மனிதன் இறைவனை வணங்கும் முறை

“இந்த உலகங்களையெல்லாம் படைத்தல், அவற்றைக் காத்தல், அவற்றை அழித்தல் – ஆகிய செயல்களை விளையாட்டாகச் செய்பவன் எல்லாம் வல்ல முழுமுதற்கடவுள். சைவசமயம் சங்கார காரணனையே முழுமுதற் கடவுளாகக் கொள்கின்றது. அத்தகைய பரம்பொருளை வழிபடுதல் ஆருயிர்களின் கடமை என்றும் அச்சமயம் வற்புறுத்துகின்றது. எப்படி வழிபட வேண்டும் என்பதை அருளாளர்கள் காட்டிப் போயுள்ளனர். அவர்களுள் ஒருவராகிய ‪#‎தாயுமான_அடிகள்‬ காட்டிப் போன நெறியை ஈண்டுச் சிந்திக்கலாம்.

‪#‎கை‬ ஒன்றுக்கு அழகு உண்டாவது அதில் அணியப் பெறும் ஆபரணங்களைப் பொறுத்ததன்று. எவருடைய கைகளையும் அணிகளைப் பூட்டி அலங்கரித்து விடலாம். ஆனால் நற்செயல்கள் புரிந்து கொண்டிருக்கும் கையே அழகிய கையாகின்றது. நற்செயல்களிலெல்லாம் சிறந்தது, ஆண்டவனை ஆராதிப்பது. இறைவனைப் போற்றுதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றின் வழியாக மனத்தை இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும். நல்ல மனத்திற்குக் குறியீடாக அமைந்திருப்பது மலர். அதனிடத்துப் புதுமையும் எழிலும் மணமும் திகழ்ந்து கொண்டிருக்கும். மலர் போன்றிருத்தல் அவசியம் அத்தகைய மனத்தை ஆண்டவனிடத்து ஒப்படைப்பதற்கு அறிகுறியாகக் கையால் வழிபடும் ஒருவர் மலரை எடுத்து இறைவன் மீது தூவுகின்றார்; அங்கையால் – அழகிய கையால் – தூவுகின்றார். அக்கையால் செய்யப் படுகிற சிறந்த செயலை ‘‪#‎அங்கைகொடு_மலர்தூவி‬’ என்கின்றார் தாயுமான அடிகள்.

உள்ளத்தில் உண்டாகும் உணர்ச்சி ‪#‎உடலில்‬ உண்டாகின்ற சில மாறுதல்கள் மூலம் வெளியாகின்றது. அவ்வாறு வெளிப்படுவதைப் #’புளகிப்பு’ என்பர். அன்பால் அல்லது ஆனந்தத்தால் உண்டாகும் புளகிப்பு உடலைப் பண்படுத்தித் தூயதாக்குகின்றது. உள்ளத்தில் அரும்பும் உணர்ச்சிகள் அனைத்திலும் சிறந்தது, உயர்ந்தது இறைவனிடத்துக் கொண்டுள்ள பேரன்பு. அஃது ஆனந்தமாக வடிவெடுத்து வெளிப்படுங்கால் அதன் புறச்சின்னம் உடலிலும் தென்படுகின்றது. இத்தகைய தோற்றத்தை #’அங்கமது_புளகிப்ப’ என்று குறிப்பிடுகின்றார் அடிகள்.

உடலும் ‪#‎உள்ளமும்‬ உருகுவதற்குரிய காரணங்களில் அன்பினால் உருகுவது சிறந்தது. அப்பொழுது அது வெண்ணெய் உருகுவதற்கு ஒப்பாகி மாசு நீங்கிய மணம் நிறைந்த நெய்போல, மனிதனிடத்துக் கடவுளன்பும் அதற்கு ஒப்பான தூய அன்பும் உண்டாகுமானால் அவன் உருகி உயர்ந்த மனிதனாக வடிவெடுத்து மேலோனாக மாறுகிறான். இவ்வாறு மாறி அமைவதை #’அன்பினால்_உருகி’ என்கின்றார் அடிகள்.

‪#‎கண்ணீர்‬ வடிப்பது உயிர்களின் செயல். உள்ளத்தில் உண்டாகும் மாறுபாடுகளுக்குச் சிந்துகின்ற கண்ணீர் அதன் புறச் சின்னமாகின்றது. இன்பக் கண்ணீர் அருள் தாகத்தால் வருவது. அஃது இறை நாட்டத்தால் ஏற்படுவது. உணர்ச்சியின் வேகத்திற்கு ஏற்ப விழிநீர்ப் பெருக்கு மிகுதியாவதுண்டு. கடவுளுக்காக என்று கண்ணீர் உகுப்பாரைக் காண்பது அரிதினும் அரிது. பாராட்டத் தக்க அத்தகைய இன்பக் கண்ணீரை #’விழிநீர்_ஆறு_ஆக’ என்று குறிப்பிடுவர் அடிகள்.

பல்வேறு கடல்கள் உள்ளன. பரந்த நீர்நிலைகள் கடல்கள் என்ற பெயர் பெறுகின்றன. இலட்சியார்த்தக் கடல்களாகப் பல உள்ளன. பிறவிப் பெருங்கடல், ஆசைப் பெருங்கடல் என்பவை போன்றவை அவை. கடவுள்மீது வைத்துள்ள ‪#‎ஆசை‬மனிதனைப் படிப்படியாக மேல் நிலையை எய்துவிக்கின்றது. ஆசையின் வேகம் அதிகரித்தால் அஃது ஆவேசம் என்று பொருள் படுகின்றது. கடவுள் நாட்டத்தில் செல்லுகின்ற மனிதனுக்கும் அத்தகைய ஆவேசம் வந்து விடுகின்றது. கடவுளை நாடுவதும் முக்தியை நாடுவதும் ஒன்றே. ஏனைய ஆசைகள் சிறிய இன்பங்களை நல்க, இறைவன் நாட்டம் தெவிட்டிப் போகாத பேரானந்தத்தையும் பேரன்பையும் உண்டு பண்ணுகின்றது. அத்தகைய தெவிட்டாத நிலை ஆனந்த நிலையாகும். இக்கருத்துக்களையெல்லாம் தொகுத்து #’ஆராத_முக்தியினது_ஆவேச_ஆசைக்கடற்குள்_மூழ்கி’ என்று விளம்புகின்றார் அடிகள்.

‪#‎கடவுளும்‬ கடவுளுடைய பெயரும் இணைபிரியாதவை. சில சமயம் கடவுளைவிட, கடவுளுடைய பெயருக்கு மகிமை அதிகமாகின்றது. நாம் ஒருவருக்கு வைக்கும் பெயர் பொருத்தமில்லாது அமைந்துவிடும். இயற்கையில் ஒவ்வொரு பொருளும் ஒரு சப்த சொரூபமாக உள்லது. அது நமக்குப் புலப் படுவதில்லை. ஆன்றோர் அதனை அறிந்து கொள்கின்றனர். இறைவனிடத்து இருந்து வரும் ஓசையை அவர்கள் அறிந்து கொள்கின்றனர். பின்னர் அதனை அவர்களே எடுத்தோதுகின்றனர். இந்த ஓசைகளையே சிவன், சங்கரன், நாராயணன், முருகன் என்பன போன்ற பல திரு நாமங்களாக வெளியிட்டுள்ளனர். அவற்றை நாம் உறுதியாகப் பற்றிக் கொண்டால் அந்த ஓசைக்கு அடிப்படையாகவுள்ள பற்றற்றவனாகிய மூலப்பொருளை அறிந்துகொள்ள வல்லவராகின்றோம். ‘கோவிந்தா’ என்ற பெயர் திரௌபதியின் புடவை சுரக்கக் காரனமாக அமைந்தது என்பதை ஈண்டு நினைத்தல் தகும்.

‘சங்கரன்’ என்பது அவனுக்கு அமைந்த பொருள்களுள் ஒன்று. நலத்தைச் செய்பவன் என்பது அதன் பொருள். இதனைத் திரும்பத்திரும்ப உச்சரித்தால் நலத்தைச் செய்யும் பாங்கு நமக்கே வந்துவிடுகின்றது. ‘சுயம்பு’ என்பது அவனுக்கு அமைந்துள்ள மற்றொரு பெயர். தானாகத் தோன்றியவன் என்பது அதன் பொருள். கடவுள் எல்லா உயிர்கட்கும் சுகம் அளிப்பவர். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டது ‘சம்பு’ என்ற சொல். இறைவனுக்கு அமைந்துள்ள பெயர்கள் யாவும் அவனுடைய மகிமைகளை விளக்குவதற்கென்றே அமைந்தவை. அத்தகைய பெயர்களைக்கொண்டு அவனை அழைக்கின்ற பொழுதெல்லாம் அவனுடைய மகிமைகளையே நமது மனத்தகத்து அமைத்துக் கொள்ளுகின்றோம். மனத்தகத்து அழுக்கில்லாத மவுனமோன ஞானிகள் இவ்வாறுதான் அமைத்துக் கொண்டிருந்தனர். இக்கோட்பாட்டையே தாயுமானவர் #’சங்கர_சுயம்புவே_சம்புவே’ என இயம்புகின்றார்.

இறைவனைக் கூவியழைக்கின்ற பாங்கிலும் பல நிலைகள் உண்டு. இயந்திரம்போல் ஓதினாலும் சிறுபயன் உண்டு. உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து, ஓதினால் பெரும் பயன் உண்டு. ‪#‎உணர்ச்சியைப்‬ பன்மடங்கு வலிவுடையதாக்கும் ஆற்றல் மனிதனுக்கு உண்டு. உணர்ச்சி மிக மேலான நிலைக்குப் போய்விட்டால் நாக்கு குளறத் தொடங்குகின்றது; சொல்லே தெளிவற்றதாய் விடுகின்ரது. எனினும் உள்ளத்தை அவ்வுணர்வு ஆழ்ந்து பற்றிப் பிடிக்கின்றது. இத்தகைய பேருணர்வு நிலையிலிருந்து நா குளறிக்கொண்டு சொல்லுகிற இடத்து அது மிகப்பெரிய போற்றுதலாக மாறிவிடுகின்றது. மொழி தழுதழுத்திடல் என்பது நா குளறதலுக்கு அமைந்த மற்றொரு சொற்றொடர். போற்றப்படும் பொருளிடத்து ஒன்றுபடும் நிலை ‘வணங்குதல்’ ஆகும். இக்கருத்தைச் சங்கரசுயம்புவே சம்புவே எனவும்‪#‎மொழி_தழுதழுத்திட‬’ என்று இயம்புவர் அந்த ஞானச் செல்வர்.

ஆறு ஓயாது போய்க் கொண்டிருப்பதுபோல் மனிதனும் ஓயாது போய்க் கொண்டிருக்கிறான். தான் போய்க் கொண்டிருப்பது மனிதனுக்கு விளங்குவது இல்லை. ஓயாது போய்க் கொண்டிருக்கும் பூமி இருந்த இடத்திலே இருப்பது போன்று தென்படுகின்றது. பூமி இடம் மாறிப் போய்க் கொண்டிருந்தாலும் நிலைமாறிப் போய்விடுவதில்லை. மனிதர் இருந்த இடத்திலே இருக்கலாம். ஆனால் அவன் ஓயாது ‪#‎நிலை‬மாறிப் போய்க்கொண்டிருக்கலாம். ஓடுகின்ற ஓடை உயிர்களுக்கும் பயிர்களுக்கும் வளத்தை வழங்கிக் கொண்டு ஓடுமானால் நீரோடைக்கு அது சன்மார்க்கமாகின்றது. நிலைமாறிப் போய்க்கொண்டிருக்கின்ற மனிதன் உயர்ந்த நிலைக்குப் போய்க்கொண்டிருப்பானானால் அது சன்மார்க்க நெறி. இந்நிலை ‘சத்’ என்ற பொருளை நோக்கிப் போயிருப்பதாகப் பொருள்படுகிறது. கடவுள் ஒருவரே சத் பொருள். அவரே மெய்ப்பொருள் என்றும் வழங்கப் பெறுகின்றார்; முறையாகக் கடவுளை வணங்குபவர்கள் யாவரும் சன்மார்க்கத்தில் போய்க்கொண்டிருப்பவர்கள். “பெருநெறி பிடித் தொழுகவேண்டும்” என்று வள்ளல் பெருமான் குறிப்பிடுவதும் இதுவேயாகும். தாயுமான அடிகள் இதையே #’சன்மார்க்க_நெறி’ என்று சாற்றுவர்.

இனி அவர் கூறுவனவற்றைச் சேர்த்து நோக்குவோம்.

‪#‎அங்கையொடு_மலர்தூவி_அங்கமது_புளகிப்ப_அன்பினால்_உருகிவிழிநீர்‬
‪#‎ஆறாக_வாராத_முக்தியின_தாவேச_ஆசைக்_கடற்குள்_மூழ்கிச்‬
‪#‎சங்கர_சுயம்புவே_சம்புவே_எனவும்மொழி_தழுதழுத்_திடவணங்கும்‬
‪#‎சன்மார்க்க_நெறி‬

என்று அடிகளார் கூறும் இந்நெறியே இறைவனை வணங்கும் நெறி. இந்நெறியில் நிற்பவர்கள் ஆலயவழிபாடு, பூசைமுறைகள், பூசைவிதிமுறைகள் இவற்றை அறிந்துகொண்டு அவற்றின்படி ஒழுகவேண்டும்.”
——————————————————————————————————–
டாக்டர் ந. சுப்புரெட்டியார் அவர்களின் சைவ சித்தாந்தம் – ஓர் அறிமுகம்” என்ற நூலிலிருந்து.
=============================================================

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.