அனுஷ்டானக்கிரமம்

தேவீபாகவதஸாரம் – பதினோராவது ஸ்கந்தம்

நாரதருக்கு நாராயணரிஷி உபதேசித்தது:

பிரம்மாண்டமும் பிண்டாண்டமும் ஒன்றேயாதலால் ஸாதகன் தேவியின் ரூபமான தன்னுடைய தேகத்திலும் தன்மயமாதற்கு, அவளுடைய அங்கங்களில் தேவதைகளை தியானிக்கவேண்டும்  தெய்வமாகாதவன் தெய்வத்தைப் பூஜிக்க இயலாதென்று வேதத்தை  உணர்ந்தவர் அறிவர். ஆகையால் அபேதம் சித்திக்கத் தனது உடலில் இந்த தேவதைகளை தியானிக்கவேண்டும்.  (காயத்ரீஹ்ருதயம் காண்க).

 • விடிய ஒரு யாமமிருக்கும்போது பிரம்மத்தியானம் செய்யவேண்டும். இடது துடைமேல் வலதுபாதத்தையும், வலது துடை மேல் இடது பாதத்தையும் வைது முகத்தை நிமிர்த்தி மார்பைத் தொடும்படி வைத்துக் கொண்டு, கண்னை மூடிக்கொண்டு, பற்களைப் பற்களால் தொடாமல், நாவை அசையாமல் தாடையில் வைத்து, வாயை மூடிக்கொண்டு, இந்திரியக் கூட்டத்தை அடக்கி, மிகவும் தாழ்வாயில்லாத ஆசனத்தில் அசையாமல் இருந்து கொண்டு தியானம் பழகவேண்டும்.
 • உள்ளே இழுப்பதைப்போல் இருமடங்கோ மும்மடங்கோ மூச்சையடக்கி பிராணாயாமத்தை ஆரம்பிக்க வேண்டும்.
 • பிறகு இருதயத்தில் தீபத்தைப் போல் பிரகாசிப்பவராக பகவானை தியானிக்கவேண்டும்.
 • வலது நாஸியால் உள்ளிழுத்து மூச்சை வயிற்றில் நிறுத்தி, பின் மெதுவாக பதினாறு மாத்திரைகாலம் இடது நாஸியால் மூச்சை வெளிவிடவேண்டும். மந்திரத்துடன் செய்தால் ஸகர்ப்பம்; இன்றேல் அகர்ப்பம்; அத்துடன் பார்வையோ மனதோ ஒரு லக்ஷ்யத்தில் நிறுத்தப் பட்டால் அது ஸலக்ஷ்யம். இன்றேல் அது அலக்ஷ்யம்.
 • மூலாதாரம், லிங்கம், நாபி, இருதயம், தாடைமூலம், நெற்றி முதலிய ஸ்தானங்களில், இரண்டு தளம், பதினாறு தளம், ஆயிரம் தளம், பன்னிரண்டு தளம், சதுரம் ஆகிய சக்கரங்களில்:
  • மூலாதாரத்தில் ‘வ’ முதல் ‘ஸ’ வரை உள்ள நாலெழுத்துக்களாகவும்,
  • ஸ்வாதிஷ்டானத்தில் ‘ப’ முதல் ‘ல’ வரை உள்ள ஆறு எழுத்துக்களாகவும்,
  • மணிபூரகத்தில்-நாபியில், ‘’ முதல் ‘ப’ வரை உள்ள பத்து எழுத்துக்களாகவும்,
  • இருதயத்தில்-அனாஹதத்தில், ‘க’ முதல் ‘ட்ட’ வரை உள்ள பன்னிரண்டு எழுத்துக்களாகவும்,
  • கழுத்து நடுவில் – விசுத்தியில், பதினாறு உயிரெழுத்துக்களாகவும்,
  • புருவமத்தியில் – ஆக்ஞையில், ஹம், க்ஷம் எனும் இரண்டெழுத்துக்களாகவும்,

என்று எல்லாத் தளங்களிலும் தத்வார்த்தத்துடன் கூடிய வர்ண (அக்ஷர) ரூபிணியாய் விளங்கும் தேவியை நமஸ்கரிக்கின்றேன்.

 • செந்தாமரையில் விற்றிருப்பவளாகவும், அதைப்போல் சிவந்த வண்ணமுடையவளாகவும், ஈசுவரனால் நியமிக்கப்பட்ட சின்னம் உடையவளாயும், தாமரைநூல் வடிவினளாயும், சூரியனையும், அக்னியையும், சந்திரனையும், முகமாகவும், இரு நகில்களாகவும் விளங்கும் தேவி எவனுடைய சித்தத்தில் ஒரு கணமேனும் விளங்குவாளோ அவன் முக்தனாவான்.
 • “என் இருப்பு அவளே; என் நடப்பு யாத்திரை; என் மதியே அவளுடைய தியானம். என் வார்த்தை அவளுடைய ஸ்துதி. நாம் ஸர்வாத்மாவான தேவன். எல்லாச் செயலும் உன் ஸ்தோத்திரமும் அர்ச்சனையும். நான் தேவியே, வேறல்லன், நான் பிரம்மமே அன்றிச் சோகிப்பவனல்லன். நான் ஸச்சிதானந்த ஸ்வரூபன்.” என்றிவ்வாறு தன்னைப் பற்றி தியானிக்க வேண்டும்.
 • முதல் பிரயானத்தில் (மூலாதாரத்திலிருந்து மேலே செல்லுகையில்) பிரகாசிப்பவளாயும், திரும்புகையில் அமிருதஸ்வரூபிணியாயும், (ஸுஷும்னையின்) உள்பாதையில் சஞ்சரிப்பவளும் ஆனந்த ரூபிணியுமான தேவியை வழிபடுகிறேன்.
 • பிறகு தனது பிரம்மரந்திரத்தில் குருவாகிய ஈசுவரனை தியானிக்க வேண்டும். மானசீக உபசாரங்களால் அவரை முறைப்படி பூஜிக்கவேண்டும். – குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மகேசுவரனாகிய தெய்வம். குருவே பரப்பிரம்மம். அந்த குருவிற்கு நமஸ்காரம்.- இந்த மந்திரத்தால் ஸாதகன் அடக்கிய மனதினனாய் துதிக்க வேண்டும்.
 • பிராம்மமுகூர்த்தத்தில் எழுந்து இதையெல்லாம் தியானித்து அனுஷ்டிக்கவேண்டும். இரவின் கடைசியாமத்தில் புத்திபடைத்தவன் வேதாப்பியாஸம் செய்யவேண்டும்.
 • பிறகு சிறிது நேரம் இஷ்டதெய்வத்தை தியானம் செய்யவேண்டும்.
 • இரவு ஐம்பத்தைந்து நாழிகை உஷத்காலம்; ஐம்பத்தேழு நாழிகை அருணோதயம்; ஐம்பத்தெட்டு நாழிகை பிராதக்காலம்; அதற்குமேல் சூரிய உதயம்.
 • மலவிஸர்ஜனத்துக்குப்பின் பன்னிரண்டு தடவையும், ஜலவிஸர் ஜனத்துக்குப்பின் நாலுதடவையும் இதற்குக் குறையாமல் வாய் கொப்பளிக்க வேண்டும்.
 • பின் ஆசமனம் செய்து பல் துலக்க வேண்டும்.
 • பின் ஸ்நானம்
 • ஸந்த்யாவந்தனம் காலையில் நக்ஷத்திரத்துடனும், மத்தியானத்தில் உச்சியில் சூரியனுடனும், மாலையில் சூரியனுடனும் கூடிய ஸந்தியை உபாசிக்கவேண்டும்.
 • உதயாஸ்தமனங்களுக்கு மேல் மூன்று நாழிகை வரை ஸந்தியோபாஸனம் செய்யலாம்.
 • காயத்ரீ ஆவாஹனத்துப்பிறகு பிரம்ம, விச்வாமித்ர, வசிஷ்ட சாப விமோக்ஷ விதியை அனுசரிக்கவேண்டும். பிரம்மாவை தியானிப்பதால் பிரம்மசாபம் நீங்கும்; விசுவாமித்ரரை தியானிப்பதால் விசுவாமித்ரசாபம் நீங்கும்; வசிஷ்டரை தியானிப்பதால் வசிஷ்டசாபம் நீங்கும்;
 • நல்ல புத்தியுள்ளவன் நூறு அக்ஷரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தை ஒருதடவை ஜபிக்கவேண்டும். காயத்ரீக்கு 24 அக்ஷரம். அதன்பின் ‘ஜாதவேதஸே’ எனப்பெயர் பெற்ற 44 அக்ஷர மந்திரம், அதன்பின் ‘த்ரயம்பகம்’ எனும் 32 அக்ஷரம் கோன்ட மந்திரத்தை ஜபித்தால் நூறு அக்ஷரம் கொண்ட காயத்ரியாகும்.

 காயத்ரியை ஒவ்வொரு பாதத்திலும் நிறுத்தி ஜபித்தால் அது பிரம்மஹத்தி பாவத்தையும் நாசம் செய்யும். எட்டுத்தடவை ஜபம் செய்ததும் நான்காவது (துரீய) பாதம் ஜபிக்கத் தக்கது. மோக்ஷத்தை விரும்பும் பிரம்மசாரியும் க்ருஹஸ்தனும் துரீய காயத்ரியை ஜபிக்கலாம்.  துரீய பாதம் : ‘பரோரஜஸே ஸாவதோம்.

 விதிப்படி 108 அல்லது 28 அல்லது அசக்தனாயின் 10 ஜபிக்க வேண்டும்.

 ஜபத்தின் முடிவில், (ஸுரபி) தேனு முத்திரை, ஞானமுத்திரை, சூர்ப்பமுத்திரை, கூர்ம முத்திரை, யோனிமுத்திரை, பங்கஜமுத்திரை, லிங்கமுத்திரை, நிர்வாணமுத்திரை ஆகிய எட்டையும் காட்டவேண்டும்.

 மாத்யாஹ்னிகத்தில் பிரம்மயக்ஞம் செய்யவேண்டும்.

 பிறகு வைச்வதேவமும் நித்ய சிராத்தமும் செய்யவேண்டும். நாள்தோறும் அதிதிகளுக்கு அன்னம் அளிக்கவேண்டும்.

 பகலின் ஐந்தாவது முஹூர்த்தத்தில் போஜனம் செய்யவேண்டும்.

 ஏழாவது எட்டாவது முஹூர்த்தங்களை இதிஹாச புராணங்களுடன் கழிக்கவேண்டும்.

 எட்டாவது முஹூர்த்தத்தில் வெளியே ஸஞ்சாரம் செய்துவிட்டு பிறகு ஸந்தியாவந்தனம் செய்யவேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.