அக்கினிதேவன் மற்றும் இரண்டு அச்வினிதேவர்களையும் நானே தாங்குகிறேன்.

 

அஹம் ஸோமமாஹனஸம் பிபர்ம்யஹம் த்வஷ்ட்டாரமுத பீஷணம் பகம்

அஹம் ததாமி த்ரவிணம் ஹவிஷ்மதே ஸுப்ராவ்யே ஏ யஜமானாய ஸுன்வதே                                                                                                                                   2

 

எதிரிகளை அழிப்பவனான சோமனையும், த்வஷ்ட்டாவையும், பூஷனையும், பகனையும் நானே தாங்குகிறேன், வேள்வியில் ஆஹுதி அளிப்பவனும், சோமரஸத்தைப் பிழிபவனும், ஆஹுதியைத் தேவர்கள் பெறச் செய்பவனுமாகிய எஜமானுக்கு, அதாவது யாகம் செய்பவனுக்கு நான் செல்வத்தை அளிக்கிறேன்.

 

அஹம் ராஷ்ட்ரீ ஸங்மனீ வஸூனாம் சிகிதுஷீ ப்ரதமா யஜ்ஞியானாம்

தாம் மா தேவாவ்யதது: புருத்ரா பூரிஸ்தாத்ராம் பூர்யாவேயந்தீம்           3

 

நான் பிரபஞ்சத்தின் தலைவி. என்னை வழிபடுபவர்களுக்கு நான் செல்வத்தை அளிக்கிறேன். நான் எல்லாம் அறிந்தவள். வழிபடத் தக்கவர்களுள் முதன்மையானவள். பல வடிவங்களைத் தாங்கி, பல வழிகளில் உயிர்களில் ஆன்மாவாக நான் நுழைகிறேன்.அதனால் என்னை தேவர்கள் பல இடங்களில் நிறுவியுள்ளனர்.

 

 

மயா ஸோ(அ)ன்னமத்தி யோ விபச்யதி ய: ப்ராணீதி ய ஈம் ச்ருணோத்யுக்தம் அமந்தவோமாந்த உபக்ஷியந்தி ச்ருதிச்ருத ச்த்திவந்தே வதாமி               4

 

யார் உணவை உண்கிறாரோ, யார் பார்க்கிறாரோ, சுவாசிக்கிறாரோ, பேசப்பட்டதைக் கேட்கிறாரோ அவர் என்மூலமே அதையெல்லாம் செய்கிறார். என்னை அறியாதவர்கள் அழிகிறார்கள், அன்பனே, சிரத்தை உடைய உனக்குச் சொல்கிறேன் கேள்.

 

அஹமேவ ஸ்வயமிம் வதாமி ஜுஷ்ட்டம் தேவேபிருத மானுஷேபி:

யம் காமயே தம் தமுக்ரம் க்ருணோமி தம் ப்ரஹ்மாணம் தம் ரிஷிம் தம் ஸுமேதாம்                                                                                                                           5

 

இவையெல்லாம் நானே என்று சொல்கிறேன். தேவர்களாலும் மனிதர்களாலும் வழிபடப் பட்டவள் நானே. யாரை நான் விரும்புகிறேனோ அவனை அனைவரிலும் உயர்ந்தவனாக, பிரம்ம நிலை அடைந்தவனாக, ரிஷியாக, சிறந்த மேதையாக ஆக்குகிறேன்.

 

அஹம் ருத்ராய னுராதனோமி ப்ரஹ்மத்விஷே ரவேஹந்த வா உ

அஹம் ஜனாய ஸமம் க்ருணோம்யஹம் த்யாவா ப்ருதிவீ ஆவிவேச       6

 

நன்மையை வெறுக்கின்ற எதிரிகளைக் கொல்வதற்காக ருத்திரனின் வில்லை நான் வளைக்கிறேன். நான் மக்களுக்காகவே எதிரிகளை எதிர்க்கிறேன். நான் விண்ணிலும் மண்ணிலும் புகுந்து நிறைந்திருக்கிறேன்.

 

அஹம் ஸுவே பிதரமஸ்ய மூர்ன் மம யோனி ரப்ஸ்வ(அ)ந்த: ஸமுத்ரே ததோ விதிஷ்ட்டே புவனானு விச்வோ தாமூம் த்யாம் வர்ஷ்மணோப ஸ்ப்ருசாமி                                                                                                                                  7

 

இந்தப் பூமிக்கு மேலே உள்ளதும்  தந்தைக்குச் சமமானது மாகிய வானத்தை நான் படைத்தேன். எனது படைப்பாற்றல் நீரிலும் கடலிலும் உள்ளே உள்ளது. அதனால் எல்லா உலகங்களிலும் நான் நிறைந்திருக்கிறேன். அதுபோல் வானையும் என் உடலால் தொடுகிறேன்.

 

அஹமேவ வாம இவ ப்ரவாம்யாரப்மாணா புவனானி விச்வா

பரோ திவாபர ஏனா ப்ருதிவ்யைதாவதீ மஹினா ஸம்பபூவ                         8

உலகங்களையெல்லாம் படைக்கத் தொடங்கும்போது நானே காற்றைப்போல் இயங்குகிறேன். நான் வானைவிட உயர்ந்தவள். இந்த பூமியை விட மேலானவள், இவ்வாறெல்லாம் என் மகிமை உள்ளது.

 

***

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.