கந்தர் அனுபூதி

விபூதி தியானம்

 

நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகத்

தஞ்சத்து அருள் ஷண்முகனுக்கு இயல்சேர்

செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே

பஞ்சக்கர ஆனைபதம் பணிவாம்

 

மதயானையை வெல்ல

 

ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்

ப்படும் ஓணியே பணியா அருள்வாய்:

தேடும் கயமா முகனைச் செருவில்

சாடும் தனியானைச் சகோதரனே                                                                 1

 

பக்தி மேம்பட

 

உல்லாச நிராகுல யோகவிதச்

சல்லாப வினோதனும் நீயலையோ ?

எல்லாம் அற என்னை இழந்த நலம்

சொல்லாய்; முருகா !  சுரபூபதியே                                                                 2

 

கல்வியில் சிறக்க

 

வானோ புனல்பார்கனல் மாருதமோ

ஞானோதயமோ நவில் நான்மறையோ

யானோ மனமோ எனை ஆண்ட இடம்

தானோ பொருளாவது ஷண்முகனே                                                                        3

 

துறவுபெற

 

வலைபட்ட கைம்மா தொடுமக்கள் எனும்

தளைபட்டு அழியத் தகுமோ ? தகுமோ ?

கிளைபட்டு எழுசூர் உரமும் கிரியும்

தொளைபட்டு உருவத்தொடு வேலவனே                                                   4

 

 

மாயை விலக

 

மகமாயை களைந்திட வல்லபிரான்

முகமாறும் ஒழிந்தும் ஒழிந்திலனே

அகமாடை மடந்தையர் என்று அயரும்

சகமாயையுள் நின்று தயங்குவதே                                                                5

 

ஸ்த்ரீ வசீகரம் செய்ய

 

திணியான மனோசிலை மூது உனதாள்

அணியார் அரவிந்தம் அரும்பும் அதோ ?

பணியாரென வள்ளி பதம்பணியும்

தணியா அதிமோக தயாபரனே                                                                      6

 

தீராப்பிணி தீர

 

கெடுவாய் மனனே கதிகேள் கரவாது

இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்

சுடுவாய் நெடு வேதனை தூள்படவே

விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.                                        7

 

மக்களைக் கவர

 

அமரும் பதிகேள் அகமாம் எனும் இப்

பிமரம்கெட மெய்ப்பொருள் பேசியவா

குமரன் கிரிராசகுமாரி மகன்

சமரம் பொருதான் அவ நாசகனே                                                                 8

 

பெண்ணாசை ஒழிக்க

 

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்

பட்டூசல் படும் படர் என்று ஒழிவேன்

தட்டூட அற வேல்சயிலத் தெறியும்

நிட்டூர நிராகுல நிர்ப்பயனே                                                                           9

 

 

எமபயம் நீங்க

 

கார்மா மிசை காலன் வரின் கலபத்

தேர்மாமிசை வந்து எதிரப் படுவாய்

தார்மார்ப வலார் இதலாரி எனும்

சூர்மா மடியத் தொடு வேலவனே                                                                   10

 

குளுமை சேர்க்க

 

கூகா என எங்கிளை கூடி அழப்

போகாவகை மெய்ப்பொருள் பேசியவா

நாகாசல வேலவ நாலுகவித்

தியாகா சுரலோக சிகாமணியே                                                                    11

திருடர் பயம் அகல

 

செம்மான் மகளைத் திருடும் திருடன்

பெம்மான் முருகன் பிறவான் இறவான்

சும்மாயிரு சொல் லற என்றலுமே

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.                                                        12

 

இருள் பயம் நீங்க

 

முருகன் தணிவேல் முனி நம் குரு என்று

அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ ?

அருவன்று அருவன்று உளதன்று இலதன்று

இருளன்று ஒளியன்று என நின்றதுவே                                                         13

 

பாத தரிசனம் செய்ய

 

கைவாய் கதிர்வேல் முருகன் கழல் பெற்று

உய்வாய் மனனே ! ஒழிவாய் ஒழிவாய்

மெய் வாய் வழி நாசியொடும் செவியாம்

ஐவாய் வழிசெல்லும் அவாவினையே                                                           14

 

அஷ்டாவதானியாக

 

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து

உருகும் செயல்தந்து உறர்வெண்று அருள்வாய்

பொருபும் கவரும் புவியும் பரவும்

குரு புங்கவ! எண்குண பஞ்சரனே                                                                  15

 

பேராசை விலக

 

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு

ஓரா வினையேன் உழலத் தகுமோ ?

வீரா ! முதுசூர் படவேல் எறியும்

சூரா ! சுரலோக துரந்தரனே                                                                             16

 

ஒழுக்கத்தில் சிறப்புற

 

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும்

தாமே பெற வேலவர் தந்ததனால்

பூமேல் மயல்போய் அறம் மெய்ப்புணர்வீர்

நாமேல் நடவீர் நடவீர் இனியே                                                                        17

 

கற்பை காக்க

 

உதியா மரியா உணரா மறவா

விதிமால் அறியா விமலன் புதல்வா

அதிகா அனகா அபயா அமரா

வதிகாவல சூர பயங்கரனே                                                                             18

 

துறவறம் மேற்கொள்ள

 

வடிவும் தனமும் மனமும் குணமும்

குடியும் குலமும் குடி போகியவா

அடியந்தமிலா அயில்வேல் அரசே

மிடியென்று ஒருபாவி வெளிப்படினே                                                           19

 

 

அனுக்கிரகம் பெற

 

அரிதாகிய மெய்ப்பொருளூகு அடியேன்

உரிதா உபதேசம் உணர்த்தியவா

விரிதாரண விக்ரம வேள் இமையோர்

புரிதாரக நாக புரந்தரனே                                                                                20

 

திருவடி வணங்க

 

கருதா மறவா நெறிகாண எனக்கு

இருதாள் வனசந்தர என்று இசைவாய்

வரதா முருகா மயில்வாஹனனே

விரதா சுரசூர விபாடணனே                                                                            21

 

தவம் பெற

 

காளைக் குமரேசன் எனக் கருதித்

தாளைப் பணியத் தவம் எய்தியவா

பாளைக் குழல் வள்ளி பதம்பணியும்

வேளைச் சுரபூபதி மேருவையே                                                                      22

 

சலுகை பெற

 

அடியைக் குறியாது அறியாமையினால்

முடியக் கெடவோ முறையோ முறையோ

வடிவிக்ரம வேல்மகிபா குறமின்

கொடியைப் புணரும் குண பூதரனே                                                             23

 

மாயவலையில் அகப்படாதிருக்க

 

கூர்வேல் விழிமங்கையர் கொங்கையிலே

சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ ?

சூர்வேரொடு குன்று தொளைத்த நெடும்

போர்வேல புரந்தர பூபதியே                                                                            24

 

வினை ஒழிக்க

 

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து

ஐயோ அடியேன் அலையத் தகுமோ

கையோ அயிலோ கழலோ முழுதும்

செய்யோய் மயிலேறிய சேவகனே                                                                25

 

ஆதரவற்றவருக்கு ஆதாரமாக

 

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே

நீதான் ஒருசற்றும் நினைந்திலையே

வேதாகம ஞான வினோத மனோ

தீதா சுரலோக சிகாமணியே                                                                           26

 

பாக்கியத்தை விதிவழி அனுபவிக்க

 

மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான்

என்னே விதியின் பயன் இங்கு இதுவோ

பொன்னே மணியே பொருளே அருளே

மன்னே மயிலேறிய வானவனே                                                                     27

 

அனுபூதி நிலைபெற

 

ஆனா அமுதே அயில்வேல் அரசே

ஞானாகரனே நவிலத் தகுமோ

யானாகிய என்னை விழுங்கி வெறும்

தானாய் நிலை நின்றது தற்பரமே                                                                 28

 

இறைவனிடம் ஈடுபாடு அதிகரிக்க

 

இல்லேயெனும் மாயையில் இட்டனை நீ

பொல்லேன் அறியாமை பொறுப்பதிலையோ

மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்

சொல்லே புனையும் சுடர் வேலவனே                                                           29

 

வாக்கு சாதுர்யம் பெற

 

செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று

ஒவ்வாதது என உணர்வித்ததுதான்

அவ்வாறு அறிவார் அறிகின்றதலால்

எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே                                                          30

 

கடவுள் முன்னிலையில் ஞானம் பெற

 

பாழ்வாழ்வு எனும் இப்படு மாயையிலே

வீழ்வாய் என என்னை விதித்தனையே

தாழ்வானவை செதன தாம் உளவோ

வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே                                                 31

 

செய்த தீவினைகளை மறக்க

 

கலையே பதறிக் கதறித் தலையூடு

அலையே படுமாறு அதுவாய் விடவோ

கொலையே புரி வேடர்குலப் பிடி தோய்

மலையே மலை கூறிடு வாகையனே                                                            32

 

கவலை அழிய

 

சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்

விந்தாடவி என்று விடப் பெறுவேன்

மந்தாகினி தந்த வரோதயனே

கந்தா முருகா கருணாகரனே                                                                          33

 

பெண்களைத் தாயாக நினைக்க

 

சிங்கார மடந்தையர் தீ நெறிபோய்

மங்காமல் எனக்கு வரம் தருவாய்

சங்க்ராம சிகாவல ஷண்முகனே

கங்காநதி பால க்ருபாகரனே                                                                          34

 

 

சரீர வாஞ்சை ஒழிக்க

 

விதிகாணும் உடம்பை விடா வினையேன்

கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்

மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின்

துதியா விரதா சுரபூபதியே                                                                               35

 

கடவுளைக் காண

 

நாதா குமரா நம என்று அரனார்

ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்

வேதா முதல் விண்ணவர் சூடு மலர்ப்

பாதா குறமின் பத சேகரனே                                                                           36

 

அகந்தை அழிய

 

கிரிவாய் விடுவிக்ரம வேல் இறையோன்

பரிவாரம் எனும் பதம் மேவலையே

புரிவாய் மனனே பொறையாம் அறிவால்

அரிவாய் அடியோடும் அகந்தையையே                                                      37

 

துர்தேவதை பயம் அகல

 

ஆதாளியை ஒன்று அறியேனை அறத்

தீதாளியை ஆண்டது செப்புமதோ

கூதாள கிராதகுலிக்கு இறைவா

வேதாளகணம் புகழ் வேலவனே                                                                     38

 

மறுபிறவி இல்லாதிருக்க

 

மாவேழ் சனனம் கெட மாயை விடா

மூவேடனை என்று முடிந்திடுமோ

கோவே குற மின்கொடி தோள் புணரும்

தேவே சிவசங்கர தேசிகனே                                                                            39

 

 

மாயை தெளிய

 

வினையோட விடும் கதிர்வேல் மறவேன்

மனையோடு தியங்கி மயங்கிடவோ

சுனையோடு அருவித் துறையோடு பசுந்

தினையோடு இதனோடு திரிந்தவனே                                                         40

 

சாகாவரம் பெற

 

சாகாது எனையே சரணங்களிலே

காகா நமனார் கலகம் செயுநாள்

வாகா முருகா மயில்வாகனனே

யோகா சிவஞானோப தேசிகனே                                                                  41

 

சமநிலை ஏற்பட

 

குறியைக் குறியாது குறித்தறியும்

நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்

செறிவற்று உலகோடு உரைசிந்தையும் அற்று

அறிவற்று அறியாமையும் நின்றதுவே                                                         42

 

 

ஆசானாகி அனுக்ரஹிக்க

 

தூசா மணியும் துகிலும் புனைவாள்

நேசா முருகா நினது அன்பு அருளால்

ஆசா நிகளம் துகளா யினபின்

பேசா அனுபூதி பிறந் ததுவே.                                                                                                    43

 

குரு மந்திரம் பெற

 

சாடும் தனிவேல் முருகன் சரணம்

சூடும்படி தந்தது சொல்லுமதோ

வீடும் சுரர்மாமுடி வேதமும் வெங்

காடும் புனமும் கமழும் கழலே                                                                        44

 

 

தெளிவான ஞானம் பெற

 

கரவாகிய கல்வி உளார் கடை சென்று

இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையே

குரவா குமரா குலிசாயுத குஞ்

சரவா சிவயோக தயாபரனே                                                                          45

 

மனவருத்தம் தீர

 

எம்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ

சிந்தாகுல மானவை தீர்த்து எனையாள்

கந்தா கதிர்வேலவனே உமையாள்

மைந்தா குமரா மறை நாயகனே                                                                   46

 

ஆனந்த நடனம் காண

 

ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்

பேறா அடியேன் பெறுமாறு உளதோ

சீறா வருசூர் சிதைவித்து இமையோர்

கூறா உலகம் குளிர்வித்தவனே                                                                      47

 

தன் நிலை அறிய

 

அறிவொன்று அற நின்று அறிவோர் அறிவில்

பிறிவொன்று அற நின்ற பிரானலையோ

செறிவொன்று அறவந்து இருளே சிதைய

வெறிவொன்று அவரோடு உறும் வேலவனே                                             48

 

தன்னை அறிந்து கொள்ள

 

தன்னம் தனிநின்று அதுதான் அறிய

இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ

மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்

கின்னம் களையும் கிருபை சூழ் சுடரே                                                        49

 

அவா அறுக்க

 

மதிகெட்டு அறவாடி மயம்கி அறக்

கதிகெட்டு அவமே கெடவோ கடவேன்

நதிபுத்திர ஞானசுகாதிப அத்

திதிபுத்திரர் வீறடு சேவகனே                                                                          50

 

திவ்ய தரிசனம் பெற

 

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.                                                      51

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.