விஷ்ணு அஷ்டோத்தரம்

நாமாவளியும் அர்ச்சனையும்

 

”‘ஸகல காரிய ஸித்தி தரும் ஸ்ரீ விஷ்ணு

ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம்” என்னும் LIFCO புத்தகத்திலிருந்து.

 
“ஶ்ரவணம் கீர்த்தநம் விஷ்ணோ: ஸ்மரணம் பாஸேவநம்

அர்ச்சநம் வந்நம் தாஸ்யம் ஸக்ய மாத்ம நிவேநம்”

–ஸ்ரீ பாகவதம்

 

எம்பெருமானுடைய திவ்ய சரணாரவிந்த பரிசர்யையாகிற மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அடைவதற்குப் பக்தி என்பது ஒரு சிறந்த உபாயம். பகவானிடம் அந்தப் பக்தியை ஒன்பது விதமாகச் செலுத்தலாம். (நவதா க்தி)

 

  1. சிரவணம் பகவானுடைய கதைகளைக் கேட்பது
  2. கீர்த்தனம் பகவத் கல்யாண குணக்களைப் பாடுவது
  3. ஸ்மரணம் அவனை மனத்தில் நினைப்பது
  4. பாத ஸேவநம் அவன் திருவடி ஸேவை புரிவது
  5. அர்ச்சநம் அவன் திருவடிகளில் தூமலர் தூவித்தொழுவது
  6. வந்தனம் ஸாஷ்டாங்கமாக அவன் திருவடிகளை வணங்குவது
  7. தாஸ்யம் குற்றேவல் புரிவது
  8. ஸக்யம் பகவானிடம் தோழமை கொள்வது
  9. ஆத்மநிவேதனம் தன்னையே பகவானுக்கு அர்ப்பணிப்பது

 

இந்த ஒன்பதில் நடுநாயகமான அர்ச்சனை என்பது, பகவானுடைய நாமங்களை ஒவ்வொன்றாக வாயால் உச்சரித்து, புஷ்பம், துளஸி போன்றவைகளை அவன் திருவடிகளில் ஸமர்ப்பித்தலாகும். பாராயணத்தைக் காட்டிலும் அர்ச்சனைக்கு அதிக பலன் உண்டு. ஒவ்வொரு நாமத்தையும் முன் “ஓம்” என்ற பிரவணத்தையும், பின் “நம:” என்ற சொல்லையும் சேர்த்து சொல்வது. ‘விஶ்வம்’ என்று சொல்வதைக் காட்டிலும், ‘ஓம் விஶ்வாய நம:’ என்று சொன்னால், அந்த நாமம் ப்ரணவ ஸம்பந்தத்தாலும், நம: சப்தத்தாலும் மந்த்ர ரூபம் பெற்று, பகவானை நம் பக்கம் திருப்பி அநுக்ரஹம் அளிக்கும்படிச் செய்கிறது.

 

அர்ச்சனையின் பெருமையை ஆழ்வார்கள் பல இடங்களில் பாடியிருக்கிறார்கள்.

 

புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள் தூவி,

எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால்

திண்ணம்நாம் அறியச் சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து

அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார்

– திருவாய்மொழி 10-2-4

 

நாடீர் நாடோறும், வாடா மலர்கொண்டு

பாடீர் அவன்நாமம், வீடே பெறலாமே

– திருவாய்மொழி 10-5-5

 

ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்தர சத நாமாவளி

 

 

ஓம் அச்’யுதாய நம:  ஓம் அதீந்த்ராய நம:  ஓம் அனாதிநிதனாய நம:  ஓம் அனிருத்தாய நம:  ஓம் அம்ருதாய நம:  ஓம் அரவிந்தாய நம:  ஓம் அஶ்வத்தாய நம:  ஓம் ஆதித்யாய நம: ஓம் ஆதிதேவாய நம: ஓம் ஆனந்தாய நம:                                                                                                                       10

 

ஓம் ஈஸ்வராய நம: ஓம் உபேந்த்ராய நம: ஓம் ஏகஸ்மை நம:  ஓம் ஓஜஸ் தேஜோத் யுதிதராய நம:  ஓம் குமுதாய நம:  ஓம் க்ருதஜ்ஞாய நம:  ஓம் க்ருஷ்ணாய நம:  ஓம் கேஶவாய நம:  ஓம் க்ஷேத்ரஜ்ஞாய நம:  ஓம் கதாதராய நம:                                                                                                                   20

 

ஓம் கருடத்வஜாய நம:  ஓம் கோபதயே நம:  ஓம் கோவிந்தாய நம:  ஓம் கோவிதாம்பதயே நம:   ஓம் சதுர்ப்புஜாய நம:  ஓம் சதுர்வ்யூஹாய நம: ஓம் ஜனார்த்தனாய நம:  ஓம் ஜ்யேஷ்ட்டாய நம:  ஓம் ஜ்யோதிராதித்யாய நம:  ஓம் ஜ்யோதிஷே நம:                                                                                                         30

 

ஓம் தாராய நம:  ஓம் தமனாய நம:  ஓம் தாமோதராய நம:  ஓம் தீப்தமூர்த்தயே நம:  ஓம் து:ஸ்வப்ன நாஶனாய நம:  ஓம் தேவகீ நந்தனாய நம:  ஓம் தனஞ்சயாய நம:  ஓம் நந்தினே நம:  ஓம் நாராயணாய நம:  ஓம் நாரஸிம்ஹவபுஷே நம:                                                                                                       40

 

ஓம் பத்மநாபாய நம:  ஓம் பத்மினே நம:  ஓம் பரமேச்’வராய நம:  ஓம் பவித்ராய நம: ஓம் ப்ரத்யும்னாய நம:  ஓம் ப்ரணவாய நம:  ஓம் புரந்தராய நம:  ஓம் புருஷாய நம:  ஓம் புண்டரீகாக்ஷாய நம:  ஓம் ப்ருஹத்ரூபாய நம:                                                                                                                                         50

 

ஓம் பக்தவத்ஸலாய நம:  ஓம் பகவதே நம:  ஓம் மதுஸூதனாய நம: ஓம் மஹாதேவாய நம: ஓம் மஹாமாயாய நம:  ஓம் மாதவாய நம: ஓம் முக்தானாம் பரமாகதயே நம:  ஓம் முகுந்தாய நம:  ஓம் யஜ்ஞகுஹ்யாய நம:   ஓம் யஜ்ஞபதயே நம:                                                                                        60

 

ஓம் யஜ்ஞாஜ்ஞாய நம:  ஓம் யஜ்ஞாய நம:  ஓம் ராமாய நம:  ஓம் லக்ஷ்மீபதே நம:  ஓம் லோகாத்யக்ஷாய நம:  ஓம் லோஹிதாக்ஷாய நம:  ஓம் வரதாய நம:  ஓம் வர்த்தனாய நம:  ஓம் வராரோஹாய நம:  ஓம் வஸுப்ரதாய நம:                                                                                                             70

 

ஓம் வஸுமனஸே நம:  ஓம் வ்யக்திரூபாய நம:  ஓம் வாமனாய நம:  ஓம் வாயுவாஹனாய நம:  ஓம் விக்ரமாய நம:  ஓம் விஷ்ணவே நம:  ஓம் விஷ்வக்ஸேனாய நம: ஓம் வ்ருஷோதராய நம:  ஓம் வேதவிதே நம:  ஓம் வேதாங்காய நம:                                                                                                              80

 

ஓம் வேதாய நம:  ஓம் வைகுண்டாய நம:  ஓம் ஶரணாய நம:  ஓம் ஶாந்தாய நம:  ஓம் ஶார்ங்க தன்வனே நம:  ஓம் ஶாஶ்வதஸ்தாணவே நம:  ஓம் ஶிகண்டனே நம:  ஓம் ஶிவாய நம:  ஓம் ஸ்ரீதராய நம:  ஓம் ஸ்ரீ நிவாஸாய நம:                                                                                                                        90

 

ஓம் ஸ்ரீமதே நம:  ஓம் ஶுபாங்காய நம:  ஓம் ஶ்ருதிஸாகராய நம:  ஓம் ஸங்கர்ஷணாய நம:  ஓம் ஸதாயோகினே நம:  ஓம் ஸர்வதோமுகாய நம:  ஓம் ஸர்வேச்’வராய நம: ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம: ஓம் ஸ்கந்தாய நம:  ஓம் ஸாக்ஷிணே நம:                                                                                                  100

 

ஓம் ஸுதர்ஸனாய நம: ஓம் ஸுரா நந்தாய நம: ஓம் ஸுலபாய நம:  ஓம் ஸூக்ஷ்மாய நம:  ஓம் ஹரயே நம:  ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம: ஓம் ஹிரண்ய நாபாய நம:  ஓம் ஹ்ருஷீகேஶாய நம:                                         108

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.