சித்தர்கள் – தெ. பொ.மீனாட்சிசுந்தரனார்

#சித்தர்கள்:

தெ. பொ.மீனாட்சிசுந்தரனார், எம்.ஏ.பி.எல்., எம்.ஓ.எல். அவர்கள் கூறியது:

 

“கடவுளைக் காண முயல்கின்றவர்களை பக்தர்கள் என்றும், கண்டு தெளிந்தவர்களைச் சித்தர்கள் என்றும் #தேவாரம் பிரித்துக்கூறும். அனுபூதி ஞானம் பெற்றவர்களை மிஸ்ட்டிக்ஸ் (mystics) என்ற ஆங்கிலச் சொல் குறிக்கும். சித்தர் என்ற சொல்லும் அப்பொருளில் தமிழில் வழங்க்க் காண்கிறோம். சிதர்களுன் அனுபூதி அனுபவத்தில் வேற்றுமை இல்லை. அதைக் கூறும் வருணனியிலேயே வேற்றுமை உளது. ஆதலின் சித்தர்கள் எல்லாச் சமயத்திற்கும் அப்பாற்பட்ட சர்வ சமய சமரச சன்மார்க்கத்தினைப் பாடக் காண்கிறோம்.”……

 

“வாசி என்ற மூச்சினை அடக்கி ஆண்டு, யோக சக்தியினால் உடலில் உள்ள மூலாதாரம், கொப்பூழ், இதயம், இரைப்பையின் நடு, கழுத்து, தலைமுடி என்ற ஆறு இடங்களிலும் மனத்தை முறையாக நாட்டிக் குண்டலியை எழுப்பிப் பலப்பல அனுபவமும் வெற்றியும் கண்டு, அப்பால் உள்ள எல்லாம் ஆன பொருளில் நிலைத்துச் சித்தி பெறுபவரே சித்தர் எனும் வழக்கம் பரவியுள்ளது.”

 

“இவர்கள் எல்லாம் காயசித்தி பெற்றுச் சாவை வெல்ல முயன்று வெற்றி பெறுவதே வீடென்பர். இயம நியமாதி வழியில் ஒரு சிறிதும் தவறாது வாழ்ந்து, சட உணவைக் குறைத்துக் கொண்டு, நாடிகளைத் தூய்மையாக்குவதால் உடலிலுள்ல ஒவ்வோர் உயிரணுவையும் தூய்மையாக்கிப் பின்னர் மனன வழிபாட்டால் அணுவியக்கம் முற்றி, ஒளி வடிவம் என்னும் திவ்யவடிவம் வளர்ந்து வரும்போது, மாரிமாறி வரும் சவிகற்ப நிலையும் பின்னர் நிலையாக ஒளிரும் நிர்விகற்ப சகஜ நிலையும் தோன்ற உடலினை இவ்வாறு ஞான ஒளிமயமாக்கி, நாத தத்துவத்தோடு இணைத்து சாவினை வெல்வோம் என்பர் ரசேஸ்வரவாதிகளாம் நாத சித்தர்கள். இதுவே கால தகனமாகும். சடவுடலைச் சடம் நீக்கிப் படிப்படியாய்ச் சித்தாக்கு முறையில் அதனைப் பிரணவ தனுவாக்கியும், ஞான தனுவாக்கியும் பரத்தில் வாழ்வது மகேஸ்வர சித்தாகும்…”

 

“சித்தர்கள் உடல் வருத்தி வாடி உயர்நெறி சேர்வர்.  ஒளி ஒன்று தோன்றி மறையும்.  உலகத்துன்பம் பெரிதாய்த் தோன்றும். ஒளியைப் பிரிந்த நிலை மிக மிக வாட்டும். சித்தர்களது நினைவு வலுப்பெறப் பேரின்பப் பேரொளி விட்டு விட்டன்றி முற்ற முடியத் தொடர்ந்து தோன்றும். அப்பேரின்பத்தின் முடிவாக ஆழ்ந்து ஒன்றி விடுவர். “

———————நன்றி: அரு ராமனாதன் வெளியிட்ட “சித்தர் பாடல்கள்”—–

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.