கந்தர் சஷ்டி கவசம்

தேவராய சுவாமிகள் அருளியது

 

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்

பதிப்போற்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்

நிஷ்டை யுங்கைகூடும் நிமலரருள் கந்தர்

சஷ்டிக் கவசந் தனை.

 

அமர ரிடர் தீர வமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி

 

சஷ்டியை நோக்கச்  சரவணபவனார்

சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்

பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாடக் கிண்கிணியாட

மையல் நடஞ்செய்யும் மயில் வாகனனார்

கையில் வேலாலெனைக் காக்கவென்று உவந்து

வரவர வேலாயுதனார் வருக

வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா வெண்டிசை போற்ற

மந்திர வடிவேல் வருக வருக               10

 

வாசவன் மருகா வருக வருக

நேசக்குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக

நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

சரவண பவனார் சடுதியில் வருக

ரஹண பவச ரரரர ரரர

ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி

விணபவ சரஹ வீரா நமோ நம

நிபவ சரஹண நிற நிற நிறென         20

 

வசர ஹணப வருக வருக

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

என்னை ஆளும் இளையோன் கையில்

பன்னிரண்டு ஆயுதம் பாசாங்குசமும்

பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க

விரைந்தெனைக் காக்க வேலோன் வருக

ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்

உய்யொளி சௌவும் உயிர் ஐயும் கிலியும்

கிலியும் சௌவும் கிளரொளி யையும்

நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும்               30

 

சண்முகன் தீயும் தனியொளி யௌவ்வும்

குண்டலியாம் சிவகுஹன் தினம் வருக

ஆறுமுகமும் அணிமுடி ஆறும்

நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகு குண்டலமும்

ஆறிரு திண்புயத்து அழகிய மார்பில்

பல் பூஷணமும் பதக்கமும் தரித்து

நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்                      40

 

முப்புரி நூலும் முத்தணி மார்பும்

செப்பழகுடைய திருவயிறுந்தியும்

துவண்டமருங்கில் சுடரொளிப்பட்டும்

நவரத்னம் பதித்த நற்சீராவும்

இரு தொடையழகும் இணைமுழந்தாளும்

திருவடியதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செககண செகண

மொகமொக மொகமொக மொகமொக மொகென

நக நக நக நக நக நக நகென

டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண                            50

 

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேள் முந்து

எந்தனை யாளும் ஏரகச் செல்வ

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்

லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா வினோதன் என்று               60

 

உன் றிருவடியை உறுதி யென்றெண்ணும்

என் தலைவைத்து உன் இணையடி காக்க

என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க

விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க                    70

 

முப்பத்திருபல் முனைவேல் காக்க

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க

மார்பையிரத்ன வடிவேல் காக்க

சேரிளமுலைமார் திருவேல் காக்க
வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க

பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

பழுபதினாறும் பருவேல் காக்க                      80

 

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க

நாணாங்கயிற்றை நல்வேல் காக்க

ஆண்குறியிரண்டும் அயில்வேல் காக்க

பிட்டமிரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க

பணைத் தொடையிரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஐவிர லடியிணை அருள்வேல் காக்க

கைகள் இரண்டும் கருணைவேல் காக்க                 90

 

முன்கை இரண்டும் முரண்வேல் காக்க

பின்கையிரண்டும் பின்னவள் இருக்க

நாவில் சரஸ்வதி நல்துணையாக

நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க

அடியேன் வசனம் அசைவுள நேரம்

கடுகவே வந்து கனகவேல் காக்க

வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க

அரையிருள் தன்னில் அனையவேல் காக்க            100

 

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க

தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்க தாக்க தடையறத் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்

அல்லல் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்              110

 

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரம்மராட்சதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லினும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்

தண்டியக்காரரும் சண்டாளர்களும்

என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட

ஆனை அடியினில் அரும்பாவை களும்                   120

 

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்

பாவைகள் உடனே பலகலசத்துடன்

மனையில் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும்

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதும் அஞ்சனமும் ஒரு வழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்துகுலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட               130

 

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓட

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்

கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு

கட்டி உருட்டு கால்கை முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட

செக்கு செக்கு செதில் செதிலாக

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடிவேலால்                                        140

 

பற்று பற்று பகலவன் தணலெரி

தணலெரி தணலெரி தணலதுவாக

விடுவிடுவேலை வெருண்டது ஓட

புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனித் தொடர்ந்தோடத்

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம்

ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க

ஒளிப்புஞ்சுளுக்கும் ஒருதலை நோயும்

வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்                         150

 

சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப்புருதி

பக்கப் பிளவை படர்தொடை வாழை

கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத்தரணை பருவரை யாப்பும்

எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்

நில்லாதோட நீ எனக்கு அருள்வாய்

ஈரேழ் உலகமும் எனக்குறவாக

ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா(க)

மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்          160

 

உன்னைத் துதிக்க உன் திரு நாமம்

சரஹண பவனே சைலொளி பவனே

திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொழி பவனே

அரிதிரு மருகா அமராபதியைக்

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்

கந்தா குஹனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

இடும்பனை ஏன்ற இனியவேல் முருகா

தணிகா சலனே சங்கரன் புதல்வா                            170

 

கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா

பழநிப்பதிவாழ் பாலகுமாரா

ஆவினன் குடிவாழ் அழகிய வேலா

செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா

சமராபுரிவாழ் சண்முகத்தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்நா இருக்க யானுனைப் பாட

எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்

பாடினேன் ஆடினேன் பரவசம் ஆக

ஆடினேன் நாடினேன் ஆவினன்பூதியை                 180

 

நேசமுடன் யான் நெற்றியி லணியப்

பாச வினைகள் பற்றது நீங்கி

உன்பதம் பெறவே உன்னருள் ஆக

அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும்

மெத்த மெத்தாக வேலாயுதனார்

சித்திபெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க

வாழ்க வாழ்க மலைக் குறமகளுடன்                        190

 

வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை யடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவளாமே

பிள்ளையென்றன்பாய்ப் பிரிய மளித்து

மைந்தனென்மீது உன் மனமகிழ்ந்தருளித்

தஞ்சமென்றடியார் தழைத்திட வருள் செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய                                               200

 

பாலன் தேவராயன் பகர்ந்ததைக்

காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

ஆசாரத்துடன் அங்கம் துலக்கி

நேசமுடனொரு நினைவதுவாகிக்

கந்தர் சஷ்டி கவச மிதனைச்

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்

ஒரு நால் முப்பத்தாருறுக் கொண்டு

ஓதியே செபித்து உகந்து நீறணிய

அஷ்டதிக்குள்ளோர் அடங்கலும் வசமாய்த்

திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருள்வர்                                 210

 

மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்

நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்

எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்

கந்தர்கை வேலாம் கவசத்தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்

விழியால் காண வெருண்டிடும் பேய்கள்

பொல்லாதவரைப் பொடிப் பொடியாக்கும்

நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்துரு சங்கா ரத்தடி                                                        220

 

அறிந்தெனதுள்ளம் அஷ்ட லட்சுமிகளில்

வீரலட்சுமிக்கு விருந்துணவாகச்

சூரபத்மாவைத் துணித்தகை அதனால்

இருபத்தேழ்வர்க் குவந்து அமுது அளித்த

குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி

எனைத் தடுத்தாட்கொள் என்றனதுள்ளம்

மேவிய வடிவுறும் வேலவா போற்றி

தேவர்கள் சேனாபதியே போற்றி

குறமகள் மனம் மகிழ் கோவே போற்றி                               230

 

திறமிகு திவ்விய தேகா போற்றி

இடும்பா யுதனே இடும்பா போற்றி

கடம்பா போற்றி கந்தா போற்றி

வெட்சி புனையும் வேளே போற்றி

உயர்கிரி கனக சபைக் கோரரசே

மயில் நடம் இடுவோய் மலரடி சரணம்

சரணம் சரணம் சரஹண பவஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்.                                       238

 

***

3 thoughts on “கந்தர் சஷ்டி கவசம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.