திரு நாவுக்கரசர் அருளிய பஞ்சாக்கரப்பதிகம்

உயிருக்குறுதியும் சகல ஆபத்துக்கள் நீங்கி மனம்

நிம்மதியுற இதை ஓதவும்.

 

திருச்சிற்றம்பலம்

 

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக்கை தொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச் சிவாயவே                                       1

 

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை

ஆவினுக் கருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்

கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது

நாவினுக் கருங்கலம் நமச் சிவாயவே                                  2

 

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்

உண்ணிய புகிலவை ஒன்றும் இல்லையாம்

பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை

நண்ணி நின்றறுப்பது நமச் சிவாயவே                               3

 

இடுக்கண் பட்டிருக்கினும் இரந்து யாரையும்

விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்

அடுக்கற் கீழ்க்கிடக்கினு மருளின் நாம் உற்ற

நடுக்கத்தைக் கெடுப்பது நமச் சிவாயவே                         4

 

வெந்த நீறருங்கலம் விரதிகட் கெலாம்

அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்

திங்களுக் கருங்கலம் திகழு நீண்முடி

நங்களுக் கருங்கலம் நமச் சிவாயவே                                  5

 

சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க் கலால்

நலமிலன் நாடொறும் நல்குவான் நலம்

குலமில ராகிலும் குலத்திக் கேற்பதோர்

நமமிகக் கொடுப்பது நமச் சிவாயவே                                 6

 

வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்

கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்

ஓடினேன் ஓடிச்சென்றுருவங் காண்டலும்

நாடினேன் நாடிற்று நமச் சிவாயவே                                                7

 

இல்லக விளக்கது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கது சோதியுள்ளது

பல்லக விளக்கது பலரும் காண்பது

நல்லக விளக்கது நமச் சிவாயவே                                          8

 

முன்னெறி யாகிய முதல்தன் முக்கணன்

தன்னெறி யேசரணா தல்திண் ணமே

அன்னெறி யேசென்றங் கடைந்தவர்க் கெல்லாம்

நன்னெறி யாவது நமச் சிவாயவே                                        9

 

மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்

பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ

நாப்பிணை தழுவிய நமச் சிவாயப்பத்து

ஏத்தவல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே                     10

 

திருச்சிற்றம்பலம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.