மஹாவிஷ்ணு தனிப்பாடல்கள்

 

ஸஶங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்

ஸபீதவஸ்த்ரம் ஸரஸீருஹேக்ஷணம்

ஸஹார வக்ஷஸ்தல ஶோபிகௌஸ்துபம்

நமாமி விஷ்ணும் ஶிரஸா சதுர்ப்புஜம்

 

மேகஶ்யாமம் பீதகௌஶேய வாஸம்

ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்துபோத் பாஸிதாங்கம்

புண்யோபேதம் புண்டரீயகாயதாக்ஷம்

விஷ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம்

 

ஶாந்தாகாரம் புஜகஶயனம் பத்மநாபம் ஸுரேஶம்

விஶ்வாதாரம் ககநஸத்ருஶம் மேகவர்ணம் ஶுபாங்கம்

லக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ருத் த்யானகம்யம்

வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்

 

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்

ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

 

ஸத்யஜ்ஞாநா ஸுகஸ்வரூப மமலம் க்ஷீராப்திமத்யே ஸ்திதம்

ஸ்வாங்காரூட ரமா ப்ரஸந்ந வதனம் பூஷா ஸஹஸ்ரோஜ்வலம்

த்ர்யக்ஷம் சக்ர பிநாக ஸாபயகராந் பிப்ராண மர்க்கச்சவிம்

சத்ரீபூத பணீந்த்ர மிந்துதவளம் லக்ஷ்மீ ந்ருஸிம்ஹம் பஜே

உபாஸ்மஹே ந்ருஸிம்ஹாக்யம் ப்ரஹ்ம வேதாந்த கோசரம்

பூயோலாலித ஸம்ஸார ச்சேதஹேதும் ஜகத்குரும்

 

நம்ப னேநவின் றேத்தவல் லார்கள் நாத னேநர சிங்கம தானாய்

உம்பர் கோனுல கேழு மளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன் னேந்தி

கம்ப காமகரி கோள்விடுத் தானே காரணா கடலைக்கடைந் தேனே

எம்பிரான் தன்னை யாளுடைத் தானே ஏழையேனிடரைக் களையாயே (பெரியாழ்வார் திருமொழி)

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

ஸஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீராம நாம வரானனே

 

ஓம் ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்

லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோபூயோ நமாம்யஹம் (10 முறை)

ஆர்த்தானாம் ஆர்தி ஹந்தாரம் பீதாநாம் பீதி நாசனம்

த்விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம்யஹம்

(1008 முறை சத்ருபயம், துன்பம் நீங்க)

 

க்ருஷ்ண க்ருஷ்ண க்ருபா ஸிந்தோ பக்திஸிந்து ஸுதாகர

மாமுத்தர ஜகந்நாத மாயாமோஹ மஹார்ணவாத்

 

 

 

துளசி ஸந்நிதியில்

யன்மூலே ஸர்வதீர்த்தாநி யன்மத்யே ஸர்வதேவதா:

யதக்ரே ஸர்வவேதாச்ச துளஸிம் தாம் நமாம்யஹம் (தேவீ பாகவதம்)

(12 முறை வைதவ்ய தோஷமகல)

 

துளசி ஸந்நிதியில்

ப்ருந்தா ப்ருந்தாவநீ விச்வபூஜிதா விச்வ பாவநீ

புஷ்பஸாரா நந்திநீச துளஸீ க்ருஷ்ண ஜீவநீ (தேவீ பாகவதம்)

(3 முறை அச்வமேத யாகபலன்பெற)
இந்து சமயத்தில் துளசிச்செடி புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூசைகளின் பொது அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும், துளசியிலை முக்கியத்துவம் பெறுகிறது. துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட துளசியின் மகத்துவத்தால் அந்த நீரும் மருத்துவ குணம் கொண்டதாக மாறும். வைணவ ஆலயங்களில் துளசி தீர்த்தம் நைவேதனமாக வழங்கப்படும். இதற்கு பெருமாள் தீர்த்தம் என்று பெயர்.

துளசியின் நுனியில் பிரம்மதேவரும், அடியில் சிவபெருமானும், மத்தியில் திருமாலும் வாசம் செய்கின்றனர். தவிர பன்னிரண்டு ஆதித்யர்கள், பதினோரு ருத்திரர்கள், எட்டு வசுக்கள், அக்னி தேவர்கள் இருவர் மற்றும் புஷ்கரம் முதலிய தீர்த்தங்கள், கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள், வாசுதேவர் போன்ற தேவர்கள் துளசி தளத்தில் வசிக்கின்றனர். துளசி இலை பட்ட நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படும். இதனால் தான் துளசி நீரால், இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

துளசி மாடத்தை மூன்று முறை வலம் வரும் போது இந்த ஸ்லோகத்தை கூறினால் ஸ்ரீமஹாலட்சுமி கடாக்ஷம் உண்டாகும்.

நமஸ் துளசி கல்யாணி,
நமோ விஷ்ணுப்ரியே சுபே
நமோ மோக்ஷப்ரதே தேவி
நமஸ் ஸம்பத் ப்ரதாயினே
துளசி சு-சகி-சுபே
பாப ஹாரிணி புண்யதே
நமஸ்தே நாதனுதே

நாராயண நமப்ரியே!

– See more at: http://astrology.dinamani.com/

 

 

நமோ மத்ஸ்ய கூர்மாதி  நாநாஸ்வ ரூபை:

ஸதா பக்த கார்ய: உத்யதாய ஆர்த்ரி ஹந்த்ரே

விதா த்ராதி ஸர்க்க ஸ்திதி த்வம்ஸ கர்த்ரே

கதா சங்க பத்மாரி ஹஸ்தாய தேஸ்து (பவிஷ்யம்)

(ஸங்கடம் மனக்கவலை அகல, இருவேளையும் 3 முறை)

 

கல்யாணாத்புத காத்ராய காமிதார்த்தப் ப்ரதாயினே

ஸ்ரீமத் வேங்கட நாதாய ஸ்ரீ நிவாஶாய தே நம:

ஶ்ரிய: காந்தாய கல்யாண நிதயே நித்யேர்த்தினாம்

ஸ்ரீவேங்கட நிவாஶாய ஸ்ரீனிவாஶாய மங்களம்

ஜ்ஞானா நந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்

ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே

 

ஸஹஸ்ராதித்ய ஶங்காஶம் ஸஹஸ்ர வதனாம்பரம்

ஸஹஸ்ரதோ: ஸஹஸ்ராரம் ப்ரபத்யேஹம் ஶுதர்ஸனம்

ஹூம்கார பைரவம் பீமம் ப்ரபந்நார்த்திஹரம் ப்ரபும்

ஸர்வபாப ப்ரஶமனம் ப்ரபத்யேஹம் ஶுதர்ஸனம்

 

அச்யுத அநந்த கோவிந்த நாம உச்சாரண பேஷஜாத்

நச்யந்தி ஸகலா: ரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்

(நோயகல 108 முறை விபூதியில் தீராத நோயகல 40 நாள்)

 

அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸத்யம் ஜநார்தநம்

ஹம்ஸம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத் துஸ்வப்ன சாந்தயே (3 முறை)

 

விஷ்ணும் நாராயணம் க்ருஷ்ணம் மாதவம் மதுஸூதனம்

ஹரிம் நரஹரிம் வநீதே கோவிந்தம் ததி வாமனம்

(முதல் நாள் செய்த பாபம் அகல, 3 முறை)

 

ஓம் நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மனே

அரூப பஹுரூபாய வ்யாபினே பரமாத்மனே (ஆக்னேயம்)

(தீராத நோயகல, காலையில் 1008 முறை ஒரு மண்டலம்)

 

பாரம்பரம் விஷ்ணு: அபார: பார பர: ப்ரேப்ய: பரமாத்மரூபி

ஸ ப்ரம்மபார: பரபார பூத பர: பரணாம் அபபாரபூத: (ப்ராம்மம்)

(கர்மாவை விட்ட பாபமகல, 3 முறை காலையும் மாலையும்)

 

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு

(நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)

 

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின எல்லாம்

நிலந்தரம் செய்யும் நீள்விசும் பருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்

வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்

நலந்தரும் சொல்லை நான்கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்

(நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)

 

சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு

செல்லுந் தனையும் திருமாலை – நல் இதழ்த்

தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்

நாமத்தால் ஏத்துதிரேல் நன்று (நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)

 

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்பு (உ)ருகு சிந்தை இடுதிரியா – நன்பு(உ)ருகி

ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன், நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான் (நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)

 

தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்

சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் – சூழும்

திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு

இரண்டு (உ)ருவும் ஒன்றாய் இசைந்து (நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)

 

வணங்கும் துறைகள் பல பல ஆக்கி மதிவிகற்பால்

பிணங்கும் சமயம் பல பல ஆக்கி அவை அவை தோ(று)

அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்

இணங்கு நின்னோரை இல்லாய்,  நின் கண் வேட்கை எழுவிப்பனே (நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)

 

அவரவர் தமதமது அறி(வு)ன் அறி வகை வகை

அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்

அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்

அவரவர் விதிவழி அடைய நின்றனரே (நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)

 

ஆடி யாடி அகங் கரைந்து, இசை

பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி, எங்கும்

நாடி நாடி நரசிங்கா என்று

வாடி வாடும் இவ் வாணுதலே (நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)

 

கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம்

தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்றார்த்தும்

வண்டார் தண்ணந் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்

பண் தான் பாடி நின்றாடிப் பரந்து திரிகின்றனவே (நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)

 

கெடுமிடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்

கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்

விடமுடை யரவில் பள்ளீ விரும்பினான் சுரும்பலற்றும்

தடமுடை வயல் அனந்தபுர நகர்புகுதும் இன்றே (நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.