சுப்ரமணியர் தனிப்பாடல்கள்

ஸுப்ரமண்யர் தனிப்பாடல்கள்

 

எழும்போதும் வேலும் மயிலும் என்பேன் எழுந்தே மகிழ்ந்து

தொழும்போதும் வேலும் மயிலும் என்பேன் தொழுதே உருகி

அழும்போதும் வேலும் மயிலும் என்பேன் அடியேன் உடலம்

விழும்போதும் வேலும் மயிலும் என்பேன் செந்தில் வேலவனே

 

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி

ஏவரும் துதிக்க நின்ற இராறுதோள் போற்றி காஞ்சி

மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்

சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி

 

ஸுப்ரம்மண்யச்ச ஸேநாநீ: குஹஸ்கந்தச்ச வாமந:

மஹாஸேநோ த்வாதசாக்ஷ: விச்வபூ: ஷண்முக: சிவ: ||

சம்பு புத்ர: ச வல்லீச: தேவஸேனாபதி: ப்ரபு:

சரோத்பவ: சக்திபுத்ர: ப்ரஹ்மபூ: அம்பிகாஸுத: ||

பூதேச: பாவகி: ஸ்ரீமான் விசாக: சிகிவாஹன:

காங்கேய: ச கஜாரூட: சத்ருஹந்தா சடக்ஷர:                        (ஸ்காந்தம்)

 

ஸ்ரீகாங்கேயம் வஹ்னிகர்ப்பம் சரவணஜனிதம் க்ஞானசக்திம் குமாரம்

ப்ரஹ்மண்யம் ஸ்கந்ததேவம் குஹ மமலகுணம் ருத்ரதேஜஸ்வரூபம் ஸேனான்யம் தாரகக்னம் குருமசலமதிம் கார்த்திகேயம் ஷடாஸ்யம்

ஸுப்ரஹ்மண்யம் மயூரத்வஜரத ஸஹிதம் தேவதேவம் நமாமி.

 

அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்

பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்

கருணைகூர் முகங்க ளாறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே

ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலகம் உய்ய (கந்தபுராணம்)

 

அல்லல் பிறவி அலமலம் விண்ணா டுறைந்து

தொல்லைத் திருநுகரும் துன்பும் அலமலமால்

தில்லைத் திரு நடஞ்செய் தேவே இனித்தமியேற்

கொல்லைத் துயர்தீர்த் துனதுபதந் தந்தருளே (கந்தபுராணம்)

 

 

நாரணன் என்னுந் தேவும் நான்முகத்தவனும் முக்கட்

பூரணன் தானு மாகிப் புவிபடைத் தளித்து மாற்றி

ஆரண முடிவுந் தேறா அநாதியாய் உயிர்கட் கெல்லாம்

காரணனாய மேலோன் கழலிணை கருத்துள் வைப்பாம்.        (கந்தபுராணம்)

 

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க

வெற்பைக்கூறுசெய் தனிவேல் வாழ்க  குக்குடம் வாழ்க

செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க

மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடியாரெல்லாம்.

 

விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா

மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்புசெய்த

பழிக்குத் துணை அவன் பன்னிருதோளும் பயந்த தனி

வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே. (கந்தரலங்காரம்)

 

நாளென்செயும் வினைதானென்செயும் எனை நாடிவந்த கோளென்செயும்

கொடுங்கூற்றென்செயும் குமரேசரிருதாளும் சிலம்பும் தடங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்புமென் முன்னே வந்து தோன்றிடினே. (கந்தரலங்காரம்)

 

கையாலுனைத் தொழச் சென்னியினாலுன் கழல் வணங்க

மெய்யாயடிக்கடி வாக்கால் துதிக்க விதித்து மனம்

நல்கினியெனை நழுவவிடேல் ஐயா உனக்கு

அபயம் பழனாபுரி ஆண்டவனே.  (to be checked for correctness)

 

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட

தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரி

குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்புங் குன்றுந்

துளைத்தவேல் உண்டே துணை. (திருமுருகாற்றுப்படை வெண்பா)

 

உன்னையொழிய ஒருவரையும் நம்புகிலேன்

பின்னையொருவரை யான் பின்செல்லேன் – பன்னிருகைக்

கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்

வேலப்பா செந்திவாழ்வே.  (திருமுருகாற்றுப்படை வெண்பா)

 

அஞ்சுமுகந்தோன்றில் ஆறுமுகந்தோன்றும்

வெஞ்சமரில் அஞ்சேலென வேல்தோன்றும் – நெஞ்சில்

ஒருகால் நினைக்கில் இருகாலுந்தோன்றும்

முருகா வென்றோதுவார் முன். (திருமுருகாற்றுப்படை வெண்பா)

 

முருகனே செந்தில் முதல்வனே மாயோன்

மருகனே யீசன் மகனே – யொருகைமுகன்

தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்

நம்பியே கைதொழுவேன் நான். (திருமுருகாற்றுப்படை வெண்பா)

 

நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும்

கோலக்குறத்தியுடன் வருவான் குரு நாதன் சொன்ன

சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவ யோகிகளே

காலத்தை வென்றிருப்பார் மரிப்பார் வெறும் கர்மிகளே. (கந்தரலங்காரம்)

 

முடியாப் பிறவிக் கடலிற்புகார் முழுதுங் கெடுக்கு

மிடியாற் படியில் விதனப் படார் வெற்றி வேற்பெருமாள்

அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர்குலமடங்கப்

பொடியாக் கியபெரு மாள்திரு நாமம் புகல்பவரே. (கந்தரலங்காரம்)

 

சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்

மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்

வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்

கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே. (கந்தரலங்காரம்)

 

பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்

தித்தித் திருக்கும் அமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்

புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவன மெற்றித்

தத்திக் கரைபுர ளும்பர மானந்த சாகரத்தே. (கந்தரலங்காரம்)

 

சிந்திக்கி லேனின்று சேவிக்கி லேன்றண்டைச் சிற்றடியை

வந்திக்கி லேனொன்றும் வாழ்த்துகி லேன்மயில் வாகனனைச்

சந்திக்கி லேன்பொய்யை நிந்திக்கி லேனுண்மை சாதிக்கிலேன்

புந்திக்கி லேசமுங் காயக் கிலேசமும் போக்குதற்கே. (கந்தரலங்காரம்)

 

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்

வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி

காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்

சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே. (கந்தரலங்காரம்)

 

போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும்

வாக்கும் வடிவு முடிவுமில் லாதொன்று வந்துவந்து

தாக்கு மனோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே

ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆனந்தமே. (கந்தரலங்காரம்)

 

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு

மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்

சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டுதொழ

நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே. (கந்தரலங்காரம்)

 

கெடுவாய் மனனே கதிகேள் கரவாது

இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்

சுடுவாய் நெடு வேதனை தூள்படவே

விடுவாய் விடுவாய் வினை யாவையுமே. (கந்தர் அனுபூதி)

 

செம்மான் மகளைத் திருடும் திருடன்

பெம்மான் முருகன் பிறவான் இறவான்

சும்மாயிரு சொல் லற என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (கந்தர் அனுபூதி)

 

தூசா மணியும் துகிலும் புனைவாள்

நேசா முருகா நினது அன்பு அருளால்

ஆசா நிகளம் துகளா யினபின்

பேசா அனுபூதி பிறந் ததுவே. (கந்தர் அனுபூதி)

 

எம்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ

சிந்தாகுல மானவை தீர்த்து எனையாள்

கந்தா கதிர்வேலவனே உமையாள்

மைந்தா குமரா மறை நாயகனே. (கந்தர் அனுபூதி)

 

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. (கந்தர் அனுபூதி)

 

நாயேன் உன் சீரடிக்கு நன்கல்ல செய்தாலும் பேயேன் இழைத்த பெரும்பிழையை – நீயே பொறுத்தாள்வதுன் கடனாம் போரூரா என்னை ஒறுத்தால் எனக்கார் உறவு? /// இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவி அல்லேன் நல்லரத்து ஞானி அல்லேன் நாயினேன் – சொல்லறத்தில் ஒன்றேனும் இல்லேன் உயர்ந்ததிருப் போரூரா என்றோ நான் ஈடேறுவேன்// … // ஏதுபிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கித் தீது புரியாத் தெய்வமே – நீதி

தழைக்கின்ற போரூர்த் தனிமுதலே நாயேன் பிழைக்கின்றவாறு நீ பேசு// கைவிட்டால் நாயேனைக் காப்பார் ஒருவரிலை பொய்விட்டார் போற்றும் புனிதனே- மையிட்ட கண்ணார் இருவர் கலந்த புயத்தழகா தண்ணார் போரூரா தரித்து// நோயுற்று அடராமல் நொந்துமனம் வாடாமல் பாயில் கிடவாமல் பாவியேன் காயத்தை ஓர் நொடிக்குள் ஒண்போரூர் ஐய நின்

சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்தே… (சிதம்பர சுவாமிகள் இயற்றிய திருப்போரூர் சன்னிதிமுறையிலிருந்து)

 

 

ஒருமையுடன் நினதுதிருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்

பெரு நெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்

மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும்

மதிவேண்டும் நின் கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும்

தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே.

(திருவருட்பா)

 

 

அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்

பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்

கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே

ஒருதிரு முருகன் வந்தான் குதித்தனன் உலகம் உய்ய. (கந்தபுராணம்)

 

ஆதிசங்கரர் அருளிய வேல் துதி:

சக்தே பஜே த்வாம் ஜகதோ ஜநித்ரீம்

ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம்

நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே

பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸந்நிதத்ஸ்வ

 

பழனியாண்டவர் த்யான ஸ்லோகம்:

 

கல்பத்ருமம் ப்ரண மதாம் கமலாருணாபம்

ஸ்கந்தம் புஜத்வயமனாமயம் ஏகவக்த்ரம்

காத்யாயனீ ப்ரியஸுதம் கடிபத்தவாமம்

கௌபீன தண்ட தாதக்ஷிண ஹஸ்தமீடே

 

திரு ஏரக நவரத்தினமாலை

ஒருதரஞ் சரவணபவா என்று சொல்பவர் உளத்தினில் நினைத்த எல்லாம்

உடனே கைகூடுமென வேதங்கள் மொழியுதே உண்மையறிவான பொருளே

பரிவாகவே அநந்தந்தரஞ் சரவணபவா என்று நான் சொல்லியும் பாங்குமிகு காங்கேயா பலியாதிருப்பதேனோ?

குருபரா முருகையா கந்தா கடம்பா சொல் குமரா குகா சண்முகா

கோலாகலா வெற்றிவேலா எனக்கருள் கொடுத்தாள்வை முத்தையனே

மருமலர்க் குழலழக தேவகுஞ்சரி வள்ளி மணவனே என் துணைவனே

வன்னமயில் வாகனா பொன் ஏரகப் பதியில் வளர் சாமி நாத குருவே.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.