தேவீபாகவதஸாரம் மூன்றாம் பாகத்திலிருந்து தேவியைப் பற்றிய சில விஷயங்கள் பலவகை மூர்த்தி ரஹஸ்யம்

தேவீபாகவதஸாரம் மூன்றாம் பாகத்திலிருந்து தேவியைப் பற்றிய சில விஷயங்கள்

பலவகை மூர்த்தி ரஹஸ்யம்

ஸ்ரீ நாராயணர் கூறியது:

 

2.7       அக்னியில் சுடும் சக்தி போலும், சந்திரனிடத்திலும் தாமரையிடத்திலும் அழகு போலும், சூரியனிடம் ஒளிபோலும் எப்பொழுதும் பிரியாமல் ஆத்மாவுடன் சேர்ந்தே இருப்பவள் பிரகிருதி.

 

2.11     சக்தியானவள் ஞானம், பொருள்களின் நிறைவு, செல்வம், புகழ், பலம் (பகம்), ஐசுவரியம் ஆகியவற்றுடன் கூடியிருப்பதால் அவள் பகவதீ எனப்படுகிறாள்.

 

2.12     அவளுடன் கூடிய பரமாத்மா அதனால் பகவான் எனப்படுகிறார். அவர் உருவுடையவராகவும் உருவற்றவராகவும் தன்னிச்சைப்படி இருக்கக்கூடிய தேவராவார்.

 

2.13     உருவமில்லாமல் ஒளி வடிவினராய் அவரை யோகிகள் எப்பொழுதும் தியானிக்கின்றனர். அவரை பரப்பிரம்மம் என்றும் பரமானந்தமென்றும் ஈசுவரனென்றும் கூறுகின்றனர்.

 

2.14     காணப்படாமல் அனைத்தையும் பார்ப்பவரும் எல்லாமறிந்தவரும் அனைத்திற்கும் காரணமாகியவரும், எல்லாரூபமாய் இருப்பவரும் ஆகிய அவருடைய அந்நிலையை வைஷ்ணவர்கள் வழிபடுவதில்லை.

 

2.17     குழந்தைப் பருவத்தினரும், சாந்தரும், எல்லோருக்கும் பிரியமானவரும், உயர்ந்ததற்கெல்லாம் உயர்ந்தவரும், புதியமேகம் போல் பிரகாசிக்கும் நீலவண்ணரும்;

 

2.20     மயிலிறகைத் தலையில் சூடியவரும், ஜாதிமல்லிகை மாலை அணிந்தவரும், ஜ்வலிக்கும் அக்னியைப் போல் சுத்தமான ஒரு வஸ்த்ரமணிந்து விளங்குபவரும்;

 

2.22     புல்லாங்குழலுடன் கூடிய இரு கைகளை உடையவரும், ரத்னாபரணங்களணிந்தவரும், ஸநாதனருமாகிய தேவதேவனாக வைஷ்ணவர்கள் எப்பொழுதும் பகவானை தியானிக்கின்றனர்.

 

2.23     பிரம்மாவின் ஆயுள் அவருக்கு ஒரு நிமிஷமாக உபசரிக்கப் படுகிறது. ஆத்மாவும் பரப்பிரம்மமுமாகிய அவர் கிருஷ்ணன் எனும் பெயரால் போற்றப்படுகிறார்.

 

2.24-25            ‘க்ருஷி’ எனும் பதம் எல்லாம் எனவும், ‘ந’ எனும் பதம் வித்து எனவும் பொருள்படும். ஆதலால் ‘கிருஷ்ண’ என்றால் அனைத்திற்கும் வித்தாகியவர். அவர் ஆதியில் ஒருவராகவே எல்லாவற்றையும் சிருஷ்டிக்க விரும்பி அந்த விருப்பத்தின் அம்சமான காலத்தால் தூண்டப்பட்டு தனது இச்சாசக்தி மயமாகிய அந்தப் பிரபு தனதிச்சையால் இரண்டுரூபமாக ஆனார்.

 

2.27     இடதுபாகப் பகுதி ஸ்த்ரீரூபம் எனவும், வலது பகுதி புருஷரூபம் எனவும் கூறப்படுகிறது. ஸநாதனரும் (புருஷரூபியுமான ) மஹாகாமியுமான பகவான் காமத்திற்காதாரமான அந்த ஸ்திரீ ரூபத்தைப் பார்த்தார்.

 

2.36     மிகவும் அழகியவளும் சிறந்த தாமரைப்பூப் போன்றவளும் ஆகிய அவளைப் பார்த்து அவளிடன் கூட ரஸத்திற்கு நாயகரான ஈசுவரன் ராஸமண்டபத்தில், ரஸ உல்லாஸத்தில் ரஸிகராய் ராஸக்ரீடை புரிந்தார்.

 

2.52     அப்பொழுது தேவியின் நாக்கு நுனியிலிருந்து வெண்மை நிறத்துடன் மனதைக் கவரும் ஒரு கன்னிகை தோன்றினாள்.

 

2.53     வெள்ளையாடை உடுத்து, வீணையும் புஸ்தகமும் கைகளில் கொண்டு ரத்னங்களாலான ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்று விளங்கிய அவள் எல்லா சாஸ்திரங்களுக்கும் அதிதேவதை.

 

2.54     சிறிது காலத்திற்குப் பின் அவளும் இரண்டு ரூபமாகப் பிரிந்தாள். அவளுடைய அங்கத்தின் இடதுபாதி கமலா எனும் லக்ஷ்மியாகவும், வலது பாதி ராதிகையாகவும் ஆயின.

 

2.55     அதற்கிடையில் கிருஷ்ணனும் இரண்டாகப் பிரியவே, அவ்வலது பாதி உருவம் இருகைகளுடன் கூடியதாகவும், இடது பாதி உருவம் நான்கு கைகளுடன் கூடியதாகவும் விளங்கின.

 

2.57     கிருஷ்ண பரமாத்மா, மகிழ்ச்சியுடன் லக்ஷ்மியை நான்கு கை படைத்த நாராயணருக்குக் கொடுத்தார்.

 

2.63     விப்ரரே ! பிறகு வெகு சீக்கிரமே கிருஷ்ணனுடைய விஷ்ணுமாயையும் ஸநாதனமான கிருஷ்ண சக்தியும் ஆனவள் துர்க்கையாக ஆவிர்ப்பவித்தாள்.

 

2.66    மூலப் பிரகிருதியும் ஈசுவரியுமான அவள் தேவிகளுக்கு வித்துப் போன்றவள். பரிபூர்ண வடிவங்களுள் சிறந்தவள். தேஜோரூபிணீ; முக்குண வடிவானவள்.

 

2.78     துர்க்கை தோன்றியபின், பத்மநாபருடைய நாபிக் கமலத்திலிருந்து பத்னியுடன் நான்முகப்பிரம்மா வெளிப்போந்தார்.

 

2.82     பின்பு மறுபடியும் கிருஷ்ணன் இரண்டு ரூபமாகி இடது பாதியில் மஹாதேவராகவும் வலதுபாதியில் கோபிகாபதியாகவும் தோன்றினார்.

 

2.85-88            மஹாதேவர் திசைகளையே ஆடையாயுடையவராயும், கண்டம் கருத்தவராயும், எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பெற்றவராயும், வலது கையில் சிறந்த ரத்னமாலை உடையவராயும், மிருத்யுஞ்ஜயர் எனப் பெயர்பெற்ற  தாம் எவரிடமிருந்து உண்டானாரோ அந்த மிருத்யுவுக்கும் மிருத்யுவான கிருஷ்ணபகவானைத் துதிப்பவராய் அவர் முன்னிலையில் அவரளித்த சிம்மாஸனத்தில் அமர்ந்தார்.

 

4.4       பிரகிருதியானவள் சிருஷ்டிகாலத்தில் கணேசஜனனியாகிய துர்க்கை, ராதா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ, ஸாவித்ரீ என ஐந்து வடிவுடையவளாகக் கூறப் படுகிறாள்.

 

4.5       இவர்களுடைய பூஜை பிரசித்தமானது. பிரபாவம் பரம அற்புதமானது. சரிதம் அமிருதம் போன்றது. எல்லா மங்களங்களுக்கும் காரணமாயிருப்பது.

 

4.10     ஆதியில் ஸரஸ்வதிபூஜை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவால் ஏற்படுத்தப் பட்டது. அவளுடைய அருளால் முட்டாளும் பண்டிதனாகிறான்.

 

4.29     அதன்பின் பிரம்மா, விஷ்ணு, சிவன் முதலியோர் அந்தப் பூஜையை செய்தனர். உலகனைத்தாலும் ஸரஸ்வதி எப்பொழுதும் பூஜிக்கப் பெற்றவள் ஆனாள்.

 

4.52     (ஸரஸ்வத்யை என்ற) நாலாவது வேற்றுமை உருபுடன் (ஸ்வாஹா என்ற) அக்னிபத்னியின் பெயரை முடிவில் சேர்த்து (ஸ்ரீம் ஹ்ரீம் என்ற) லக்ஷ்மீ மாயா பீஜங்களை முதலில் வைத்துத் தோன்றும் ‘ஸ்ரீம் ஹ்ரீம் ஸரஸ்வத்யை ஸ்வாஹா’ என்ற இம்மந்திரம் கற்பக விருக்ஷம் போல் வேண்டுவோர் வேண்டுவதை அளிப்பதாகும்.

 

8.88     வேதமாதாவாயும் வேதத்திற்கு அதிஷ்டான தேவதையாயும் உள்ளவள் ஸாவித்ரீ. அவளுடைய ஞானத்தாலும் சேவையாலும் வேதத்தை யறிந்தவர் களாகும் துவிஜர்களால் அவள் பூஜித்தற்குரியவள். எல்லோராலும் துதிக்கப் பெறுபவள். எல்லாமறிந்தவள். எல்லா துக்கங்களையும் நாசம் செய்பவள்.

 

8.93     கிருஷ்ணபரமாத்மாவின் இடது பாகத்தில் தோன்றியவளும், கிருஷ்ணனுடைய பிராணனுக்கு அதிதேவதையும், கிருஷ்ணருக்குப் பிராணனைவிடப் பிரியத்தில் அதிகமாக உள்ளவள் ராதிகாதேவி, சக்திகளால் சேவிக்கப்பெற்று ரூபத்திலும், ஸௌபாகியத்திலும், வெகுமானத்திலும், கௌரவத்திலும் எல்லாச் சக்திகளுக்கும் மேலாக விளங்குபவள்.

 

11.72-74          பகீரதன் பக்தியினால் மனதையடக்கி, கணேசன், சூரியன், அக்னி, விஷ்ணு, சிவன், சக்தி ஆகிய ஆறு தெய்வங்களையும் நன்கு பூஜித்து, அதனால் பூஜையில் அவன் அதிகாரியானான். கணேசனை விக்னங்கள் ஒழியவும், சூரியனை ஆரோக்கியத்திற்காகவும், விஷ்ணுவைச் செல்வத்திற்காகவும், ஞானேசுவரனான சிவனை ஞானத்திற்காகவும், சக்தியை முக்தி எய்தவும் பூஜிக்கவேண்டும்.

 

 

 

துளஸீ உபாக்யானம்

 

24.39   எவன் துளஸீபத்ர ஜலத்தால் அபிஷேகம் செய்துகொள்ளுகிறானோ அவன் எல்லாத் தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்தனாகவும் எல்லா யாகங்களிலும் தீக்ஷை பெற்றவனாகவும் ஆவான்.

 

24.42   எவன் மரனகாலத்தில் துளஸீபத்ர தீர்த்தத்தைப் பெறுகிறானோ அவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகிறான். விஷ்ணுலோகத்தில் பெருமையடைகிறான்.

 

24.43   துளஸிக்கட்டையால் ஆக்கப்பட்ட மாலையைக் கைக்கொள்ளும் மனிதன் எவனோ அவன் அடிக்கடி அச்வமேதயாகம் செய்த பலனை நிச்சயமாய் அடைகிறான்.

 

24.51 மூன்று நாள் கடந்தாலும் துளஸீபத்ரம் சிராத்தம், விரதம், தானம், தெய்வப்ரதிஷ்டை, தேவதார்ச்சனை முதலியவற்றில் உபயோகிக்க சுத்தமானதாகவே கொள்ளப்படும்.

 

ஸாவித்ரி உபாக்யானம்

 

ஸாவித்ரீ மந்திரம் : ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸாவித்ர்யை ஸ்வாஹா

 

லக்ஷ்மீ உபாக்யானம்

 

லக்ஷ்மீ மந்திரம் : ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் கமலவாஸின்யை ஸ்வாஹா

 

ஷஷ்டீ மனஸா ஸுரபி உபாக்யானம்

 

தேவஸேனா மந்திரம் – இவள் பிரம்மாவின் மானஸபுத்திரி. தேவஸேனா எனும் ஈசுவரி, ஷஷ்டீ, மாத்ருகாதேவிகளில் பிரசித்தமானவள், விரதத்திற் சிறந்த ஸ்கந்தபத்னி: ஸ்ரீம் ஹ்ரீம் ஷஷ்டீ தேவ்யை ஸ்வாஹா

 

மங்கள சண்டிகை: ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸர்வபூஜ்யே தேவி மங்கள சண்டிகே ஹூம் ஹூம் பட் ஸ்வாஹா

 

மனஸா தேவி: இவளுக்கு வைஷ்ணவீ, நாகசகோதரி, சைவீ, நாகேசுவரி, ஜரத்காருப்பிரியா, ஆஸ்தீகமாதா, விஷஹரா எனப் பெயர்கள். இவளுடைய மந்திரத்தைப் பூஜாகாலத்தில் எவன் உச்சரிக்கிறானோ அவனுக்குப் பாம்பு பயம் இல்லை. அவனுடைய வம்சத்தில் உதித்தவனுக்கும் இல்லை.

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் மனஸா தேவ்யை ஸ்வாஹா

 

ஸுரபி, பசுக்களின் தேவதை; ஓம் ஸுரப்ப்யை நம:

தேவீ மஹாத்மியத்திலிருந்து த்யான ஸ்லோகங்கள்

 

மஹாகாளீ த்யானம்

 

கட்ம் சக்ர கதேஷு சாப பரிகான் சூலம் புசுண்டீம் சிர:

ங்க்கம் ஸந்தததீம் கரைஸ் த்ரி நயனாம் ஸர்வாங் பூஷாவ்ருதாம்

யாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ் துஷ்டாவ ஸுப்தே ஹரௌ

நீலாச்த்யுதி மாஸ்ய பாத தசகாம் ஸேவே மஹாகாளிகாம்

 

மஹாலக்ஷ்மீ த்யானம்

 

ஓம் அக்ஷஸ்ரக் பரசும் கதேஷு குலிசம் பத்மம் னு: குண்டிகாம்

ண்ம் க்தி மஸிஞ் ச சர்ம ஜலஜம் ண்டாம் ஸுராபாஜனம்

சூலம் பாஸுதர்னே ச தததீம் ஹஸ்தை: ப்ரவாலப்ரபாம்

ஸேவே ஸௌரிப மர்த்தினீ மிஹ மஹாலக்ஷ்மீம் ஸரோஜஸ்திதாம்

 

மஹாஸரஸ்வதீ த்யானம்

 

ண்டா சூல ஹலானி ங்க முஸலே சக்ரம் னு: ஸாயகம்

ஹஸ்தாப்ஜைர் தததீம் னாந்த விலஸச் சீதாம்சு துல்யப் ப்ரபாம்

கௌரீதேஹ ஸமுத்பவாம் த்ரிஜதா மாதாபூதாம் மஹா

பூர்வா மத்ர ஸரஸ்வதீ மனுஜே சும்பாதி தைத்யார்த்தினீம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.