சிவன் தனிப் பாடல்கள்

நந்திதேவர் ஸ்தோத்ரம்

 

நந்திகேஶ மஹாபாஹோ ஶிவத்யான பராயண

கௌரீ ஶங்கர ஸேவார்த்தம் அநுஜ்ஞாம் தாது மர்ஹஸி

நந்தீஸ்வர நமஸ்துப்யம் சாந்தானந்த ப்ரதாயக மஹாதேவேச ஸேவார்த்தம் அனுக் ஞாம் தாது மர்ஹஸி.

 

தனிப் பாடல்கள்

மகாசிவராத்திரி நாளன்று அருகில் இருக்கும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, இறைவனை இதயத்தில் பதித்து, இரவில் சிவச்சிந்தனையுடன் கண்விழித்திருந்து, நான்கு கால வழிபாடுகள் சிவச்சிந்தனையுடன் கண்விழித்திருந்து, நான்கு கால வழிபாடுகள் செய்ய வேண்டும்.

இரவு கண்விழித்திருக்கும் போது இந்த திருநாமங்களை மனதில் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

* ஸ்ரீ பவாய நம
* ஸ்ரீ சர்வாய நம
* ஸ்ரீ பசுபதயே நம
* ஸ்ரீ ருத்ராய நம
* ஸ்ரீ உக்ராய நம
* ஸ்ரீ மகாதேவாய நம
* ஸ்ரீ பீமாய நம
* ஸ்ரீ ஈசாநாய நம

– See more at: http://astrology.dinamani.com/

 

வந்தே ம்பும் உமாபதிம் ஸுரகுரும் வந்தேத் காரணம்

வந்தே பன்னபூஷணம் ம்ருகதரம் வந்தேசூனாம்பதிம்

வந்தே ஸூர்ய சசாங்க வஹ்னி நயனம் வந்தே முகுந் ப்ரியம்

வந்தே க்தஜன ஆச்ரயம் ச வரம் வந்தே சிவம் ங்கரம்

 

சிவோ மஹேஸ்வரச்சைவ ருத்ரோ விஷ்ணு: பிதாமஹ: ஸம்ஸாரவைத்ய ஸர்வேச: பரமாத்மா சதாசிவ:  (3 முறை)

 

சாந்தம் பத்மாஸனஸ்த்தம் ஸசிதர மகுடம் பஞ்சவக்த்ரம் த்ரி நேத்ரம்

சூலம் வஜ்ரம் ச கட்கம் பரசுமபயதம் தக்ஷிணாங்கே வஹந்தம்

நாகம் பாசம் ச கண்டாம் வர டமருயுதம் சாங்குசம் வாமபாகே

நாநாலங்காரயுக்தம் ஸ்படிகமணிமயம் பார்வதீசம் நமாமி

நமஸ்தே நமஸ்தே மஹாதேவ சம்போ

நமஸ்தே நமஸ்தே ப்ரசன்னைக பந்தோ

நமஸ்தே நமஸ்தே தயாஸார ஸிந்தோ

நமஸ்தே நமஸ்தே நமஸ்தே மஹேச

அன்யதா சரணம் நாசதி த்வமேவ சரணம் மம

தஸ்மாத் காருண்யபாவேன ரக்ஷ ரக்ஷ மஹேஸ்வர:

 

பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதிச

ஜபேந்நாமத்ரயம் நித்யம் மஹாரோக நிவாரணம் (108 + விபூதி)

 

துஸ்வப்ன துச்சகுன துர்கதி தௌர்மநஸ்ய, துர்பிக்ஷ துர்வ்யஸந துஸ்ஸஹ துர்யசாம்ஸி, உத்பாத தாப விஷபீதிம் அஸத்க்ர கார்த்திம் வ்யாதீம்ச் ச நாசயது மே ஜகதாம் அதீச: (8 முறை+விபூதி)

 

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி

நில்லாப் பிழையும் நினயாப் பிழயும் நின் அஞ்செழுத்தைச்

சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே (பட்டினத்தார்)

 

என்செய லாவதி யாதொன்றும் இல்லை இனித்தெய்வமே

உன்செய லேஎன்று உணரப்பெற் றேன் இந்த ஊன் எடுத்த

பின்செய் ததீவினை யாதொன்று மில்லை பிறப்பதற்கு

முன்செய் ததீவினை யோ இங்ங னேவந்து மூண்டதுவே (பட்டினத்தார்)

 

சொல்லால் வரும்குற்றம் சிந்தனை யால்வரும் தோடம் செய்த

பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்

அல்லாத வேள்வியைக் கேட்டிடும் தீங்குகள் ஆயவு மற்று

எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே (பட்டினத்தார்)

 

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடிக்

காடுடைய சுடலைப் பொடி பூசியென் உள்ளங்கவர் கள்வன்

ஏடுடைய மலரான்முனை நாட்பணிந்தேத்த வருள் செய்த

பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மானிவனன்றே  (திரு ஞானசம்பந்தர்)

 

கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதற் கற்றகேள்வி

வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப் பாலாய்

எல்லாமா யல்லதுமா யிருந்ததனை யிருந்தபடி யிருந்துகாட்டிச்

சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்.

 

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு

செந்துவர் வாய் உமைபங்கன் திரு ஆலவாயான் திரு நீறே

 

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிக நல்லவீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பிரண்டுமுடனே

ஆசறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே

 

காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே

 

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணையாவது நமச்சிவாயவே

 

இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கு அது சோதியுள்ளது

பல்லக விளக்கு அது பலரும் காண்பது

நல்லக விளக்கு அது நமச் சிவாயவே

 

நமச் சிவாயவே ஞானமும் கல்வியும்

நமச் சிவாயவே நானறி விச்சையும்

நமச் சிவாயவே நாநவின் றேத்துமே

நமச் சிவாயவே நன்னெறி காட்டுமே

 

மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பாதமே மனம் பாவித்தேன்

பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்

கற்றவர் தொழுதேத்தும் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி

நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே

 

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந் திருந்தாரே (திருமந்திரம்)

 

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்

சிவசிவ என்றிடத் தீவினை மாளும்

சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்

சிவசிவ என்னச் சிவகதி தானே (திருமந்திரம்)

 

நமஸ்தேஸ்து பகவன் விஶ்வேஶ்வராய மஹாதேவாய த்ர்யம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்நி ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய  ஸர்வேஶ்வராய ஸதாஶிவாய ஸ்ரீமந் மஹாதேவாய நம:

 

நமோ வ்ருக்ஷேப்யோ ஹரிகேஶேப்யோ நம: நமஸ்தாராய ஓம் ஶம்பவே ச மயோபவே ச நம: ஶங்கராய ச மயஸ்கராய ச நம: ஶிவாய ச சிவதராய ச

 

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே

நல்லார்க்கும் பொல்லார்க்கும்  நடு நின்ற நடுவே

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே

எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே

என்னரசே யான்புகலும் இசையுமணிந்தருளே

 

பெற்றதாய் தனை மகமறந்தாலும்

பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்

உற்றதேகத்தை உயிர்மறந்தாலும்

உயிரை மேவிய உடல்மறந்தாலும்

கற்ற நெஞ்சகங் கலை மறந்தாலும்

கண்கள் நின்றிமைப் பதுமறந்தாலும்

நற்ற வத்தவர் உள்ளிருந்தோங்கும்

நமச்சிவாயத்தை நான் மறவேனே

 

ஞானத்திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார்மேல்

ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப் பொருள்போலும்

ஏனத்திரளோ டினமான்கரடி இழியும் இரவின் கண்

ஆனைத்திறள்வந் தணையும்சாரல் அண்ணாமலையாரே (சம்பந்தர் தேவாரம்)

 

நன்றுடையானைத் தீதிலையானை நரைவெள்ளேறு

ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்

சென்றடையாத திருஉடையானைச் சிராப்பள்ளிக்

குன்றுடையானைக் கூறஎன் உள்ளங் குளிரும்மே  (சம்பந்தர் தேவாரம்)

 

அவ்வினைக் கிவ்வினை ஆமென்று சொல்லும் அஃதறிவீர்

உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக் கூனமன்றே

கைவினை செய்தெம் பிராங்கழல் போற்றுதும் நாம் அடியோம்

செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம் (சம்பந்தர் தேவாரம்)

 

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யான் எனது என்று அவர் அவரிக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே (திருவாசகம்)

 

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவுலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்

மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் (சேக்கிழார்- பெரியபுராணம்)

 

அன்பெனும் பிடியுள் அகப்படு மலையே

அன்பெனும் குடில் புகும் அரசே

அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே

அன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே

அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே

அன்பெனும் அணுவில் அமைந்த பேரொளியே

அன்புருவாம் பரசிவமே      (இராமலிங்க சுவாமிகள்)

 

முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்

பின்னைப் பிறக்கறுக்கும் பேராளன் – தென்னன்

பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்

வருதுயரம் தீர்க்கும் மருந்து      (மாணிக்கவாசகர் திருவாசகம்)

 

இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்

திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம் – தரும்காண்

பெருந்துறையின் மேய பெருங்கருணை யாளன்

மருந்துருவாய் என்மனத்தே வந்து     (மாணிக்கவாசகர் திருவாசகம்)

 

பிறவா திருக்க வரம்பெறல் வேண்டும் பிறந்துவிட்டால்

இறவா திருக்க மருந்துண்டு காண்இது எப்படியோ

அறமார் புகழ்த்தில்லை அம்பல வாணர் அடிக்கமலம்

மறவா திருமனமே அது காண்நெல் மருந்தெனக்கே    (பட்டினத்தார்)

 

வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து

இணங்கத்தன் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான்

அணங்கொ டணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற

குணங்கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ  (மாணிக்கவாசகர் திருவாசகம்)

 

தந்தை தாயும்நீ என்னுயிர்த் துணையும்நீ சஞ்சல மதுதீர்க்க

வந்த தேசிக வடிவுநீ உனையலால் மற்றொரு துணைகாணேன்

அந்த மாதியும் அளப்பெருஞ் சோதியே ஆதியே அடியார்தம்

சிந்தை மேவிய தாயுமா னவனெனும் சிரகிரிப் பெருமானே.

One thought on “சிவன் தனிப் பாடல்கள்

 1. ஐயா

  கிழ் கானும் இந்த வரிகள் முழுவதுமே எமக்கு வேண்டும்
  ஓம் நம சிவாய சிவாய சிவாய நமக

  மற்றும்
  தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.