மாங்கள்ய ஸ்தவம்

மாங்கள்ய ஸ்தவம்

LIFCO 1977

 

இது விஷ்ணு தர்மோத்தர புராணத்தில் உள்ளது. இந்த ஸ்தோத்ரத்தில் புலஸ்த்யமுகமாக ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் பரத்வமும் மஹாவிஷ்ணுவே ஜகத் காரணன் மற்றும் ஸர்வ பாபங்களையும் போக்கும் திவ்யமங்கள தேவதை என்பதும், இகத்திலும் பரத்திலும் வேண்டிய ஸகல ஸௌபாக்யங் களையும் அளிப்பவன் என்றும் உபதேசிக்கப் படுகின்றது.

 

  • இந்த ஸ்தோத்ரத்தை ஜபம் செய்ய ஆரம்பித்த உடனேயே தீமைகள் அழிகின்றன. க்ரஹங்களின் கொடிய பலன்கள் தீய்ந்து போகின்றன. நாம் செய்யும் நற்காரியங்கள் மிக உயர்ந்த பலனை அளிக்கின்றன.
  • இந்த ஸ்தோத்ர படனம் நமக்கு உயர்ந்த கவசமாக விளங்குகின்றது. பெரியவர்கள் இதை ஒரு நாள் தவறாமல் காலை வேளையில் அபிகமன ஆராதனத்தில் பாராயணம் செய்து கொண்டே இருந்திருக் கிறார்கள்.
  • நின்றுபோகும் அளவுக்கு ஆபத்து ஏற்பட்ட கல்யாணம், உபநயனம் போன்ற மங்கள காரியங்கள், தொடர்ந்து இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்ததால் மங்களகரமாக நிறைவேறின.

 

தால்ப்ய:

 

கார்யாரம்பேஷு ஸர்வேஷு து:ஸ்வப்நேஷு ச ஸத்தம

அமங்ள்யேஷு த்ருஷ்டேஷு யஜ்ஜப்தவ்யம் தப்ச்யதாம்

யேநாரம்பாஶ்ச ஸித்த்யந்தி து:ஸ்வப்நஶ்சோப ஶாந்தயே

அமங்ளாநாம் த்ருஷ்டாநாம் பரிஹாரஶ்ச ஜாயதே                                        1-2

 

தால்ப்யர் கூறுகிறார்: ப்ரஹ்மத்தை உணர்ந்தவருள் பெரியாரே, கார்யங்களை ஆரம்பிக்கும்போதும், துஸ்வப்நமோ அமங்களமோ நேரும்போதும் எதனை ஜபிக்க வேண்டும் ? அறிவுரை எங்கட்கு வழங்கப்பட வேண்டும். துவங்கிய கார்யங்கள் இனிது நிறைவேறுவது எதனால் ? கெட்ட கனவும் பலனற்றுப் போவதும் எதனால் ? யாம் காணும் அசுபங்களுக்குப் பரிஹாரம் உண்டாவதும் எதனால் ?

 

 

 

ஸ்ரீ புலஸ்த்ய:

 

ஜநார்நம் பூதபதிம் ஜகத்குரும்

ஸ்மரந் மநுஷ்யஸ் ஸததம் மஹாமுநே

துஷ்டாந்ய ஶேஷாண்யபஹந்தி ஸாயதி

அஶேஷ கார்யாணி ச யாந்யபீப்ஸதி                                                                      3

 

புலஸ்தியர் மொழிவது: மாமுனிவரே, பிறவியை நீக்க வல்லவரும், உலகில் உள்ள பொருள் எல்லாவற்றிற்கும் சொந்தக் காரரும், உலகிலேயே மிக உயர்ந்தவருமான எம்பெருமானை த்யானித்துக் கொண்டிருக்கும் மனிதன் தீயனவெல்லாம் போக்கிக் கொண்டு, தான் விரும்பும் எல்லாச் செயல்களையும் நற்பயனளிக்கும்படி ஸாதித்துக் கொள்கிறான்.

 

ஶ்ருணுஷ்வ சாந்யத் கததோ மமாகிலம்

தாமி யத்தே த்விஜவர்ய மங்ளம்

ஸர்வார்த்தஸித்திம் ப்ரததாதி யத் ஸதா

நிஹந்த்யஶேஷாணி ச பாதகாநி                                                                              4

 

அந்தணர் பெருமானே, எது உமக்குச் சுபமோ, எது வேண்டிய பலன் யாவும் கைகூடும்படி செய்யவல்லதோ, எது தீவினையாவற்றையும் ஒழிக்கவல்லதோ அத்டகைய துதியை உமக்குக் கூறுகிறேன். அதை முழுதும் கேட்பீராக.

 

ப்ரதிஷ்டிதம் யத்ர ஜத் சராஶரம்

த்த்ரயே யோ ஜகஶ்ச ஹேது:

த் ச பாத்யத்தி ச யஸ்ஸ ஸர்வதா

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                5

 

மூவுலகிலும் யார் ஜங்கமஸ்தாவர ரூபமான உலகிற்குக் காரணமானவரோ, யாரிடத்தில் இது நிலைத்துக் கீழே விழாது தாங்கப்பட்டு நிற்கிறதோ, இவ்வுலகை யார் ரக்ஷிக்கிறாரோ, (ப்ரளயகாலத்தில்) யார் இதனை உணவைப்போல் தம்முள் ஒடுங்கும்படி செய்கிறாரோ, ஸர்வ பாபங்களையும் பொங்கிப் பெருக அருள்வாராக.

 

வ்யோமாம்பு வாய்வக்நி மஹீஸ்வரூபை:

விஸ்தாரவாந் யோ(அ)ணுதரோ(அ)ணுபாவாத்

அஸ்தூல ஸூக்ஷ்மஸ் ஸததம் பரேஶ்வரோ

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                6

 

வான், வாயு, தீ, நீர், பூமி எனும் இவ்வுருவுகளால் தம்மைப் பெருக்கிக் கொண்டவரும், சிறிய பொருள்களிலும் சிறியவரும், சிறிது, பெரிதென்றளவுள்ள பொருட்களைக் காட்டிலும் முற்றிலும் வேறான தன்மையுள்ளவருமான ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

யஸ்மாத் பரஸ்மாத் புருஷா நந்தாத்

அநாதிமத்யா ததிகம் ந கிஞ்சித்

ஸ ஹேது ஹேது: பரமேஶ்வரோ

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                7

 

காலத்தாலும், பிறப்பாலும், குணங்களாலும் அளப்பரிதானவரும், பிறப்பும் இறுதியுமற்றவரும், தம்மிலும் உயர்ந்த ஒருவரைக் கிடையாதவரும், படைப்போரையும் கூட படைப்பவராகவும், தேவர்க்கும் தேவனாகவும் உள்ள  ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

ஹிரண்ய ர்ப்பாச்யுத ருத்ருரூபி

ஸ்ருஜத்யஶேஷம் பரிபாதி ஹந்தி

குணாக்ரணீர் யோ பவாந் ஸ ஸர்வதா

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                8

 

நான்முகனுக்கு அந்தராத்மாவாயிருந்து உலகத்தைப் படைத்தும், தானே நேரில் அச்சுதனாய்த் தோன்றி அதை ரக்ஷித்தும், ருத்ரனுக்கு ஆத்மாவாய் நின்று இதனை அழித்தும் வருகிறவரும், குணசாலிகளுள் முதன்மையானவரும், நன்ஞானம், படிக்கப்படும் பொருளாக ஆகும் ஆற்றல், அகிலத்தையும் தாங்கும் வலிமை, இதில் ஆயாசமின்மை, பிறரைத் தம் இஷ்டப்படி இயங்கும்படிச் செய்ய வல்ல மிடுக்கு, ஸூர்ய வெளிச்சத்தில் விளக்குப்போல் பிற பொருளை இல்லையாக்கவல்ல பேரொளி இவையாவும் உடையவரும், தோஷம் சிறிதுமில்லாத வருமான ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

பரஸ் ஸுராணாம் பரமோ (அ)ஸுராணாம்

பரோ யதீநாம் பரமோ முநீநாம்

பரஸ் ஸமஸ்தஸ்ய ச யஸ் ஸ ஸர்வதா

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                9

 

தேவர்க்கும், அஸுரர்க்கும், துறவிகட்கும், முனிவர்க்கும், எல்லாவற்றிற்குமே மிகமிக உயந்தவரான ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

த்யாதோ முநீநா மபகல்மஷைர் யோ

ததாதி முக்திம் பமரமேஶ்வர:

மநோ(அ)பிராம: புருஷஸ் ஸ ஸர்வதா

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                10

 

எல்லாக் காலத்திலும் தன்னையே நினைத்திருப்பவர்களின் குற்றமற்ற உள்ளங்களால் சிந்தனை செய்யப்பட்டு, அவர்க்கு முக்தியளிப்பவராயும், மனதைக்கவரும் அழகுடையவரகவும் எல்லா பலனையும் தர வல்லவராயும் உள்ள ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

ஸுரேந்த்ர வைவஸ்வத வித்தபாம்பு

ஸ்வரூபரூபீ பரிபாதி யோ ஜகத்

ஸ ஶுத்த ஶுத்த: பரமேஶ்வர:

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                11

 

தேவேந்த்ரன், இயமன், வருணன், குபேரன் என்பவைத் தம் உடலாகக் கொண்டு யார் உலகைப் பராமரிக்கிறாரோ, தூய பொருட்க்கும் தூய்மை யளிக்கும் அந்த  ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

 

யந்நாம ஸங்கீர்த்தநதோ  விமுச்யதே ஹி

அநேக ஜன்மார்ஜித பாபஸஞ்சயாத்

பாபேந்தநாக்நிஸ் ஸ ஸதைவ நிர்மலோ

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                12

 

பலபல பிறவிகளில் ஈட்டிய பாபமூட்டைகள் எவருடைய திருநாம ஸங்கீர்த்தனத்தினால் தொலைகிறதோ, விறகை அழிக்கும் தீபோல் பாபத்தை அழிக்கவல்லவரும், மாசற்றவருமான அந்த ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

 

 

 

வராஹாவதாரம்

 

யேநோத்த்ருதேயம் ரணீ ரஸாதலாத்

அஶேஷ ஸ்ருஷ்டிஸ்திதி காரணாதிகம்

பிபர்த்தி விஶ்வம் ஜதஸ் ஸ மூலம்

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                13

 

பாசி தூர்த்துக்கிடந்த பார்மகளைப் பாதாளத்திலிருந்து யார் தூக்கி எடுத்தாரோ, யார் மற்றெல்லாரையும் படைத்தளித்து அழிக்கவும் செய்கிறாரோ, ஜகந்மூலமான அந்த ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

பாதேஷு வேதே ஜடரே சராசரம்

ரோமஸ் வஶேஷா முநயோ முகே மகா:

யஸ்யேஶ்வரேஶஸ்ய ஸ ஸர்வதா ப்ரபு:

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                14

 

எந்த தேவதேவனுடைய பாதங்களில் வேதங்களும், திருவயிற்றில் அண்ட சராசரம் முழுவதும், உரோமங்களில் முனிவர்களைனவரும், முகத்தில் யாகங்களும் இருக்கின்றனவோ அந்த ஆற்றல் மிக்கானான ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

ஸமஸ்த யஜ்ஞாங்கமயம் வபு: ப்ரபோ:

யஸ்யாங் மீஶேஶ்வர ஸம்ஸ்துதஸ்ய

வராஹரூபி பகவாந் ஸ ஸர்வதா

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                15

 

ஸமஸ்த தேவர்களாலும் துதிக்கப்பட்ட எந்த ப்ரபுவின் திரு அவயவங்கள் யாக உபகரணங்களனைத்துமாய் ஆகின்றனவோ அந்தக் கோலவராஹ வடிவம் கொண்ட பகவானான ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

விக்ஷோப்ய ஸர்வோதி தோய ஸம்வம்

தாதாத்ரீம் ஜதஶ்ச யோ புவம்

யஜ்ஞேஶ்வரோ யஜ்ஞபுமாந் ச ஸர்வதா

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                16

 

மாகடல் நீரனைத்தையும் கலக்கி ப்ராணிகளின் இருப்பிடமான பார்மடந்தையைப் பேர்த்தெடுத்தவரும் யாகங்களால் பூஜிக்கப்படுபவரும் யஜ்ஞவராஹ மூர்த்தியுமான ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

பாதாள மூலேஶ்வர போகி ஸம்ஹதோ

விந்யஸ்ய பாதௌ ப்ருதிவீம் ச பிப்ரத:

யஸ்யோபமாநம்  ந பபூவ ஸோச்யுதோ

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                17

 

ஸமஸ்த ஜகதாதாரனான பரமனது திருப்பள்ளியான ஆதிசேஷன் மேல் திருப்பாதங்களை ஊன்றிப் பூமிதேவியைப் பேர்த்தெடுத்த எந்த பகவானுக்கு உவமையே இல்லையோ ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

ஸகர்கரம் யஸ்ய ச ப்ரும்ஹிதம் முஹு:

ஸநந்நாத்யைர் ஜநலோக ஸம்ஶ்ரிதை:

ஶ்ருதம் ஜயே த்யுக்திபரைஸ் ஸ ஸர்வதா

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                18

 

உறுமலுடன் கூடிய எவரது ஜயகோஷத்தை ஜநலோகத்தில் இருந்த ஸநந்தநாதியர் பல்லாண்டு பாடிய வண்ணமே கேட்டு மகிழ்ந்தனரோ அந்த ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

ஏகார்ணவாத் யஸ்ய மஹீயஸோ மஹீம்

தாய வேகேந கமுத்பதிஷ்யத:

நதம் வபுர் யோகிவரைஸ் ஸ ஸர்வதா

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                19

 

மிகப்பெரிய நீர்ப்பரப்பிலிருந்து நிலமகளைப் பெயர்த்தெடுத்து விரைவாக மேலே பாய்ந்து வந்த எந்தக் கோலவராஹமூர்த்தியை ஸநகாதி யோகியர் கண்டு வணங்கினரோ அந்த ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

ஹதோ ஹிரண்யாக்ஷ மஹாஸுர: புரா

புராணபும்ஸா பரமேண யேந

வராஹரூபஸ் ஸ பதி: ப்ரஜாபதி:

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                20

 

மிகச் சிறந்த புராண புருஷனான யாரால் ஹிரண்யாக்ஷனென்ற  அஸுரன் அழிக்கப் பட்டானோ, அந்த ஞானப்பிரானான ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

நரஸிம்ஹாவதாரம்

 

ம்ஷ்ட்ரா கராளம் ஸுரபீதிநாஶகம்

க்ருதம் வபுர் திவ்ய ந்ருஸிம்ஹ ரூபிணா

த்ராதும் ஜத் யேந ஸ ஸர்வதா ப்ரபு:

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                21

 

தேவர்களின் பயத்தை அகற்றவல்லவரும் கோரைப் பற்களால் அச்சுறுத்துவதுமான நரங்கலந்த சிங்க உருவை உலகைக் காக்கவென்றே யார் தரித்தாரோ அந்த ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

தைத்யேந்த்ர வக்ஷஸ் ஸ்தல தாதாருணை:

கரேருஹைர் ய: க்ரகசா நுகாரிபி:

சிச்சே லோகஸ்ய யாநி ஸோ(அ)ச்யுதோ

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                22

 

அவுணன் மார்பைக் கிழிக்கவல்லதும் ரம்பம் போன்றதுமான நகங்களால் உலகின் பயத்தைப் போக்கிய ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

ந்தாந்த தீப்தத்யுதி நிர்மலாநி ய:

சகார ஸர்வாணி திஶாம் முகாநி

நிநா வித்ராஸித தாநவோ ஹ்யஸௌ

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                23

 

பற்களின் காந்தியால் திசை முடிவிலும் ஒளி பரப்புகிறவரும் ஸிம்ஹநாதத்தால் அஸுரர்களை நடுக்கமுறச் செய்பவருமான ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

யந்நாம ஸங்கீர்த்தநதோ மஹாயாத்

விமோக்ஷ மாப்நோதி ந ஸம்சயம் நர:

ஸ ஸர்வ லோகார்த்திஹரோ ந்ருகேஸரீ

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                24

 

தன் நாமத்தைச் சொல்பவனது பெரும் பயத்தைப் போக்கியருள்பவரும் உலகனைத்தின் துயரைத் துடைப்பவருமான சிங்கப்பிரானான ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

ஸடா கராள ப்ரமணாநிலாஹதா:

ஸ்புடந்தி யஸ்யாம்புதராஸ் ஸமந்தத:

திவ்யஸிம்ஹ: ஸ்புரிதா நலேக்ஷணோ

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                25

 

அசையும் பிடறிமயிர்களால் மேக்க் கூட்டங்களை நாற்புறமும் சிதறிவிழும்படி செய்பவரும், ஜ்வலிக்கும் கனல் போன்ற கண்களை உடையவரும் ஆன சிங்கப்பிரான் (ஹரி) எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

தீக்ஷண ஜ்யோதிஷி ரஶ்மிமண்டலம்

ப்ரலீந மீஷந் ந ரராஜ பாஸ்வத:

குத: ஶஶாங்கஸ்ய ஸ திவ்யரூப த்ருக்

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                26

 

பகலவனது கதிர்கூட்டங்கள் எவரது கண்ணொளியில் மங்கிப் போகிறதோ, சந்திரனைப் பற்றிப் பேசவே வேண்டியதில்லையோ அந்த அழகிய சிங்க உருவம் தரித்த ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

அஶேஷ தேவேஶ நரேஶ்வரேஶ்வரை:

தா ஸ்துதம் யச்சரிதம் மஹாத்புதம்

ஸ ஸர்வ லோகார்த்தி ஹரோ மஹாஹரி:

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                27

 

எந்த சிங்கபிரானது மிக அத்புத சரிதையை ப்ரபுக்களும் மேலாத் தேவரும் நிலத்தேவரும் புகழ்ந்தவண்ணம் இருக்கிறார்களோ, உலகனைத்தின் துயரையும் பாபங்க்களையும் போக்கவல்ல அந்த  ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

த்ரவந்தி தைத்யா: ப்ரணமந்தி தேவதா:

நஶ்யந்தி ரக்ஷாம்ஸி அபயாந்தி சாரய:

யத்கீர்த்தநாத் ஸோ(அ)த்புத ரூபகேஸரீ

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                28

 

எவருடைய திருநாமத்தைச் சொன்ன மாத்திரத்தாலேயே அஸுரர்கள் ஓடுகின்றனரோ, தேவர்கள் வணங்குகின்றனரோ, அரக்கர்கள் அழிந்துபோவார்களோ, எதிரிகள் திரும்பி ஓடுவார்களோ, அந்த அழகியசிங்கரான ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

வாமனாவதாரம்

 

ருக்பாவிதம் யோ யஜுஷா ஹி ஸ்ரீமத்

ஸாமத்வநி த்வஸ்த ஸமஸ்த பாதகம்

சக்ரே ஜகத் வாமநகஸ் ஸ ஸர்வதா

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                29

 

ருக்வேதத்தை உச்சரித்து உலகைத் தூயதாக்கியும், யஜுர்வேதத்தால் நிறம் பெறச் செய்தும் ஸாமகானத்தால் ஸமஸ்த பாதகத்தையும் அழித்துமுள்ள திருக்குறள் உருவனான ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

 

யத்பா விந்யாஸ பவித்ரதாம் மஹீ

யயௌ வியச்சர்க் யஜுஷா முதீரணாத்

ஸ வாமநோ வாமஶரீர ரூபத்ருக்

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                30

 

எவருடைய திருவடி படுதலால் நிலப்பரப்பும், ருக், யஜுஸ், முதலிய வேதங்கலைச் சொல்வதால் வானமும் புனிதமாயினவோ, அந்த வாமனமூர்த்தி ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

யஸ்மிந் ப்ரயாதே(அ)ஸுர பூப்ருதோ(அ)த்வராத்

நநாம கேதாத் அவநிஸ் ஸஸாரா

ஸ வாமநஸ் ஸர்வ ஜந்மயஸ் ஸதா

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                31

 

அஸுர மன்னன் மஹாபலியின் அரண்மனையை நோக்கி எவர் போனபோது கடல் சூழ்ந்த நிலமங்கை வருந்தித் தலைகுனிந்தாளோ, உலகனைத்தயும் தன்னுள் ஒடுக்கிய அந்த்த் திருக்குறப்பனான ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

மஹாத்புதே தைத்யபதேர் மஹாத்வரே

யஸ்மிந் ப்ரவிஷ்டே க்ஷுபிதம் மஹாஸுரை:

ஸ வாமநோ(அ)ந்தஸ் ஸ்தித ஸப்தலோகத்ருக்

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                32

 

மிக ஆச்சர்யமான அஸுர மன்னனது யாகசாலையில் எவர் ப்ரவேஸித்ததும் அஸுரரனைவரும் குழப்பமடைந்து போயினரோ, ஸப்தலோகத்தையும் தன் வயிற்றில் வைத்துக்கொண்ட அந்த  ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

ஸங்கைஸ் ஸுராணாம் திவி பூதலஸ்திதை:

ததா மநுஷ்யைர் ககநே ச கேசரை:

ஸ்துத: க்ரமாத் ய: ப்ரசசார ஸர்வதா

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                33

 

ஸ்வர்க்கத்தில் தேவர்களாலும், தரையில் மனிதர்களாலும் வானில் வானவர்களாலும் முறையுடன் துதிக்கப் பட்டவாறு உலகளந்த ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

க்ராந்த்வா ரித்ரீம் ககநம் ததா திவம்

மருத்பதேர் ய: ப்ரததௌ த்ரிவிஷ்டபம்

தேதேவோ புவனேஶ்வரேஶ்வரோ

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                34

 

நிலத்தையும் வானத்தையும் ஸ்வர்க்க உலகையும் அளந்துகொண்டு, இந்திரனுக்கு மூவுலகையும் அளித்த ஜகந்நாதனான ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

அநுக்ரஹம் சாபி லே ரநுத்தமம்

சகார யச்சேந்த்ர பதோபமம் க்ஷணாத்

ஸுராம்ஶ்ச யஜ்ஞாம்ச புஜஸ் ஸ ஸர்வதா

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                35

மஹாபலிக்கு இந்திர பதவியையொத்த உயர்பதவியையும் யாகத்தின் ஹவிர்ப்பாகத்தைத் தேவர்களுக்கும் விரைவில் அளித்த ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

மத்ஸ்யாவதாரம்

 

ரஸாதலாத் யேந புரா ஸமாஹ்ருதா:

ஸமஸ்தவேதா ஜலசார ரூபிணா

ஸ கைடபாரிர் மதுஹாம்புஶாயீ

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                36

 

மீனாகி, மதுகைடபர்களை அழித்து, பாதாளத்திலிருந்து வேதங்களை மீட்டுக் கொணர்ந்த க்ஷீராப்தி நாதனான ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

 

பரசுராமாவதாரம்

 

நி: க்ஷத்ரியாம் யஶ்ச சகார மேதிநீம்

அநேகஶோ பாஹுவநம் ததாச்சிநத்

ய: கார்த்தவீர்யஸ்ய ஸ பார்க்கவோத்தமோ

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                37

 

கார்த்தவீர்யார்ஜுனனது ஆயிரம் தோள்களைத் துணித்து, பலகால் அரசர்களையழித்த பரசுராமராகிய ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

 

ராமாவதாரம்

 

நிஹத்ய யோ வாலிந முக்ரவிக்ரமம்

நிபத்ய ஸேதும் ஜலதௌ தஶாநநம்

காந சாந்யாந் ரஜநீசராநஸௌ

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                38

 

கொடிய வலிமையுள்ள வாலியைக் கொன்று, மாகடலில் அணையைக் கட்டி தசமுகனையும் மற்றுமுள்ள அரக்கர்களையும் அழித்த ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

 

க்ருஷ்ணாவதாரம்

 

 

சிக்ஷேப பால: ஶகடம் பபஞ்ஜ யோ

யமார்ஜுநம் கம்ஸமரிம் ஜகாந ச

மமர் சாணூரமுகாந் ஸ ஸர்வதா

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                39

 

பால கிருஷ்ணனாய்ச் சகடெறிந்தும் மருதமரங்களை முறித்தும் சாணூராதியரையும், பகைமைகொண்ட கம்சனையும் அழித்தும் உகந்த ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

ப்ராதஸ் ஸஹஸ்ராம்ஶு மரீசி நிர்மலம்

கரேண பிப்ரத் பவாந் ஸுர்ஶநம்

கௌமோகீம் சாபி கதா மநந்தோ

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                40

 

காலையில் ஆயிரம் கதிரவனது கதிர்க்கூட்டத்தைப் போன்ற பேரொளியுள்ள சக்கரத்தையும் கௌமோதகி எனும் கதையையும் ஏந்திய பகவானான ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

ஹிமேந்து குந் ஸ்படிகா நிர்மலம்

முகாநிலாபூரிதம் ஈஶ்வரேஶ்வர:

மத்யாஹ்நகாலே(அ)பி ஸ ஶங்கமுத்வஹந்

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                41

 

பனிநீர், சந்த்ர மண்டலம், குந்தப்பூ, ஸ்படிகமணி இவை போன்று வெண்ணிறமாகவும், திருமுகத்தால் காற்று நிரப்பப் படுவதாயும் உள்ள ஸ்ரீ பாஞ்சஜந்யத்தை நடுப்பகலில் ஏந்தியருளும் ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

ததா(அ)பராஹ்ணே ப்ரவிகாஸி பங்கஜம்

வக்ஷஸ்ஸ்தலேந ஶ்ரியமுத்வஹந் ஹரி:

விஸ்தாரி பத்மாயத பத்ரலோசநோ

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                42

 

மலர்ந்த தாமரையைக் கையிலும் திருமகளைத் திருமார்பிலும் மாலையில் ஏந்தியருளும் மலர்ந்த தாமரையிதழையொத்த கண்ணினரான ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

 

ஸர்வேஷு காலேஷூ ஸமஸ்ததேஶேஷு

அஶேஷகார்யேஷு ததேஶ்வரேஶ்வர:

ஸர்வைஸ் ஸவரூபைர் பகவாநநாதிமாந்

மமாஸ்து மாங்ள்ய விவ்ருத்தயே ஹரி:                                                                43

 

எல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும், எல்லாத் தொழில்களிலும், எல்லாவித உருவங்களுடன் தோன்றியருளும் ஆதியந்தமற்ற பகவானான ஹரி எக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக.

 

பலஶ்ருதி

 

ஏதத் படந் தால்ப்ய ஸமஸ்தபாபை:

விமுச்யதே விஷ்ணுபரோ மநுஷ்ய:

ஸித்த்யந்தி கார்யாணி ததாஸ்ய ஸர்வாந்

அர்த்தா நவாப்நோதி யதேச்சதே தாந்                                                                     44

 

தால்ப்ய முனிவரே, விஷ்ணுவே பரதேவதையெனும் உண்மை உணர்ந்த மனிதன் இத்துதி  நூலைப் பாராயணம் செய்து எல்லாப் பாபங்களி லிருந்தும் விடுபடுகிறான். அவனுடைய கார்யங்கள் யாவும் நற்பயணை அளிக்கின்றன.

 

 

துஸ்ஸ்வப்ந: ப்ரஶம முபைதி பட்யமாநே

ஸ்தோத்ரேஸ்மிந் ஶ்ரவண விதௌ ஸ்தோத்யதஸ்ய

ப்ராரம்போ த்ருதமுபயாதி ஸித்திமீஶ:

பாபாநி க்ஷபயதி சாஸ்ய தேதேவ                                                             45

 

இத்துதியை எப்பொழுதும் படிப்பதைக் கேட்பதென்னும் விரதம் பூண்டவனது கெட்ட கனவுகள் அடங்கிப் பயனற்றுப் போகும். துவங்கிய தொழில்கள் விரைவில் நற்பயனளிக்கும் நிறைவேறும். தேவதேவனாகிய இறைவன் பாவங்களையெல்லாம் போக்கிவிடுகிறான்.

 

மாங்ள்யம் பரமபதம் ஸதார்த்த ஸித்திம்

நிர்விக்நா மதிகபலாம் ஶ்ரியம் ததாதி

கிம் லோகே ததிஹ பரத்ர சாபி பும்ஸாம்

யத் விஷ்ணு ப்ரவணதியாம் ந தால்ப்ய ஸாத்யம்                                               46

 

மங்கலத்தையும், நலமந்தமில்லதோர் நாட்டையும், விரும்பியது நன்கு விரைவில் கைகூடுவதையும், தடையற்ற பெருஞ்செல்வத்தையும் இறைவன் அருளுவான். தால்ப்ய முனிவரே, இம்மையிலும், மறுமையிலும் திருமாலடியார்க்குக் கிட்டாதது யாதுமில்லை.

 

தேவேந்த்ரஸ் த்ரிபுவந மர்த்த மேகபிங்க:

ஸம்ஸித்திம் த்ரிபுவநகாம் ச கார்த்தவீர்ய

வைதேஹ: பரமபம் ப்ரஸாத்ய விஷ்ணும்

ஸம்ப்ராப்தஸ் ஸகல பலப்ரதோ ஹி விஷ்ணு:                                                     47

 

கார்த்தவீர்யார்ஜுனன் மூவுலகிலும் அதர்மத்தைத் தடுக்கவல்ல தர்மசக்தியையும் குபேரன் பணத்தின் அதிபனாகும் பதவியையும் பதவியையும், இந்த்ரன் மூவுலகில் உள்ள இன்பத்தையும், விதேஹ மன்னன் பரமபதத்தையும் திருமாலைப் பூசித்தே பெற்றனர். எல்லா பலனையுமளிக்க வல்லார் திருமால்தானே.

 

ஸர்வாரம்பேஷு தால்ப்யைதத் துஸ்ஸ்வப்நேஷு ச பண்டித:

ஜபே தேகமநா விஷ்ணௌ ததா(அ)மங்கள்ய ர்ஶநே                                      48

 

தால்ப்யரே, அறிவுள்ளவன் எல்லாக் கார்யங்களை ஆரம்பிக்கும்போதும் கெட்ட கனவுகள் தோன்றும்போதும் அமங்களங்கள் நேரும்போதும், இறைவனான திருமாலிடம் மாறாத பக்தியுடன் இத்துதியை ஜபம் செய்யவேண்டும்.

 

ஶமம் ப்ரயாந்தி துஷ்டாநி க்ரஹபீடாஶ்ச தாருணா

கர்மாரம்பாஶ்ச ஸித்த்யந்தி புண்யமாப்நோதி சோத்தமம்                            49

 

அவனது தீமைகள் யாவும் அழிந்து போகின்றன. கொடிய கிரஹங்களின் தீய பலன்களும் மாறுகின்றன. தொழில்களும் நற்பயனளிக்கின்றன. தீய கனவும் பயனற்றதாகிறது. நல்வினையின் உயர்ந்த பயனையும் பெறுகிறான்.

 

ஹரிர் ததாதி பத்ராணி மங்ள்யஸ்துதி ஸம்ஸ்துத:

கரோ த்யகில ரூபைஸ்து ரக்ஷா மக்ஷாத ஶக்திப்ருத்                                         50

 

மாங்கள்யஸ்தவத்தால் துதிக்கப்பெற்ற திருமால் எல்லா மங்களங் களையும் நல்குகிறான். எல்லாவித வடிவத்திலும் தோன்றி, குறைவற்ற ஆற்றல்  படைத்த அந்தப் பரமன், அடியார்க்கு நற்பாதுகாப்பையும் அளிக்கிறான்.

 

ஸ்ரீவிஷ்ணு தர்மோத்தரத்திலுள்ள மாங்கள்யஸ்தவம் முற்றும்

 

 

 

 

 

ஸ்ரீ விஷ்ணு விஜய ஸ்தோத்ரம்

 

இதையும் மாங்கள்ய ஸ்தவத்தையும் சேர்த்தே பாராயணம் செய்வது னலம். இந்த ஸ்தோத்ரத்திலும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பரத்வம் சொல்லப்பட்டு இருக்கிறது. இதைப்படிப்பதால் நடக்கமுடியாத நல்ல காரியங்கள் நடக்கும். எதிலும் வெற்றி கிட்டும்.

தேவா ஊசு:

நதா: ஸ்ம விஷ்ணும் ஜகதாதிபூதம்

ஸுராஸுரேந்த்ரம் ஜகதாம் ப்ரபாலகம்

யந்நாபி  பத்மாத் கில பத்மயோநி:

பபூவ தம் வை ஶரணம் தா: ஸ்ம                                                                 1

நமோ நமோ மத்ஸ்ய வபுர்த்தராய

நமோஸ்து தே கச்சபரூப தாரிணே

நம: ப்ரகுர்மஶ்ச ந்ருஸிம்ஹரூபிணே

ததா புநர் வாமநரூபிணே நம:                                                                         2

 

நமோஸ்து தே க்ஷத்ர விநாஶநாய

ராமாய ராமாய ஶாஸ்ய நாஶிநே

ப்ரலம் ஹந்த்ரே ஶிதிவாஸஸே நமோ

நமோஸ்து புத்தாய ச தைத்யமோஹிநே                                                    3

 

ம்லேச்சாந்தகாயாபி ச கல்கி நாம்நே

நம: புந: க்ரோவபுர்த்தராய

ஜகத்திதார்த்தம் ச யுகே யுகே வாந்

பிபர்த்தி ரூபம் த்வஸுராவாய                                                                   4

 

நிஶூதிதோயம் ஹ்யதுநா கில த்வயா

தைத்யோ ஹிரண்யாக்ஷ இதி ப்ரல்:

யஶ்சேந்த்ர முக்யாந் கில லோகபாலாந்

ஸம்ஹேலயா சைவ திரஶ்சகார                                                                    5

 

ஸ வை த்வயா தேவஹிதார்த்தமேவ

நிபாதிதோ தேவவர ப்ரஸீ

த்வமஸ்ய விஶ்வஸ்ய விஸர் கர்த்தா

ப்ராஹ்மேண ரூபேண ச தேதேவ                                                              6

 

பாதா த்வமேவாஸ்ய யுகே யுகே

ரூபாணி த்ஸே ஸுமநோஹராணி

த்வமேவ காலாக்நி ஹரஶ்ச பூத்வா

விஶ்வம் க்ஷயம் நேஷ்யஸி சாந்தகாலே                                                      7

 

அதோ வாநேவச விஶ்வகாரணம்

ந தே பரம் ஜீவ மஜீவமேவ ச

யத்கிஞ்ச பூதம் ச விஷ்ய ரூபம்

ப்ரவர்த்தமாநம் ச தவைவ ரூபம்                                                                    8

 

ஸர்வம் த்வமேவாஸி சராசராக்யம்

பாதி விஶ்வம் த்வத்ருதே ச கிஞ்ச்த்

அஸ்தீதி நாஸ்தீதி ச பேத நிஷ்ட்டம்

த்வய்யேவ பாதம் ஸதஸத் ஸ்வரூபம்                                                          9

 

ததோ வந்தம் கதமோபி தே

ந ஜ்ஞாது மர த்யவிபக்வ புத்தி:

ருதே வத் பா பராயணம் ஜநம்

தேநாதா: ஸ்ம: ஶரணம் ஶரண்யம்                                                            10

 

வ்யாஸ உவாச:

 

ததோ விஷ்ணு: ப்ரஸந்நாத்மர

உவாச த்ரிதிவௌகஸ:

துஷ்டோஸ்மி தேவா த்ரம் வோ

யுஷ்மத் ஸ்தோத்ரேண ஸாம்ப்ரதம்                                                               11

 

 

பலஶ்ருதி

 

ய இதம் ப்ரபடேத் க்த்யா விஜயஸ்தோத்ர மாராத்

ந தஸ்ய துர்லபம் தேவா: த்ரிஷுலோகேஷு கிஞ்சந                                         12

 

வாம் ஶதஸஹஸ்ரஸ்ய ஸம்யக் தத்தஸ்ய யத்பலம்

தத்பலம் ஸமவாப்நோதி கீர்த்தந ஶ்ரவணாந் நர:                                               13

 

ஸர்வகாமப்ரதம் நித்யம் தேதேவஸ்ய கீர்த்தநம்

அத: பரம் மஹாஜ்ஞாநம் ந பூதம் ந விஷ்யதி                                                      14

 

*****

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.