காயத்ரீயின் மகிமையும் பெருமையும்

நான்னோதகஸமம் தானம் ந திதிர்த்வாதசீ ஸமா

ந காயத்ர்யா: பரோ மந்த்ர: ந மாதுர்தைவதம் பரம்

 ஏழைகளுக்கு அன்னம் அளித்தல், தாகம் தீர நீர் அளித்தல் இதற்கு நிகரான தானம் இல்லை. த்வாதசிக்கு நிகரான திதி இல்லை. காயத்ரீ மந்திரத்துக்கு மேல் வேறு மந்திரமில்லை, பெற்ற தாய்க்கு மேல் தெய்வமுமில்லை.

 வேதங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன் என்று ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறான்.

 காயத்ரீமந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு தேவதை:

தத் – அக்னி ஸ – ப்ரஜாபதி வி- ஸௌம்ய து: ஈசானர் வ – ஸாவித்ரி ரே – ஆதித்ய ண்ய- பிருஹஸ்பதி ம் – மைத்ராவருண ப- பகதேவதை

ர்க- அர்யமா தே – கணேச வ – த்வஷ்டா ஸ்ய – யூக்ஷா

தீ – இந்த்ராக்னி ம – வாயு ஹி- வாமதேவ தி – மித்ராவருண

ய:-  விச்வேதேவா ய:-மாத்ருகா ந- விஷ்ணு ப்ர – வஸு சோ – ருத்ர

த- குபேர யாத் – அச்வினீ

  1. காம்ய பலனும், காயத்ரீ ஜபமும், ஹோமமும்:

 ப்ரம்மா: காயத்ரியை விட சிறந்த ஜபமந்திரமில்லை. அதைவிட உயர்ந்த தபஸ் இல்லை. அதைவிட சிறந்த தியானம் செய்யத் தக்க வஸ்து இல்லை.

யமர்: காயத்ரீ நான்கு வேதங்களுக்குச் சமமானது.

சங்கரர்: ஸ்நாநத்துக்குரிய மந்த்ரங்களுள் அகமர்ஷணம், ஹோம மந்திரத்தில் வ்யாஹ்ருதி, மந்த்ரஜபத்தில் காயத்ரி மந்த்ரம் இவைகளே மிகச் சிறந்தவைகள்.

வ்யாஸர்: 10 முறை காயத்ரி ஜபித்தால் 3 நாளில் செய்த பாபமகலும். 100 முறை ஜபித்தால் ஸர்வ பாபங்களும் அகலும். ஆயிரம் முறை ஜபித்தால் உப பாதகங்கள் அகலும். கோடி முறை ஜபித்தால் விரும்பிய ஸகலமும் கிட்டும். ராஜனாகலாம். தேவனுமாகலாம்.

ஸம்வர்த்தர்: பாபங்களை அகற்ற காயத்ரியை விடச் சிறந்த மந்த்ரமில்லை. ஆசாரத்துடன் ஜபிக்க வேண்டும். தகாத அன்னத்தைப் புஜித்த பாவம் 1000 காயத்ரி ஜபித்தால் சுத்தமாவான்.

விச்வாமித்ரர்: காயத்ரீ ஜபம் செய்பவனுக்கு எங்கும் பயமில்லை. நான்கு வேதங்களிலும் இதற்கு ஸமமான மந்திரமில்லை. வேதம், யாகம், தானம், தபஸ் ஆகியவை காயத்ரீயின் ஒரு கலைக்குக் கூட ஸமமாகாது. எதைவிட்டாலும் காயத்ரியை விடாதே.

மார்க்கண்டேயர் : ஒருவனால் எவ்வளவு பாபம் செய்யமுடியுமோ அவ்வளவு பாபங்களைச் செய்திருந்தாலும் 10000 காயத்ரீ ஜபம் செய்துவிட்டால் அவைகள் பறந்தோடும். தீர்க்க ஆயுளைத் தரும்.

நித்ய கர்மாவை விட்ட பாவம் 1000 முறை காயத்ரீ ஜபம் செய்தால் அகலும்.

பிரதிதினம் காலை 1000 காயத்ரீ ஜபம் ஒரு வருஷம் செய்தால் தீர்க்க ஆயுஸ், ஆரோக்யம், தேஹபலம், தனம் உண்டாகும்.

100 முறை காயத்ரீ ஜபம் செய்து மண்கட்டியை புயல்காற்று, தீ இவைகளுக்கு எதிராக எரிந்தால், இவை நிற்கும். சத்ருக்களும் நம்மை எதிர்த்து வரமாட்டார்கள்.

தினம் 100 முறை ஜபித்தால் பந்தத்திலிருந்து விடுபடுவர்.

100 முறை ஜலத்தில் ஜபம் செய்து சாப்பிட்டால் விஷமகலும். புத பிசாச சேஷ்டை ஒழியும்.

100 முறை ஜபித்து விபூதி அணிந்தால் ஜ்வரம் அகலும்.

7 நாள் உபவாசத்துடன் நாபிவரை ஜலத்தில் நின்று தினம் 1000 ஜபம் செய்தால் மழை பொழியும்.

3 மாதம் கும்பக ப்ராணாயாமத்துடன் 1000 ஜபம் செய்தால் எல்லா இச்சையும் பூர்த்தியாகும்.

7 நாள் தினமும் 1000 முறை ப்ராம்மீ ரஸம் என்பதில் ஜபித்துக் குடித்தால், மூளைகலக்கம் அகலும். நல்ல புத்தி உண்டாகும். பைத்தியமகலும்.

நித்யம் காலையில் 1000 காயத்ரீ ஜபம் செய்தால் ஒரு மாதத்தில் நாம் செய்த சகல பாவங்களும் அகலும்.

 

காயத்ரீ மந்திரத்தால் ஹோமம் செய்தால் ஏற்படும் பலன்கள்:

நோயகலும்வரை நித்யம் சங்கபுஷ்பத்தால் 1008 காயத்ரீ ஹோமம் செய்தால் குஷ்ட நோய் அகலும். 2. அதேபோல் நாயுருவி, அரச ஸமித்தால் செய்தால் அபஸ்மாரம் (காக்காவலிப்பு) போகும். 3. அத்தி சமித்தால் செய்தால் பைத்தியமும், மேகரோகமும் போகும். 4, தேன், கரும்புச்சாறு இவற்றால் செய்தால் ப்ரமேஹம் அகலும். 5. சர்க்கரை, தேன், வாழைப்பழம் இவற்றால் செய்தால், மஸூரிகா நோய் அகலும்.

ஒரு மாதம் தினமும் அத்தி, ஆலை, அரசு ஸமித்து இவற்றால் 1008 ஹோமம் செய்தால் பசு, குதிரை, யானைகளின் ரோகமகலும்.

சமீ அன்னம், ஆஜ்யம் இவற்றால் 108 ஹோமம் செய்தால் வீட்டில் பாம்புப்புற்று, எறும்புப்புற்று இவை தோன்றாது.

7 நாள் காட்டு நொச்சியால் 1008 ஹோமம் செய்தால், இடி, பூகம்பம் முதலியன தோன்றாது.

நித்யம் 100 தாமரைகளால், பலாச சமித்தால், அரச சமித்தால் செய்தால் லக்ஷ்மீகடாக்ஷம் ஏற்படும்.

7 நாள் 100 முறை சிவந்த தாமரையால் செய்தால் வீட்டில் ஸ்வர்ணம் விருத்தியாகும்.

பலன் உண்டாகும் வரை பாயஸான்னத்தை ஸூர்யனுக்கு நிவேதனம் செய்து, பாயஸான்னத்தால் 100 ஹோமம் செய்தால் ஸத்புத்ரன் உண்டாவான்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.