பகை கடிதல்

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய

பகை கடிதல்

 

திருவளர் சுடர் உருவே சிவைகரம் அமர் உருவே

அருமறை புகழ் உருவே அறவர்கள் தொழும் உருவே

இருள்தபும் ஒளி உருவே என நினை எனெதெதிரே

குருகுஹன் முதல்மயிலே கொணர்தியுன் இறைவனையே                  1

 

மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகர் உருவே

பொறைமலி உலகு உருவே புன நடை தரும் உருவே

இறையிள முக உருவே என நினை எனெதெதிரே

குறைவு அறு திருமயிலே, கொணர்தியுன் இறைவனையே                  2

 

இதரர்கள் பலர்பொரவே இவண் உறை எனெதெதிரே

மதிரவி பல எனதேர் வளர்சரண் இடைஎனமா

சதுரொடு வருமயிலே தடவரை அசைவு உறவே

குதிதரும் ஒருமயிலே கொணர்தியுன் இறைவனையே                          3

 

பவ நடை மனுடர்முனே படருறும் எனெதெதிரே

நவமணி நுதலணியேர் நகைபல மிடறு அணிமால்

சிவணிய திருமயிலே திடனொடு  நொடிவலமே

குவலயம் வரும் மயிலே, கொணர்தியுன் இறைவனையே                    4

 

அழகுறு மலர்முகனே அமரர்கள் பணிகுகனே

மழ உரு உடையவனே, மதி நனி பெரியவனே

இழவிலர் இறையவனே என நினை எனதெதிரே

குழகது மிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே                        5

 

இணை அறும் அறுமுகனே இத சசி மருமகனே

இணர் அணி புரள் புயனே என நினை எனெதெதிரே

கணபண அரவுரமே கலைவுற எழுதருமோர்

குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே                      6

 

 

 

எளியவ என் இறைவ குகா என நினை எனதெதிரே

வெளி நிகழ் திரள்களைமீன் மிளிர்சினை எனமிடைவான்

பளபள எனமினுமா பலசிறை விரிதரு நீள்

குளிர்மணி விழிமயிலே, கொணர்தியுன் இறைவனையே                    7

 

இலகயில் மயில்முருகா என நினை எனதெதிரே

பலபல களமணியே, பலபல பதமணியே

கலகல கலஎனமா கவினொடு வரும் மயிலே

குலவிடு சிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே                        8

 

இகலறு சிவகுமரா என நினை எனெதெதிரே

சுகமுனிவரர் எழில் ஆர் சுரர் பலர் புகழ் செயவே

தொகுதொகு தொகு எனவே சுர நடம் இடும் மயிலே

குகபதி அமர்மயிலே கொணர்தியுன் இறைவனையே                           9

 

கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே

அருணையன் அரன் எனவே அகம் நினை எனதெதிரே

மருமலர் அணிபலவே, மருவிடும் களமயிலே

குருபல அவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே                         10

 

***

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.